அரசியல் வரலாறு

 #சசிகலா_ஆளுமையா...?


#தமிழகமும்_தலையெழுத்தும்...?


#துரோகமும்_வலிமையும்...


(...பெரிய பதிவு பொறுமையாக படிக்கவும்...)


சிற்பத்தை கொண்டாடுபவர்களுக்கு சிற்பிகளை கொண்டாடுவதில்லை...!


ஜெயலலிதா என்ற ஆளுமையை கொண்டாடுபவர்களுக்கு, அந்த ஆளுமைக்கு அஸ்திவாரம் #சசிகலா என்பதை புரியவைக்க வரலாறு அவசியம்..!


நாவலர், MGR போன்றவர்களின் சமூகநீதி,போன்ற திராவிட சித்தாந்தங்களால் மேற்கு மண்டலம் அஇஅதிமுக கோட்டையானது என கதை சொல்பவர்கள்களுக்கு இயல்பாகவே சாதியபற்று வேரூன்றியது மேற்கு மண்டலத்தில், 


இன்னும் தெளிவாக கூறினால், ஈரோட்டில் பிறந்தாலும் பெரியாரை கொண்டாடதவர்கள் மேற்கு மண்டலத்தவர், அண்ணா, கலைஞர், MGR, சம்பத்,நாவலர் என்ற எந்த திராவிட சித்தாந்தவாதிகளையும் ஆதரிப்பதுமில்லை கொண்டாடுவதுமில்லை மேற்கு மண்டலத்தில், ஆனால் அஇஅதிமுக ஆதரவு மனநிலை எப்படி வந்தது, அதற்கு காரணம் K.A.மதியழகன்.மற்றும் அவருடைய சாதி...


K.A.மதியழகனின் அஇஅதிமுக கட்சிதாவலுக்கு பிறகே மேற்கு மண்டலத்தில் அசுர வளர்ச்சி கண்டது.. அந்த சாதிய எண்ண ஓட்டங்களின் நீட்சியே தற்போதைய முதல்வர் ஆதரவு மனநிலை...


ஆனால் அஇஅதிமுக துவங்கிய காலந்தொட்டு (1972), முதல் தேர்தல் 1973ல் நடைபெற்ற திண்டுக்கல் தேர்தல் தொடங்கி பல்வேறு இக்கட்டான சூழ்நிலையிலும் அஇஅதிமுகவின் எந்த செயலையும் கண்மூடித்தனமாக ஆதரித்தவர்கள் முக்குலத்தோர்... 


அதற்கு காரணமும் சாண்டோ சின்னப்ப தேவருடன் மகோரா கொண்ட நட்பு, சாண்டோ சின்னப்ப தேவரே தொடர்ச்சியாக மகோரா(MGR)வை திரைபடங்கள் மூலம் அதிக படங்களில் நடிக்க செய்து புகழ் பெற வைத்தவர், மகோரா திமுகவை விட்டு பிரிந்ததும் அதிகமான ஆதரவும் தேவர் சமூகத்தவரால் தான், திண்டுக்கல் மக்களவை தொகுதியின் அஇஅதிமுகவின் முதல் வேட்பாளரே மாயத்தேவர் தான்...


அது எப்படி..? 1970ல் நடந்த விவசாய படுகொலைகள் தான், மேற்கு மண்டலத்தில் திமுக வெறுப்பை விதைத்தது...அதை MGR சாதகமாக பயன்படுத்தினார் என்றால்,


தெளிவாக கூறுகிறேன்...


1970ம் ஆண்டு ஒரு யூனிட் மின்சாரம் 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தப்பட்டது..இதை எதிர்த்து தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் நாராயணசாமி நாயுடு தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்... 


போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு போராட்ட குழுவினருடன் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது... எதற்கும் உடன்படாத போராட்ட குழுவினர் போராட்டங்களை முன்னெடுக்க காவல்துறை மூலம் அடக்குமுறையில் மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர்...


1.ஆயி கவுண்டர், 33, 19.06.1970, பெருமாநல்லூர், கோவை மாவட்டம்.


2. மாரப்பக் கவுண்டர், 37, 19.06.1970, பெருமாநல்லூர், கோவை மாவட்டம்.


3. இராமசாமி, 25, 19.06.1970, பெருமாநல்லூர், கோவை மாவட்டம்.


இவர்கள் இறப்பிற்கு பிறகு அடிபணிந்த அரசு ஒரு யூனிட் 10 பைசா என்பதை 9 பைசாவாக குறைத்தது...


[…இந்த விவசாயிகள் இறப்பு தான் மேற்கு மண்டலத்தில் திமுக வெறுப்பை விதைத்தது என்ற கற்பனைகளை கொஞ்சம் ஒதுக்கிவிடுங்கள்...]


விவசாயிகள் போராட்டம் தமிழகமெங்கும் நடந்த போது கோவையில் மட்டும் கலவரமானது எப்படி...? 


மூன்று விவசாயிகளின் மரணத்திற்கு அன்றைய முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்றால்,அந்த வெறுப்பு MGRக்கு எப்படி சாதகமாகும்...


1970ல் அஇஅதிமுக என்ற கட்சி இருந்ததா, MGR திமுக சட்டமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, திமுக பொருளாளர், தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு துறை துணைத்தலைவர்..போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தியவர்களுள் முக்கியமானவர்...


ஏன் பழி கருணாநிதி மீது மட்டும்...


சரி அந்த போராட்டத்தின் பிறகு 1971ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 203 தொகுதியில் போட்டியிட்ட திமுக 184 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது...அப்போதும் MGR திமுக சட்டமன்ற உறுப்பினர் தான்.. அதே சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர்தான்...


01.01.1972ல் மறுபடியும் மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட் 09 பைசாவில் இருந்து 12 பைசாவாக உயர்த்தப்பட்டது..அதை எதிர்த்தும் விவசாயிகள் போராடி உயிரிழந்தனர்..


