புதிர்
நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஒருவர், பெரியார் வளர்ப்பு மகளை மணந்தார்...? அது திராவிட கலாச்சாரத்துக்கு ஒத்து வரும், தமிழர் கலாச்சாரத்துக்கு ஒத்துவராது என்றார்...
#கலாச்சாரம் என்ற வார்த்தை தமிழா...?
கல் + #ஆச்சாரம்,
பிராமண அடிமைகள் தான் தமிழ்தேசியம் பேசுவோர் என நிருபித்துக்கொண்டதற்கு நன்றி.
தமிழர் வாழ்வியலில் திருமணமுறை கிடையாது. அகமணமுறைதான் நடைமுறையில் இருந்தது.
யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’
இந்த வரிகளின் அர்த்தம் தெரியுமா..?
தாழி என்பது அடக்கம் செய்யும் பானை,
பெண் தன் உணர்வுகளை உணர்ச்சிகளை அடக்கம் செய்ய பயன்பட்டதே தாழி/தாலி.
அது முதலில் தாளி எனும் பனை ஓலை கொண்டு கட்டப்பட்டது.
அதன் பிறகு தான் பொம்பளை பிள்ளையா அடக்க, ஒடுக்கமா இரு என்ற வார்த்தைகள் பிறந்தது.
பெண்களை,பாலின ஆதிக்கம் கொண்டு அடக்கியும், ஒடுக்கியும் வாழ்ந்திட செய்தது தான்,உங்கள் கலாச்சாரம்.
மணியம்மையை பெரியார் தத்தெடுத்து வளர்த்ததாகவோ, மகள் என்று அறிவித்ததை நிருபிக்க முடியுமா...?
பெரியார் - நாகம்மையாரின் மகள் பிறந்து 5 மாதத்தில் மரணமடைய, வேலூர் சுயமரியாதை இயக்கத்தொண்டர் கனகசபை மனைவி இறந்துவிட மகள் காந்திமதியுடன், சுயமரியாதை இயக்கப்போராட்டங்களில் கலந்து கொண்டார்.
மகவு காணமுடியாத நாகம்மை காந்திமதியை மகள் போல் பாவித்தார்.
மகவு காணமுடியாத நாகம்மையுடன் பெரியார் 35 வருடம் காதலோடு வாழ்ந்தார்.
மகவு/வாரிசு அவசியமெனில், மனைவி இருக்கின்ற போதே இன்னொரு திருமணமோ/ மனைவி இறந்தபின் இன்னொரு திருமணமோ செய்திருக்க முடியும்.
1933ல் மனைவி இறந்த பிறகு 15 ஆண்டுகள் துணையற்ற ஒருவருக்கு, கல்லீரல் இரக்கம் கண்டு, நோய் வாய்ப்பட்ட சூழலில் துணை அவசியமானதெனில், அதற்கு தன் சொத்துக்களை குறிவைக்கும், குடும்பத்தினர்களும், இயக்கத்தில் சில சுயநலவாதிகளும் இருப்பதை அறிந்தே தனக்கு பிறகும் இயக்கத்தை வழிநடத்த வேண்டிய தேவைக்காக,
அன்றைய சட்டப்படி பெண்ணின் திருமண வயது 14 ஆக இருந்த சூழலில்,குழந்தைகள் திருமணம் நடைபெற்ற காலத்தில், பெண் தனித்து வாழ முடியாத சூழலில்,
26 வயதுவரை திருமணம் செய்யாமல், தனித்து வாழும் சுகந்திரம் பெற்று, சுயமரியாதை இயக்க போராட்ட களத்திலும்,விடுதலை,குடியரசு என எழுத்துக்களிலும் சுயமரியாதையுடன், சுதந்திர எண்ணத்துடன் வாழ்ந்த காந்திமதியை தலைவராக்க தேர்ந்தெடுத்தார்.
ஆனால் பெண்கள் சொத்துரிமை பெறாத சூழலில், அன்றைய அறக்கட்டளைகள் சட்டப்படி தலைவராக்க வேண்டிய நிர்பந்தத்திற்காக காந்திமதியை திருமணம் செய்து கொண்டார்.
அந்த காந்திமதி தான் மணியம்மை.
இந்த பெற்ற மகளை திருமணம் செய்த பிரம்மனை பற்றி பேசுவோமா...?
Comments
Post a Comment