Posts

Showing posts from May, 2023

Male Gaze -01

  #Malegaze .. கடந்த வாரம் உச்சநீதிமன்றம், விவாகரத்து தொடர்பான வழங்கு ஒன்றில், பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களில்தான் நடக்கின்றன, என கருத்து தெரிவித்திருந்தது...! இது தொடர்பாக நண்பர் தொடர்புகொண்டு நிறைய கேள்விகளை எழுப்பினார்...? மிக நீண்ட விவாதங்களில், என் பதில்களை ஒரு பதிவாக பதிவிடுகிறேன்.... விவாகரத்துகள் பெரும்பாலும் காதல் திருமணங்களில் நடப்பதாக கூறிய நீதிமன்றம், காதல் என்றால் என்ன..? என்பதற்கும் விளக்கம் தந்திருக்கலாம்... அதை ஏனோ எந்த நீதிபதிகளும் கூறுவதில்லை... இந்த சமூகத்தில், காதல் சார்ந்த ஒருவித பதற்றத்தை நீதிமன்றத்தின் இக்கருத்துக்கள் ஆழவிதைத்து செல்லும். இந்த நாகரீக மானுட சமூகத்தில்.., முதலில் தோன்றிய பாகுபாடு எதுவெனில், பாலினபாகுபாடு தான்.... உலகில் முதலில் தோன்றிய சாதி எதுவெனில், அது பெண்சாதி... ஆண்மை, பெண்மை என்ற "மை" விகுதிக்குள் அடைக்கப்பட்ட போதே அடிமைத்தனம் தொடங்கிவிட்டது. வேட்டை சமூகமாக இருந்தவரை, துணையென்ற சார்பு வாழ்க்கை அவசியமற்றதாகிப்போனது. தன் உணவை தானே தேடிக்கொண்டு, தன் தேவைகளை தானே தேடிக்கொண்டு, நிவர்த்தி செய்யும் வரை பாகுப...

இளங்கோவடிகள்

 #சிலப்பதிகாரமும்_கண்ணகியும்  #ஒரு_ஆய்வியல்  #தொடர்ச்சி... காவிய நாயகர்களையும், புராண நாயகர்களையும்,காப்பிய நாயகர்களையும் கொண்டாடியே, இன்று திரைப்பட நாயகர்களை கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோம்....  எகிப்திய இசிஸ்(Isis) நம்பிக்கை, நாவாய் வணிகம் செய்த சேரள நாய்கன்கள் மூலம் பரவி, சாத்து வணிகம் செய்த சாத்துவன்கள் மூலம் வளர்ந்து,  ஒரு சாத்துவணிகனும், ஒரு சேர அரச வாழ்வை துறந்த துறவியும் இணைந்து, புணைவுகளால் கண்ணகி என்றார்கள்... நமது கொண்டாட்ட மனநிலை, சில அடிப்படை கேள்விகளை கூட கேட்க தவறவிட்டதால், ஒரு காப்பியம், வரலாறாகி போகின்றது. சில கேள்விகள்,   கண்ணகி - மாதவி - கோவலன் - மாநாய்கன் - மாசாத்துவன் என அத்தனையும் தெரிந்த, சீத்தலை சாத்தனார் ஏன் சிலப்பதிகாரத்தை இயற்றாமல், மணிமேகலை இயற்றினார்...? புகார், மதுரை, வஞ்சி என சோழ,பாண்டிய, சேர தொடர்பை வகைப்படுத்தி இளங்கோவடிகளுக்கு கூறிய மதுரை கூல வாணிகர் சாத்தனார்., ஏன் மணிமேகலையில் பாண்டிய நாட்டை தவிர்க்கிறார்...? மாதவியின் அரங்கேற்று காதை தொடங்கி, பாண்டிய நாட்டுக்கே வராத மாதவியின் அத்தனை நிகழ்வுகளையும், சிலப்பதிகாரம் விவர...

சிலப்பதிகாரம்

 #சிலப்பதிகாரமும்_கண்ணகியும்... #ஒரு_ஆய்வியல் #தொடர்ச்சி சென்ற பதிவில்,  சேரள - பாண்டிய வாணிப தொடர்பால், நாய்கன்களின் நம்பிக்கைக்குரிய எகிப்திய இசிஸ்(Isis) தெய்வம்,  சாத்துவன்கள் மூலம் சேரள - பாண்டிய நாடுகளுக்குள் பரவிய நம்பிக்கைகள், அதை மதுரை கூல சாத்து வாணிகர் சீத்தலை சாத்தனார்(சாத்து +அனார்) மூலம் சேர இளவல் இளங்கோவடிகள் அறிய காப்பியமானதை அறிந்தோம்.  இதில் சோழநாடு குறிப்பிடப்பட வேண்டிய அவசியம் யாது...? சேரன் செங்குட்டுவன், இளவல் இளங்கோவடிகளின் தாயார் மணங்கிள்ளி என்ற நலங்கிள்ளி நற்சோனை சோழநாட்டு இளவரசி ஆவாள். சோழ மன்னனும் தனது தாய்வழி தாத்தாவுமான காரியாற்று துஞ்சிய நெடுங்கிள்ளியின் மறைவுக்குப் பின்னர், சோழ அரியணையை கைப்பற்றுவதில் வாரிசுகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது.  அங்கு சென்ற செங்குட்டுவன், சோழ வாரிசுகள் #சேத்சென்னி உள்பட அவனது சகோதரர்கள் 9 பேருடன் போர் தொடுத்து, நேரிவாயில் என்ற இடத்தில் வென்றான், பின்னர், தனது மாமன் ராஜசூயம் வேட்டநற்கிள்ளிக்கு அரியணையை பெற்றுத் தந்தான். [ இந்த சேத் என்ற பெயர் இசிஸ்(Isis) புராண கதையில், இசிஸின் சகோதரனும், கணவருமான ஓசிரிஸ்...