01.ஆறுமுகம், 25, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்


02.முத்துச்சாமி, 21, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்


03. சாந்தமூர்த்தி, 20, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்


04.மணி, 30, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்


05.இராமசாமி (முத்து), 32, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்


06.பிச்சைமுத்து, 21, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்


07. கோவிந்தராஜுலு, 16, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்


08. விவேகானந்தன், 35, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்


09. இராமசாமி, 23, 05.07.1972, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்


10. முத்துக்குமாரசாமி, 22, 05.07.1972, அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா


11. சுப்பையன், 32, 05.07.1972, அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா


12. கந்தசாமி நாயக்கர், 55, 05.07.1972, பழைய அப்பநேரி, கோவில்பட்டி தாலுகா


13. சீனிவாசன், 18, 05.07.1972, சாத்தூர் தாலுகா, இராமநாதபுரம் ஜில்லா


14. கந்தசாமிரெட்டியார், 42, 05.07.1972 அருப்புக்கோட்டை, சாத்தூர் தாலுகா


15. நம்மாழ்வார், 20, 05.07.1972 சூலக்கரை, சாத்தூர் தாலுகா


16. கிருஷ்ணசாமி நாயக்கர், கோவை சிறையில்.


17. பெரியகருப்பன், திருச்சி சிறையில்.


இன்னும் ஏராளமான பேர் கைது செய்யப்பட்டனர்.இதற்கு எதிராகவாவது கட்சியைவிட்டு வெளியேறி MGR தொடங்கினாரா என்றால் இல்லை..


மார்ச் 1972ல் பன்னிரன்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 1972ல் கோரிக்கையை நிறைவேற்ற விவசாயிகள் கெடு விதித்த பேச்சு வார்த்தை குழுவிலும் இடம் பிடித்திருக்கிறார். இறுதியில் 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. 


தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்.


இந்த அத்தனை பழியையும் கருணாநிதி என்ற ஒருவர் மட்டும் சுமக்கிறார், ஏன்...?


1969ல் அண்ணா மறைவுக்கு பிறகு, நாவலர் தற்காலிக முதல்வர் ஆகிறார். ஆனால் கருணாநிதியை முதல்வராக்க MGR முயற்சிக்கிறார். கருணாநிதியை சட்டமன்ற தலைவராக்க பெரியார் கூறியும் புறந்தள்ளிய நாவலர், MGR கருணாநிதியை முதல்வராக்கியதும் அமைச்சரவையை விட்டு வெளியேறிய நாவலர், திமுகவில் அண்ணாவிற்கு அடுத்த பொது செயலாளராகிறார்.


அண்ணாவே தலைவர் என்ற பதவி கட்சியில் இல்லை..என்றும் என் தலைவர் பெரியார் தான் என்று,பொது செயலாளராக இருந்தார்..ஆனால் கட்சியில் தலைவர் என்ற பதவி கருணாநிதிக்காக MGR உருவாக்கியது..கட்சியின் முதல் தலைவர் கருணாநிதி தான்..MGR பொருளாளர் ஆகிறார்..


விவசாயிகளின் 1970,72 போராட்ட உயிரிழப்புகளின் ஒட்டுமொத்த பழியையும் கருணாநிதி என்ற ஒருவரே சுமக்கிறார்.. அன்றைய தின திமுக சட்டமன்ற உறுப்பினரும், சிறுசேமிப்பு துறை துணை தலைவருமான மகோரா(MGR) புனிதராக்கப்படுகிறார்...


விவசாயிகளின் கோரிக்கைக்காக கட்சியை விட்டோ,பதவியை விட்டோ வெளியேறாதவர், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவில் அதிகாரம் பெற்ற கட்சி பொருளாளர், பொதுகூட்ட மேடைகளில் கணக்கு கேட்டார், 


அதற்காக பொதுக்குழு கூடி MGRக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி தற்காலிக நீக்கம் பொது செயலாளர் நாவலரால் செய்யப்படுகிறார்.


முதலில் 1971ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், ம கோ ரா(MGR)வை சுகாதாரத்துறை அமைச்சராக்க விரும்பினார்,கருணாநிதி. ஆனால் கட்சியில் பலரும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருப்பவரை அமைச்சராக்குவது தவறான முடிவென கூற, மகோரா தனக்கு மந்திரி பதவி கிடைக்காத விரக்தியில் அப்போதிருந்தே திமுகவுக்கு எதிரான மனநிலை கொண்டிருந்தார்..


இந்நிலையில் மத்திய அரசுடனான மோதல் போக்கால் தமிழகத்திற்கான மானியம் முழுமையும் மத்திய அரசு ரத்து செய்தது.நிதி நெருக்கடியில் மாநில அரசு மதுவிலக்கில் தளர்வு ஏற்படுத்த கருணாநிதி எண்ணினார். அதனை தனக்கு சாதகமாக்க முயற்சித்தார் MGR. 


1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி மதுவிலக்கு ஒழிப்பை நடைமுறைப்படுத்தியது கருணாநிதி தலைமையிலான அரசு. தமிழக அரசியலில் இன்று நள்ளிரவு பரபரப்புகளை கிளப்புகிற ‘சமாதி’ தர்மயுத்தங்களுக்கு பிள்ளையார் சுழியும் போட்டார் எம்ஜிஆர்.


1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தமது சத்யா ஸ்டுடியோ பணியாளர்களை அழைத்துக் கொண்டு அண்ணா நினைவிடத்துக்கு சென்றார் எம்ஜிஆர். அங்கு மதுவை ஒருபோதும் அருந்தமாட்டோம் என்கிற உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆம் தமிழகத்தின் முதலாவது தர்ம யுத்தம் இது.


அதன்பிறகு தொடர்ச்சியாக கருணாநிதிக்கு எதிராகவே செயல்பட தொடங்கினார் MGR. அன்றும் மத்திய அரசு MGRக்கு துணை நின்றது,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம். கல்யாணசுந்தரமும் டெல்லிக்கும் எம்ஜிஆருக்குமான தூதராக இருந்தார். அப்போது ஊடகங்களில் திமுக ஆட்சியை கலைக்க விரும்பும் மூன்று கருப்பு ஆடுகள் என்ற விவாதம் பெரும் பேசுபொருளானது...


08-10-1972 காஞ்சிபுரம் திருக்கழுக்குன்றத்தில் MGR திமுகவையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்த பொதுகூட்டம், 


"‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.

தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். 


உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். 


நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. 


உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!

உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! 


நான் மறுக்கவில்லை. 

நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! 


இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். 


என்று பேசியதோடு சொத்து கணக்கை காட்ட வேண்டுமென பேசினார்..


கவிஞர் கண்ணதாசனை குறிப்பிட்ட MGR, கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். என பேசினார்...


