சிதையாத சிற்பங்கள்
#பயணங்கள்_முடிவதில்லை....(IV) #சிதையாத_சிற்பங்கள்.... உயிர்வலியை உணர்ந்து திரும்பும் முன்... ஜானகி அம்மாவின் குரல், சின்ன சின்ன வண்ணக்குயில், என கொஞ்சி கூவும் வரிகள்... மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆட கண்டேன், மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கைப்போல் ஓட கண்டேன்... இன்பத்தின் எல்லையோ இல்லையே அந்தியும் வந்ததால் தொல்லையே... இந்த காதல் எத்தனை விசித்திரமானது, தினம் தேகம் தழுவும் தென்றலின் தீண்டல்கூட, புதிதாக உணர செய்யும்... பகல் பொழுதில் நினைவுகளோடும், இரவானால் கனவுகளோடும், பயணப்படும் காதலுக்கு, இரண்டிற்கும் இடைப்பட்ட அந்தி தொல்லை தருகிறதாம்...! எத்தனை முரண்களை இந்த காதல் கொண்டிருக்கிறது...! என எண்ணும் போதே... பாலசுப்பிரமணியன் ஆஹா ஆஹா என ஆரம்பித்து, காதலின் தீபமொன்று ஏற்றினாளே, என நெஞ்சில் ஏற்றிய தீபத்தின் ஒளியை உருவகிக்கிறார்.... என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன் பொன்னிலே பூவை அள்ளும் புன்னகை மின்னுதே கண்ணிலே காந்தம் வைத்த கவிதையைப் பாடுதே அன்பே இன்பம் சொல்ல வா.... முழுமையடையாத மனிதம், தன்னை அறிந்...