கண்ணகி காதல்

  #சிலப்பதிகாரமும்_கண்ணகியும் ... #ஒரு_ஆய்வியல் ... ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டோம்.... தேனி மாவட்ட கூடலூர் வனப்பகுதியில், சேரளமாவட்ட இடுக்கி வனப்பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். சித்திரா பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் நிகழ்வுக்கு ஒன்று கூடுவோம் என செட்டியார் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.... கண்ணகிக்கும் சாதி சாயம் பூச வேண்டிய அவசியம் ஏன் வந்தது...? மாநாய்கன், மாசாத்துவன் இருவருமே வணிகர்கள் என்ற குறிப்புகள் மூலம் வணிகர்கள் என்ற காரணத்திற்காக செட்டியார்கள் சாதி சாயம் பூசுகின்றனர். செட்டியார்கள் மட்டுமா வாணிபம் செய்தார்கள்...? #ஸ்ரேஸ்தியார் என்ற ஆரிய சமஸ்கிருத சொல் (செல்வம் உடையவர்) மறுவி செட்டியார் ஆனது. செல்வம் படைத்தவர் என்பதே செட்டியாரின் பொருளே தவிர, வாணிபர் என்று அது பொருள் தராது. பக்தி இலக்கியங்களின் வருகைக்கு முன், சைவ,வைணவ ஆதிக்கங்களுக்கு முன், கொல்லாமையை வலியுறுத்திய பௌத்த, சமண மதத்தவர்களே, பண்டைய தமிழகத்தில் வாணிபத்தில் ஈடுபட்டார்கள். அரசர்களோ, படையெடுப்புகளோ செய்ய முடியாத, மதங்களையும், அதன் நம்பிக்கைகளையும்...

அரசியல் வரலாறு

 #சசிகலா_ஆளுமையா...? #தமிழகமும்_தலையெழுத்தும்...? #துரோகமும்_வலிமையும்... (...பெரிய பதிவு பொறுமையாக படிக்கவும்...) சிற்பத்தை கொண்டாடுபவர்களுக்கு சிற்பிகளை கொண்டாடுவதில்லை...! ஜெயலலிதா என்ற ஆளுமையை கொண்டாடுபவர்களுக்கு, அந்த ஆளுமைக்கு அஸ்திவாரம் #சசிகலா என்பதை புரியவைக்க வரலாறு அவசியம்..! நாவலர், MGR போன்றவர்களின் சமூகநீதி,போன்ற திராவிட சித்தாந்தங்களால் மேற்கு மண்டலம் அஇஅதிமுக கோட்டையானது என கதை சொல்பவர்கள்களுக்கு இயல்பாகவே சாதியபற்று வேரூன்றியது மேற்கு மண்டலத்தில்,  இன்னும் தெளிவாக கூறினால், ஈரோட்டில் பிறந்தாலும் பெரியாரை கொண்டாடதவர்கள் மேற்கு மண்டலத்தவர், அண்ணா, கலைஞர், MGR, சம்பத்,நாவலர் என்ற எந்த திராவிட சித்தாந்தவாதிகளையும் ஆதரிப்பதுமில்லை கொண்டாடுவதுமில்லை மேற்கு மண்டலத்தில், ஆனால் அஇஅதிமுக ஆதரவு மனநிலை எப்படி வந்தது, அதற்கு காரணம் K.A.மதியழகன்.மற்றும் அவருடைய சாதி... K.A.மதியழகனின் அஇஅதிமுக கட்சிதாவலுக்கு பிறகே மேற்கு மண்டலத்தில் அசுர வளர்ச்சி கண்டது.. அந்த சாதிய எண்ண ஓட்டங்களின் நீட்சியே தற்போதைய முதல்வர் ஆதரவு மனநிலை... ஆனால் அஇஅதிமுக துவங்கிய காலந்தொட்டு (1972), முதல் ...

மனுவும் மனிதமும்..