செயற்குழு உறுப்பினர்கள் MGR மீது நடவடிக்கை எடுக்கக்கூறி கடிதம் எழுதினர்.அக்டோபர் 10 ஆம் தேதி திமுகவின் செயற்குழுக் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். எம்ஜிஆர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்செழியன் உள்ளிட்ட 26 பேர் கையெழுத்திட்ட தீர்மானம் கொண்டுவரப்பட்டது.


எம்ஜிஆர் தமது செயல்களுக்கு வருத்தம் தெரிவித்தால் அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும் எனவும் கருணாநிதி கூறியிருந்தார். தந்தை பெரியாரும் கருணாநிதி- எம்ஜிஆர் பிளவை சரி செய்ய முயற்சித்தார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை.


1972 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடியது. அப்பொதுக்குழுவில் 310 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் 277 பேர் எம்ஜிஆரை திமுகவில் இருந்து நீக்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து திமுகவில் இருந்து எம்ஜிஆர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார். 


இதே காலத்தில் எம்ஜிஆர் மீதான நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களும் தமிழகத்தில் நடைபெற்றன. 


எம்ஜிஆரை ஏன் நீக்கினோம் என்கிற விளக்கப் பொதுக்கூட்டங்களையும் திமுக நடத்தியது.


1972 அக்டோபர் 16 ஆம் தேதி உடுமலைப்பேட்டை இஸ்மாயில் என்ற தொண்டர் எம்ஜிஆர் வாழ்க என முழங்கியபடி தீக்குளித்தார். இத்தீக்குளிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் எம்ஜிஆர் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது. 


இதன் தொடர்ச்சியாக 1972 அக்டோபர் 17 ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தனிக் கட்சியை எம்ஜிஆர் தொடங்குவதாக அறிவித்தார்.


08-ம் தேதி பொதுகூட்டம்

10-ம் தேதி தற்காலிக நீக்கம்

14-ம் தேதி நிரந்தர நீக்கம்

17-ம் தேதி தனிக்கட்சி


10 நாட்களுக்குள் தனிக்கட்சி, ஒவ்வொரு திமுக மாவட்ட செயலாளர், என பலரும் அஇஅதிமுகவிற்குள் புகுந்தனர்..அப்போது கட்சி தாவல் தடைசட்டம் இல்லை. MGR ஓடு இன்னும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் அஇஅதிமுக உறுப்பினர்களாக சட்டசபையில் இருந்தனர்.


அவைத்தலைவர் K.A.மதியழகனும், ஸ்ரீநிவாசனும் MGR ஆதரவால் அரசுக்கு எதிராகவே செயல்பட்டனர்.


எந்த நாவலர் MGRக்கு எதிராக தீர்மானம் போட்டாரோ அந்த நாவலர் 1975 வரை திமுகவிலிருந்து பின்னர் விலகி மக்கள் திராவிட முன்னேற்ற கழகம் என்று கட்சியை தொடங்கி 1977 தேர்தலுக்கு முன் அஇஅதிமுகவில் இணைந்து கொண்டார்.


K.A.மதியழகன் MGR ஆதரவு நிலைபாட்டை கொண்டவர்.1971ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அவரது எம். ஜி. ஆர் ஆதரவினைக் கருத்தில்கொண்டு ஒரே நேரத்தில் அவைத்தலைவரான அவரும் அப்போதைய துணைத்தலைவர் சீனிவாசனும் வீற்றிருந்து எதிர்மறையான ஆணைகளைப் பிறப்பித்தது பேரவை வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.


MGR திமுகவை விட்டு நீக்கப்பட்டதும் அவருடன் வெளியேறியவர்களில் முக்கியமானவர் K.A.மதியழகன்.


ஐம்பெரும் தலைவர்களில் சம்பத் அவர்கள் அண்ணா காலத்திலேயே கட்சியை விட்டு வெளியேறிவிட்டார், 


நாவலர்,மதியழகன் MGR ஆதரவு நிலைபாட்டோடு அஇஅதிமுகவில் பயணம்..


N.V.நடராஜன் 1967ல் திமுக வென்று ஆட்சியமைத்த போது அண்ணாவின் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 1975ல் இறக்கும் வரை அப்பதவியில் நீடித்தார். 


அவரது மகன் என். வி. என். சோமு பிற்காலத்தில் திமுக சார்பாக இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


N.V.N.சோமு திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக வட சென்னை தொகுதியில் இருந்து, 1984 மற்றும் 1996 தேர்தலில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தி. மு. க தலைவர் என். வி. நடராஜன் மகனான என். வி. என். சோமுவிற்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போது ஒரு உலங்கூர்தி விபத்தில், 14 நவம்பர் 1997 அன்று இறந்தார்.அவரது மகள், என். எஸ். கனிமொழி, தி. மு. க சார்பாக வேட்பாளராக போட்டியிட்டார்.


ஐம்பெரும் தலைவர்களுக்கு கருணாநிதி என்ன செய்தார் என கேட்பவர்களிடம் பதில் மேலே இருக்கிறது. 


கருணாநிதி ஐம்பெரும் தலைவர்களில் இல்லையே அவர் எப்படி தலைவர் ஆனார்,என்பதை MGR இடம் கேட்க வேண்டும்.


ஐம்பெரும் தலைவர் இல்லாவிடினும் கட்சி துவக்கவிழா அழைப்பிதழில் கடைசி பெயராவது கருணாநிதியுடையது, அழைப்பிதழில் கூட இடம் பெறாத MGR எப்படி பொருளாளரானார் என யாரிடம் கேட்க...?


சரி விவசாயிகள் விடயத்திற்கு வருவோம்...திமுக ஆட்சியில் 1970,72 விவசாய போராட்டங்களும் உயிரிழப்புகள் நிகழ்ந்தாலும் கோரிக்கைகள் பாதியாவது நிறைவேறின...1977 க்கு பிறகு சத்தியவாணி முத்து,நாவலர்,மதியழகன்,மாதவன் போன்ற பல திமுக தலைவர்கள் அஇஅதிமுக சார்பாக போட்டியிட்டும் 130 கூட்டணியோடு 144 சட்டமன்ற உறுப்பினர்களோடு ஆட்சி அமைத்த MGR ஆட்சி காலத்தில் விவசாய போராட்டங்கள் இல்லையா..? விவசாயிகள் கொல்லப்படவில்லையா...?


1978ல் இதே மின்சார பிரச்சணைக்காக


1.நாச்சிமுத்துக் கவுண்டர், 50, 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்


02.வி.சுப்ரமணியன், 30, 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்


03. பி.சின்னசாமி கவுண்டர், 51, 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்


04. கே.குப்புசாமி, 29, 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்


05. பி.கிருஷ்ணமூர்த்தி, 25, 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்


06. பி.மாணிக்க கவுண்டர், 52 09.04.1978, வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்


07. ஆரோக்கியசாமி, 50, 10.04.1978, நொச்சியோடைப்பட்டி, திண்டுக்கல் தாலுகா


09. முருகேசக் கவுண்டர், 47, 11.04.1978, ஒடுகத்தூர், வேலூர் தாலுகா, (வ.ஆ.)


1979ல்,


01. ஆர்.அரசுத்தேவர், 39, 04.04.1979, வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா


02. பி.சர்க்கரைத் தேவர், 35 04.04.1979, வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா


03. வி.புலியுடை தேவர், 32, 04.04.1979, வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா


04. முத்து வேலம்மாள், 52, 04.04.1979, வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா


05. வி. பாக்யத்தாள், 37, 04.04.1979, வாகைக்குளம், அருப்புக்கோட்டை தாலுகா


06. மகாலிங்கம், 19, 23.04.1979, உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா


07. வேலுச்சாமி, 34, 23.04.1979, உடுமலைப்பேட்டை, கோவை ஜில்லா


1980ல்

01. சாத்தூரப்பநாயக்கர், 56, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா


02. வெங்கடசாமி நாயக்கர், 55, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா


03. வரதராஜ் நாயக்கர், 32, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா


04. என்.வெங்கடசாமி, 22, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா


05. ரவீந்திரன், 17, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா


06. முரளி, 13, 31.12.1980, குருஞ்சாக்குளம், சங்கரன்கோவில் தாலுகா


07. மணி, 17, 31.12.1980, டி.சி.கண்டிகை, திருத்தணி தாலுகா


08. ஏழுமலை, 22, 31.12.1980, வீரப்பார், பண்ருட்டி தாலுகா, கடலூர்


09. கி. துளசிமணி, சித்தோடு, கங்கார்புரம், பவானி வட்டம்


ஏன் இந்த விவசாயிகள் கொலை பற்றி பேசுவது இல்லை...அத்தனை புனிதராக யாருக்கு காட்சிப்படுத்த...? 


1980ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மனதில் கொண்டு சிறு,குறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்து மறுபடியும் 129 தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரானார்..MGR..


ஆனால் 1989க்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக, சிறு குறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் தந்தவர் கருணாநிதி.


அதனால் விவசாயத்திற்காக அஇஅதிமுக ஆதரவு என்பது மேற்கு மண்டலத்தில் பொய்.


K.A.மதியழகனின் MGR ஈர்ப்பு, அந்த சாதிய உணர்வு தான், மேற்கு மண்டல அஇஅதிமுக ஆதரவு.


மேற்கு மண்டலத்தினர் சாதியவாதிகளா...? 


நிச்சயமாக... எங்கெல்லாம் சாதிய உணர்வு, பெண்ணடிமை தனம் இருக்கிறதோ அங்கெல்லாம் அஇஅதிமுக, பலம் பெற்றது, 


தற்போது அதே சாதிய பெண்ணடிமை தனமுடையவர்கள் பாஜகவிற்கு படையெடுப்பார்கள்...


இதே சாதிய உணர்வுக்கு சற்றும் குறையாதவர்கள் முக்குலத்தோர். 


அஇஅதிமுக ஆரம்ப காலம் தொடங்கி இன்று வரை அதன் மிகப்பெரிய பலம் முக்குலத்தோர், சாண்டோ சின்னப்பத்தேவர்,மாயத்தேவர் போன்றவர்கள் முக்கியமானோர், அதனால் MGRன் பிரியமான தொகுதி ஆண்டிப்பட்டிதான்.


1987 MGR மறைவை அடுத்து, ஜானகி முதல்வராகிறார், அதுவரை மேலவை உறுப்பினராகவும், கொள்கை பரப்பு செயலாளராகவும் விளங்கிய ஜெயலலிதா கட்சியை கைப்பற்ற கூடாதென கருதி, இறுதி ஊர்வலத்தில் கூட அவமதித்து ஜெயலலிதாவை வெளியே தள்ள முயற்சித்தனர்.


அன்று அஇஅதிமுக முண்ணனி தலைவர்கள் ஜானகி பின்னால் அணிதிரண்ட போது, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நின்றவர் சசிகலா...


அரசியலே வேண்டாம் என ஜெயலலிதா துவளும் போதெல்லாம், தைரியமூட்டியவர் சசிகலா..


இத்தனைக்கும் சசிகலா நடராஜன் திருமணம் கருணாநிதி முன்னிலையில் நடந்தது.நடராஜன் திமுக உறுப்பினர் கூட...


ஜானகி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்த போது 1987-88 வரை இடைக்கால முதல்வரானவர் நாவலர்.


1989ல் ஜெ,ஜா என இரண்டு அணிகளாக முதல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த போது, நாவலர் தலைமையில் நால்வர் அணி என்று ஆரம்பித்து தேர்தலை சந்தித்தது.


ஜெயலலிதாவுக்கு சேவல் சின்னத்தை தேர்ந்தெடுத்தவர் சசிகலா.. போடி நாயக்கனூரில் நின்று முதல் வெற்றி பெற்றார் ஜெயலலிதா.ஜெ தலைமையிலான அணி 27 இடங்களில் வென்று எதிர்கட்சி தலைவரானார்.ஜானகி அரசியலை விட்டே விலகினார்.


இதற்காக அதிகம் உழைத்து சிரமப்பட்டது சசிகலா குடும்பம் தான்.நடராஜன் மீது வழக்கு.1989 நிதிநிலை தொடர்பான அறிக்கையை கிழித்தது தொடர்பாக சட்டமன்றத்தில் ஏற்பட்ட பிரச்சணை.அப்போதும் அரசியலே வேண்டாம் என்று பெங்களூர் சென்றுவிட்டார்.அவரை அழைத்து துணை இருப்பதாக கூட்டி வந்தவர் சசிகலா.

அதன் பின் அஇஅதிமுக ஜெயலலிதா வசம் வந்தது. தலைவர் மற்றும் நிரந்தர பொது செயலாளர் ஆனார்.


1991 தேர்தல் வெற்றி, 1996க்கு பின் TANSI, ப்ளசண்ட் டே ஹோட்டல் வழக்கு, சொத்து குவிப்பு வழக்கு என எதில் ஜெயலலிதா பெயர் வந்தாலும் சசிகலா பெயரும் உடனிருக்கும்.இத்தனைக்கும் கட்சியிலும் ஆட்சியிலும் எந்த பதவியும் வகிக்காதவர். 