 #மநு_எனும்_அநீதி... இன்று காலை ஒரு வலதுசாரி நண்பரோடான உரையாடல், பார்ப்பனரல்லாத உயர்பிரிவை சார்ந்தவர்... மநு தர்மம் தான் நடைமுறையில் இல்லையே, இப்போது அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் தானே நடைமுறையில் உள்ளது. திடீரென திருமாவளவன் இந்து பெண்களை விபச்சாரிகள் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா...?  மநுவில் இருந்தாலும் நடைமுறையில் இல்லையே... இந்து மதம் பெண்களை தெய்வமாக மதிக்கிறது, நதிகள்,பூமி, ஏன் இந்தியாவையே தாய் நாடுதான் என்கிறோம்...இது நடைமுறையில் இல்லாத மநுவை சுட்டிக்காட்டி பேசியதை கண்டிக்க வேண்டியவர்கள் ஆதரிக்கிறார்கள்... நான் பதிலளிக்க தொடங்கினேன்,  👉 மநு நடைமுறையில் இல்லை, அரசியலமைப்பு சட்டம் தான் நடைமுறையில் உள்ளது சரிதானே, அரசியலமைப்பு சட்டம் என்று மட்டும் சுருக்கிவிட்டால் எப்படி,  இந்து திருமண சட்டம் 1955,  இந்து விதவைகள் மறுமணச்சட்டம் 1856,  சதி ஒழிப்புச் சட்டம் 1827,  இந்து வாரிசுரிமைச் சட்டம் 1937,1956,1987,2005, என எத்தனை திருத்தம், இவைகளும் இவைகளில் ஏற்பட்ட திருத்தங்களும் யார் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை.. அரசியலமைப்பை வைத்து பெண்கள் பாதுக...

Male Gaze

 #பாச_உணர்ச்சியா #பாலுணர்ச்சியா, பெண்ணிய ஆதரவாளராக பேசினாய், காஞ்சிபுரத்தில் நடந்த கொலை, மற்றும் சில திருமணத்திற்கு பிந்தைய காதல் கொலை குறித்த பல பத்திரிக்கை தகவலை சேகரித்து, பெண்களை குற்றம் கூறி, இதைத்தான் பெண்ணை அடக்கி வைக்கணும், பெண்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என பெரியவர்கள் கூறினார்கள்... தொடர்பு கொண்டது முகம் தெரியாத, பெயர் கூற துணிவற்ற மூடன்...              🌹🌹🌹🌻🌹🌹🌹🌻🌹🌹🌹 அட அரைவேக்காடே,              நான் பெண்ணிய ஆதரவாளனோ, ஆணிய ஆதரவாளனோ என உன் கற்பனைக்கு என்னை உருமாற்றாதே...  நான் எந்த #இய ஆதரவாளனும் இல்லை, நான் இயங்களை எதிர்ப்பவன்...இயல்பை நேசிப்பவன்... நாகரீக வளர்ச்சிக்கு பின்னும் விலங்கு தோலுரிக்க மறந்த பல மிருகங்களின் கூடாரம் தான் மனித சமூகம்... ஏன் பெண், பெண் என இத்தனை வன்மம்...அங்கே பெண் மட்டும் தான் தவறி நிற்கிறாளா...?  கட்டிய கணவனுக்கு துரோகம் என புலம்புகிறாய்...  ஏன் கட்டி வைத்து அவள் உணர்வை சிறைபடுத்திய கணவன் குற்றவாளி இல்லையா...? கணவன் தான் முதலில் கட்டினானா....? பெண்ணின் ...

Vishnu...

 #யார்_அந்த_விஷ்ணு...? #எது_ஆன்மீகம் என்ற ஆறு பதிவுகளுக்கு காரணமான சகோதரி, விஷ்ணு யார் என்கிறார்... #மநுவும்_பெண்களும் பதிவும் தொடரவில்லை... சனிக்கிழமை தவறாமல் பெருமாள் கோவிலுக்கு போவதை வழக்கமாக கொண்டவர், எது ஆன்மீகம் என்ற பதிவுக்கு பின் ராமாயணம், கந்த புராணத்தை களவாடி தன் திருத்தங்களை(மநுவை) புகுத்தி ராமாயணம், என்றதை தெரிந்தேன்... கிருஷ்ணர் என்பது வியாசர் தனக்கு தானே சூட்டிய பெயர்(கிருஷ்ண த்வைபாயனர்)... பெருமாளை வணங்கலாமா...? யார் அந்த விஷ்ணு...? தொடர்ந்து கேட்கிறார்... பதில் சொல்வோமா இன்று..., இந்திய வரலாறு, இந்தியா ஒரு திராவிட நாடென்கிறது...  முதலில் கைபர் போலன் கணவாய் வழியே வந்த (ஆரியர் - யூதர்) பார்ப்பனர்கள் தங்களை நிலைநிறுத்த உருவாக்கிய புணைவுகளே புராணங்கள்...  அதில் தன்னை எல்லா நிலையிலும் மேம்பட்டவனாக காட்டிக்கொள்ள உருவாக்கியது வேதங்கள் என்ற பெயரில் தங்களை கடவுளின் தூதுவர்களாக காட்சிப்படுத்தினர்.... அவர்கள் நுழைந்த கணவாய் சரஸ்வதி நதியுடையது, சரஸ்வதி நதிக்கு பிரம்மபுத்திரா என்ற பெயரும் உண்டு... எனவே அவர்கள் அவர்களை பிரம்மனின் புத்திரர்களாக(மகன்களாக) காட்சிப்படுத்தி ...