2001 தேர்தலில் வெற்றி, 2011ல் வெற்றி,2016ல் வெற்றி என இந்த அத்தனை வெற்றிக்கும் ஒற்றை காரணம் ஜெயலலிதா என்றால், அதன் சூத்திரதாரி சசிகலா.


வேட்பாளர் தேர்வோ, மந்திரி சபை மாற்றமோ அத்தனையும் விவாதிக்கப்பட்டது சசிகலாவோடு மட்டும்தான்... 


இன்று அம்மா என சொந்தம் கொண்டாடி ஆயிரம் பேர் வந்தாலும் ஐவர் அணிக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவில்லை. அவர்களுக்காக பரிந்து பேசி, நத்தத்தில் நின்றவரை ஆத்தூரில் நிற்க வைத்தது வரை சசிகலா தான்...


இந்த கட்சியை கட்டமைத்ததிலிருந்து ஆளுமைகளை உருவாக்கியது வரை அத்தனையிலும் முக்குலத்தோரின் பங்கு அளப்பரியது...அதிலும் சசிகலாவின் பங்கு பெரியது...


திராவிட கட்சிகளுக்குள் சாதியா...?


சாதி என்பது எண்ண ஓட்டங்களின் வாணாளவிய சந்திப்பே, தவிர எனக்கு மேலிருப்பவனை பற்றி கவலைக்கொள்ளாமல் தனக்கு கீழும் ஒருவன் இருக்கிறான் என்ற ஒரு அற்ப சந்தோசம், தூக்கு தண்டனை கைதியை பார்த்து ஆயுள்கைதி சந்தோஷம் படும் மனநிலைதான் சாதிய மனநிலை..இந்த உளவியலைதான் மனு தர்மம் என்று சாதிய கட்டமைப்பாக உருமாற்றி மதங்களுக்குள் திணிக்கப்பட்டது..


தான் ஏன் பிராமணனை விட தாழ்ந்தவன் என கேட்க எந்த சத்ரியனுக்கும் தைரியமில்லை.. 


உயர்வு,தாழ்வு கருதாமல் சமத்துவம் பேசினால் மதமாற்றச் சக்தி என்பது எத்தனை கயமைத்தனம்.. 


இன்று சூர்யா,சத்தியராஜ்,என கேள்வி கேட்பவர்களை சாதிய ரீதியாக மோதலை ஏற்படுத்த முடியாது,அதனால் மதம் வருகிறது...


பெரியார் எந்த சாதியை ஒழித்தார் என கேட்கும் மூடர்களிடம், ஆதிக்கச்சக்தியால் ஒடுக்கப்பட்ட மற்ற சமூகங்கள் ஒன்றினைந்து பிராமணரல்லாதோர் சங்கம்,நீதிகட்சி கன வளர்ந்து மதராஸ் மாகாண ஆட்சியை கைப்பற்றிய போதும், முதல்வரானவர்கள் ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார்,கூர்மா வெங்கடசுவாமி நாயுடு, ஏன் மொழிவாரி மாநிலமாக பிரிந்த பிறகும் ராஜகோபாலாச்சாரியார் என்ற சாதியம் தொடர்பயணித்தது.அந்த பயணத்திற்கு முட்டுக்கட்டை போட்டவர் பெரியார். காமராஜர் தொடங்கி இன்றைய முதல்வர் வரை சாதியை பெயருக்கு பின்னால் இருந்து அழித்தவர் பெரியார்...


சாதி தனித மனித சுயமாற்றத்தால் மட்டுமே ஒழியுமே தவிர, யார் வற்புறுத்தியும் அழிக்க முடியாது.. அதனால் பெரியார் சிந்தி, சந்தேகி, கேள்விகேள் என்றார்.அவர் கூறியதை கூட ஏற்றுக்கொள்ள சொல்லவில்லை... அதனால்தான் சுயசிந்தனை கொண்டவர்கள் பெரியாரை ஏற்றுக்கொண்டார்கள்.. 


சுய சிந்தனையற்றவர்களிடமே உயர்வு தாழ்வு இருக்கும்.. பரிணாம வளர்ச்சி அடையாத மானிடன் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்தான்... இன்று பரிணாமம் வளர்ந்து வளர்ச்சியடைந்ததும் அந்த மலைவாழ் மக்களை தாழ்வாக கருதுகிறான்.. 


இன்று வரை திராவிட இயக்கங்களுக்குள் மறைமுக பயணித்த சாதி, தற்போதைய முதல்வரால் மேற்கு மண்டலம் முழுக்க அவரது சாதியை சார்ந்தவர்கள், சாதிப்பற்றிற்காக கண்மூடித்தனமாக ஆதரிப்பதை காண முடிகிறது.. 


குறிப்பாக ஜெயலலிதா இருந்த வரை கூட நடுநிலை வகுப்பெடுத்தவர்கள் பதிவுகளில்கூட சாதிப்பற்றை தெளிவாக காண முடிகிறது...


பொறுப்பு முதல்வராக பன்னீர் செல்வம் இருந்த போது கூட சாதிய ரீதியாக இத்தகைய பதிவுகளை காண முடிந்ததில்லை...


சாதி ஆதிக்கம் தற்போதைய முதல்வருக்கு ஆதரவு பதிவுகளில் அதிகம் வெளிப்படுகிறது.முதல்வரை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் மாற்று கட்சியினர் மட்டும்தான்... இப்போதை மேற்குமண்டலத்தில் நடுநிலையாளர்கள் என்று ஏமாற்றி முதல்வர் துதி பாடும் வேலை மற்ற சமூகத்தவரால் கவனிக்கப்படுகிறது...


முதல்வர் வேளாண் மசோதாவை ஆதரித்ததற்காக மட்டும், எத்தனை போலி விவசாயக்குழுக்கள் மேற்கு மண்டலத்தில்... பச்சைத்துண்டு போட்டு நேற்று வயலில் ஸ்டாலின் இறங்கியதை விமர்சித்தது கூட அதிகம் அவர்கள் தான், நடிப்பதற்கும், பண்ணையம் பார்ப்பதற்கும் என தலைப்பு வேறு, 


எனக்கு விவசாயம் தெரியும், அரளி விதையில் புரதச்சத்து அதிகம் என்றால் நம்பி சாப்பிடுவீர்களா...? விவசாயம் பற்றி பேச, விவசாயத்திற்கு துணை நிற்க, விவசாயத்தின் அவசியம் தெரிந்தால் போதும்.


வேளாண் மசோதாவில் தர நிர்ணய ஒப்பந்தம் என்று ஒன்று இருக்கிறதே...


எப்படி ஒவ்வொரு கத்தரிகாயும் 200 கிராம் எடை என்று தர நிர்ணயம் செய்தால், கத்தரிசெடியின் காலில் விழுந்து 200 கிராம் கத்தரிக்காயை காய்க்க சொல்வானா விவசாயி....?


விலை நிர்ணய ஒப்பந்தம் என்று ஒன்று உள்ளதே.. கோடையில் அதிகம் பூக்கும் மல்லிகை,மழைக்காலத்தில் குறைவாக பூக்கும். மழைக்காலத்தில் அதிக விலையும், கோடையில் குறைந்த விலையும், உற்பத்திக்கு தகுந்தாற் போல் பெற்றவனிடம் எப்படி விலை நிர்ணயிப்பீர்கள்... 


கடந்த நவம்பர் டிசம்பரில் வெங்காய விலை வரலாறு காணாத அளவு உயர்ந்தது, இப்போதும் அதே விலையா..?


இல்லை இரண்டையும் ஒப்பிட்டு சராசரி விலை நிர்ணயித்து கொள்முதல் செய்தால், இயல்பாகவே பொருட்களின் விலை அதிகரிக்கும். நுகர்வோர்(வாங்குபவர்கள்) பாதிக்கப்பட மாட்டார்களா.?


சராசரி விலைக்கு கொள்முதல் செய்த நிறுவனம் அதே விலைக்கு லாபமில்லாமல் விற்காது தானே..! 


ஒரு குறிப்பிட்ட விளை பொருள், குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி குறையும் காலத்தில் மட்டுமே விலை அதிகரிக்கும்.. ஆனால் இந்த தனியார் நிறுவன ஒப்பந்தங்கள் ஏன் செயற்கை தட்டுப்பாட்டை விலையேற்ற யுக்தியாக பயன்படுத்தாது...?


தர நிர்ணயம், விலை நிர்ணயம் முடிந்து கொள்முதல் செய்யும் நிறுவனம் 3ல் 2 பங்கு பணத்தை மட்டுமே அப்போது தரும்.அதாவது 300 ரூபாய்க்கு பொருள்களை எடுத்துக்கொண்டு 200 மட்டுமே கையில் தரும், மீதம் 100 ரூபாயை விற்ற பின் தரலாம், தகுந்த காரணங்களோடு தராமலும் இருக்கலாம். இது எப்படி விவசாயிகளுக்கு லாபம்...


என்னிடம் 300 ரூ தக்காளி கொள்முதல் செய்யும் நிறுவனம், மற்ற விவசாயிகளிடமும் தக்காளியை கொள்முதல் செய்யாதா..? விற்ற பின் உபயோகிக்க முடியாத ஒட்டுமொத்த தக்காளிகளையும் கொண்டு வந்து அந்த 100 ரூபாய் தக்காளி உபயோகிக்க முடியாதது என காரணம் சொல்லத்தான் முடியாதா...?


முதல்வர் வேளாண் மசோதாக்களை ஆதரித்தது விவசாயிகள் நலனுக்காக அல்ல, மக்களவையில் அஇஅதிமுக ஆதரித்தது.மாநிலங்களவையில் எதிர்த்தது. மக்களவையில் துணை முதல்வரின் மகன். 


தற்போதுள்ள அரசியல் சூழலில் தன்னை முதல்வர் வேட்பாளராக துணை முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்தார்..  துணை முதல்வரின் ஆதரவையும் பெற்றுவிட்டால், முக்குலத்தோரிடமும் வாக்கு பெற வழி வகுக்கும் என எதிர்பார்த்தார்.அதற்காக அவர் மகன் ஆதரித்தார் என்ற ஒற்றை காரணத்திற்காக ஆதரித்தார்.


ஆனால் துணை முதல்வர், முதல்வர் போட்டியில் இறங்கிவிட்டார்.துணை முதல்வருக்காக S.R.B போன்ற மூத்த உறுப்பினருக்கு உரிய மரியாதை வழங்கவில்லை.


சரி இப்போது மற்ற முக்குலத்தோர் மந்திரிகளின் ஆதரவு இருக்கிறதே என்றால், அஇஅதிமுக 2016 சட்டமன்ற தேர்தல் வரை கணிசமான வாக்குகளை அறுவடை செய்ய காரணம் ஜெயலலிதா. அவர் இருந்த வரை விழுந்த வாக்குகள், ஜெயலலிதா முதல்வர் என்ற எண்ணத்தில் விழுந்தவை...


ஆனால் தற்போது சாதி தவிர்க்க முடியாத எதிர்வினையாற்றும். மேற்கு மண்டலத்தில் முதல்வரின் சாதி முன்னிலைப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுபவதை, தென் மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களும் வேடிக்கை பார்க்குமா என்ன...?


இப்போது துணை முதல்வரின் எதிர்ப்புக்கே,தென் மாவட்டங்களில் ஆதரவு கூட தொடங்கிவிட்டது. 


இந்த நேரத்தில் சசிகலா விடுதலை... 


மத்திய அரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் கேட்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய நிர்பந்தந்களுக்கான முதல்படியே,முதல்வர், துணை முதல்வர் மோதல்...


2016ல் டிசம்பருக்கு பின்னான நிகழ்வுகளை சிறிது பார்த்தால் உண்மை விளங்கும்...


சிகிட்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிட்சை பலனின்றி உயிரிழந்ததாக 05-12-2016 பின்னிரவு 11.30 மணிக்கு அறிவிப்பு வருகிறது...


06-12-2016 அதிகாலை 1.50 மணிக்கு பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்கிறது...


அதன் பின் செயற்குழு, பொதுக்குழு கூடி ஏகமனதாக சசிகலாவை கட்சியின் பொதுசெயலாளராக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..


அந்த தீர்மானத்தோடு போயஸ் கார்டன் போய் அவரை பொதுசெயலாராக்கியதும் யார் என்பதும் அனைவருக்கும் தெரியும்... பிறகு பொது செயலாளர் சசிகலா, தினகரனை துணை பொதுசெயலாளராக்குகிறார்.


திடீரென அன்றைய முதல்வருக்கு எதிராக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை தயார் செய்கிறார். முதல்வர் ராஜினாமா செய்கிறார்.


அதன் பிறகு சமாதியில் தர்மயுத்தம், சசிகலா நிர்பந்தத்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்கிறார்..


தர்மயுத்தம் ஒரு புறம், மறு முனையில் கூவத்தூரில் தன் ஆளுமையை நிருபிக்க வேண்டிய கட்டாயம் சசிகலாவுக்கு, சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு கடிதங்களை பெற்று தற்போதைய முதல்வரை, முதல்வராக்க கவர்னரிடம் நேரம் கேட்கிறார்...


அப்போதைய பொறுப்பு கவர்னர் காலம் தாழ்த்தி, தர்மயுத்தத்திற்கு துணை போனார்... அந்த கால இடைவெளியில் சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு வெளிவந்தது... ஆனாலும் தன் ஆளுமையை நிருபித்து தற்போதைய முதல்வரை முதல்வராக்கியவர் சசிகலா தான்...


சட்டமன்றத்தில் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு தோல்வி கண்டது.


அடுத்து மறைந்த முதல்வரின் தொகுதியான R.K.நகர் இடைதேர்தல், 


துணை பொதுசெயலாளர் தினகரன் போட்டி, சசிகலா, தினகரன் நியமனங்கள் செல்லாது. இரட்டை இலை சின்னம் வழங்கக்கூடாது என முறையீடு....


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது புகார்.


இரட்டை இலை சின்னம் முடக்கம்....தொப்பி சின்னத்தில் போட்டி, முதல்வர் தொடங்கி அத்தனை அமைச்சர்களும் பிரச்சாரம்...


தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் அறையில் வருமான வரித்துறையினர் சோதனை, குட்கா வழக்கு, தேர்தல் பண பட்டுவாடா தொடர்பாக அமைச்சர் வீடுகளில் சோதனை... 


R.K.நகர் இடைதேர்தல் நிறுத்தம். இரு தரப்பிடையே சமாதான உடன்படிக்கை, சசிகலா, தினகரன் நியமனங்கள் செல்லாது. பொது செயலாளர் பதவி கலைக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கம்.துணை முதல்வர் பதவி.


இந்நிலையில் R.K.நகர் இடைத்தேர்தல்.சுயேட்சையாக களம் கண்டார் தினகரன். ஆளும் கட்சிக்கு எதிராக மாபெரும் வெற்றி கண்டு தன் ஆளுமையை நிருபித்தார்.


அதன்பிறகு தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, பதவி பறிப்பு.


அந்த தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடந்து புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள்.ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து எதிர்த்து வாக்களித்தவர்கள் மீது இன்னும் விசாரணை நடக்கிறது....


1.தலைமை செயலகத்தில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்ற பட்டவை என்ன... தலைமை செயலாளர் மாற்றத்தை தவிர, வேறு நடவடிக்கை என்ன...? வழக்கு ஏதேனும் உள்ளதா...?


2) குட்கா வழக்கின் விசாரணை என்ன ஆனது...?


3) தினகரன் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த தேர்தல் ஆணையர் எங்கே..? வழக்கு எங்கே...?


4) R.K.நகர் தேர்தல் பண பட்டுவாடாவால் தேர்தல் நிறுத்தம், அமைச்சர் வீடுகளில் சோதனை... முடிவு என்ன..?


இந்த கேள்விகளின் விடைகளாகத்தான் மத்திய அரசின் ஆளுமை தமிழகத்தில் நடைபெறுகிறது...


முதலில் சில கேள்விகள்....


1.ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் என்ன ஆனது...?


2. மரணத்தில் சந்தேகம் என்றால், சிகிட்சையில் உள்ள போது பொறுப்பு முதல்வராக யாருடைய ஒப்புதலோடு செயல்பட்டீர்கள்...? 


3.யாருமே பார்க்கவில்லை என்றால் மத்திய அரசின் AIIMS மருத்துவர்கள் கூடவா பார்க்கவில்லை..?


4.சசிகலா,தினகரன் நியமனங்கள் செல்லாது என்று அஇஅதிமுக சட்டப்பிரிவு 30(5)ல் கட்சியில் ஐந்தாண்டுகளுக்கு மேல் தொடர்பவர்கள் மட்டுமே போட்டியிட முடியும் அதை தளர்த்த பொது செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.பொது செயலாளர் அஇஅதிமுக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கபடுவது தான் இயல்பு என்றீர்களே...?


முதலில் 30(5)ல் கூறியது போல் தளர்வு இல்லாத சூழல் என்றால் கூட பரவாயில்லை.தளர்வு அளிக்க பொது செயலாளருக்கு அதிகாரம் இருக்கும் போது, பொது செயலாளர் தனக்கு பிறகு முடிவெடுக்கும் அதிகாரத்தை இன்னொருவருக்கு வழங்காத போது, அது அந்த பொது செயலாளரை தேர்ந்தெடுத்த பொதுக்குழு செயற்குழுவின் கைகளுக்கு செல்லும்... தொண்டர்கள் கிளை அமைப்பையும், கிளை செயலாளர்கள் ஒன்றிய அமைப்பையும், ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட அமைப்பையும், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு செயற்குழுவையும் நிர்வகிப்பார்கள்..இந்த பொதுக்குழு செயற்குழு தான் பொது செயலாளரை தேர்வு செய்யும்..


எனவே பொது செயலாளர் இல்லாத போது புதிய பொது செயலாளரை (அடுத்த தேர்தல் வரை) தேர்ந்தெடுக்க செயற்குழு, பொதுக்குழுவிற்கு அதிகாரம் உண்டு.


அந்த வகையில் சசிகலாவின் பொது செயலாளர் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது...


புதிய பொது செயலாளர் தேர்ந்தெடுக்கும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.இன்று அவருக்கு எதிரான வழக்கு தொடுத்தவர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தவர்கள்...


அஇஅதிமுகவின் அதிக பட்ச அதிகாரம் பொது செயலாளருக்கே...அப்படி இருக்கையில் துணை பொது செயலாளர் நியமிக்க பொது செயலாளருக்கு அதிகாரம் உண்டு.


கட்சியை விட்டு நீக்கப்பட்டவருக்கு பதவியா என்றால், நாவலருக்கு 1989 க்கு பிறகு பதவியளித்தாரே ஜெயலலிதா...நாவலருக்கு ஒரு நீதி...! தினகரனுக்கு ஒரு நீதியா...?


பதவி பறிப்பிற்கு பின் எதிர்ப்பவர்கள் பொதுக்குழுவில் தீர்மானத்தை ஏன் எதிர்க்கவில்லை...?


மத்திய அரசின் கருணையால் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது...


இந்த நிலையில் சசிகலா விடுதலை.. துணை முதல்வர் எதிர்ப்பு...தினகரனின் மௌனம் கவனத்திற்குரியது...


மாநிலத்தில் K.C.பழனிச்சாமி போன்ற அஇஅதிமுக ஆதரவாளர்கள் பாஜகவை எதிர்க்கும் சூழலில், முதல்வருக்கும் பாஜகவை விட்டு விலக எண்ணமிருப்பதாக செய்திகள் பரவ தொடங்கியது...


மத்திய அரசுக்கு தமிழகத்தில் காலூன்ற வலுவான அடித்தளம் தேவை. பணம், தொழில்நுட்பம் என எல்லா துணையோடும் களமிறங்கினாலும் தனித்து களம் காணுவது மத்திய அரசால் தமிழகத்தில் சாத்தியமில்லாத ஒன்று...அதே நேரத்தில் குறைந்த இடங்களில் போட்டியிட்டால் தமிழகத்தில் மாற்றுசக்தி என்ற பிம்பம் போலி என்று கேலி செய்வார்கள்...அதற்கு வலுவான இரண்டு இலக்க இடங்கள் வேண்டும்...60 என்றும் 99 என்றும் ஏன் இரண்டு இலக்கத்தில் கேட்கிறார்கள் என இப்போதாவது புரிகிறதா...60 இடங்களை கேட்டு 40 - 50 இடங்களை பெற எண்ணுகிறது தலைமை....


மத்திய அரசுடன் விரோத போக்கிற்கு முன் தலைமை செயலக சோதனை,அமைச்சர் வீடுகளில் சோதனை போன்ற பல்வேறு நெருக்கடிகள் முதல்வருக்கு..


துணை முதல்வருக்கு ஆரம்பம் முதலே மத்திய அரசின் ஆதரவு உண்டு.சேகர் ரெட்டி வழக்கின் தீர்ப்பே அதற்கு மற்றொரு சாட்சி.


மற்றொரு புறம் ஆரம்பம் முதலே ஆளுங்கட்சியையும்,மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்த தினகரன், இப்போது அந்த அளவு விமர்சிப்பதில்லை.. 

சசிகலா விடுதலை வேறு, சமீபத்திய டெல்லி பயணம்...


நிச்சயம் விடுதலைக்கு பின் நிறைய மாற்றம் ஏற்படலாம்... 


சசிகலா,பன்னீர் செல்வம்,தினகரன் இணைப்பு உருவாகலாம்...


சசிகலா, தினகரன் நியமனங்கள் செல்லும் என தீர்ப்பு வரலாம்..


சசிகலாவோடு பன்னீர் அஇஅதிமுகவை கைப்பற்றலாம்... 


மத்திய அரசுடன் அதிக இடங்களுக்கு யார் உடன்படுகிறார்களோ அவர்களே முதல்வர் வேட்பாளர்.. 


கட்சி யாரிடம் உள்ளதோ அவர்களுக்கே இயல்பான ஆதரவு/எதிர்ப்பு மனநிலைக்கு மக்கள் வந்துவிடுவார்கள்...


இந்த சாதி அரசியலின் ஆயுள் இதுதான்...ஒரு குறிப்பிட்ட சாராரை நம்பி மட்டுமே இருந்தால் சாதி கட்சிகளின் நிலைதான்... அதனால்தான் சாதிய வெளிப்பாடு தெரியாமல் ஆட்சி நடத்த வேண்டும்...


10% பொருளாதார தன்னிறைவு(Upper Class)ம், 20%(Upper middle class)ம் சமூக வலைதளங்களில் கருத்திட்டு வெற்றியை தீர்மானிப்பவர்கள் அல்ல...இந்த 30%தான் பொருளாதார, விவசாய,அரசியல்,புலனாய்வு சாணக்கியர்கள்.... சாதியபற்று உடையவர்கள்... 20% Lower Middle class இவர்கள் சமூகத்தோடு ஒன்றி பயணிப்பவர்கள்...இவர்களுக்கு தனக்கு எந்த தொந்தரவும் வராமல் இருப்பதை விரும்புபவர்கள்...பெரிய சாதி பற்றோ எதிர்ப்போ அற்றவர்கள்.. ஊரோடு ஒத்து வாழ்பவர்கள்.... 


40%(lower class)  அன்றாட வாழ்வையே போராடி வாழ்பவர்கள்...தினக்கூலி,வறுமை,பசி,கடன் அறிந்தவர்கள்...இவர்களிடம் தான் தற்சார்பு பொருளாதாரமும், புதிய கல்வி கொள்கையையும், தனியார் மயமாக்கலையும் விளக்கி பேச வேண்டும் வருகிறாயா... இட ஒதுக்கீடு வேண்டாம், இலவசங்கள் வேண்டாம் என்று இந்த 40% பேரை மாற்று... 3 வேளை உண்பவனுக்கு ஒரு வேளை உண்பவனின் வலி தெரியாது... நீ என்றாவது ஒரு நாள் விரதம் என்ற பெயரில் ஒரு பொழுது உண்பாய்... இவர்களில் பெரும்பாலும் ஒரு பொழுது உண்கின்றார்கள்..ஆனால் இதுவரை எந்த கடவுளும் இவர்களின் விரதத்தை ஏற்றதில்லை... உடனே சாதிக்குள் வராதே... எல்லா சாதியிலும் 40% இவர்கள் தான்....


இன்னும் ஒரு 10% உள்ளார்கள், எதற்கு பிறந்தோம் என்ன ஓட்டத்துடன்.., தாய், தந்தையற்றவர்கள், பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள், உறவினர்களால் உதாசீணம் செய்யப்பட்டவர்கள், வாழ்வதே கடினம் எனும் சூழலில் உள்ளவர்கள்... 


இந்த கடைசி 50% + 20%(Middle class)ம் தான் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும்.சாதி அல்ல....அந்த 30%ல் 15% வாக்குகள் கூட இதுவரை பதிவானது கிடையாது.அவர்கள் தான் உலக அரசியல் பேசுகிறார்கள்....


                               - சாய்.S.சுரேஷ் குமார்

                                     +91 - 8344 00 2855

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்