இதயரணங்கள்

 #பயணங்கள்_முடிவதில்லை....(III)


#இதயரணங்கள்...


கண்ணீரின் தடங்களை கழுவிவிட்டு, முகம் துடைத்தப்படி பயணம் தொடங்கிய நொடியில், பாலசுப்பிரமணியன் பாடி கொண்டிருக்கிறார்....


கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதை கேட்பதால், என 


நீங்காத பாரம் 

என் நெஞ்சோடு தான்

நான் தேடும் 

சுமைதாங்கி 

நீயல்லவா

நான் வாழும் நேரம் 

உன் மார்போடுதான்

நீ என்னைத் தாலாட்டும் 

தாயல்லவா


ஏதோ ஏதோ 

ஆனந்த ராகம்

உன்னால் தானே 

உண்டானது

கால் போன 

பாதைகள் நான் போன போது

கை சேர்த்து நீதானே 

மெய் சேர்த்த மாது


எனும் வரிகளில்,

இந்த ஆணினம்,பெண்ணினம் என இரண்டுமே,வாழ்க்கையின் எதிர்ப்பார்ப்புகளை விட, 

தன் உணர்வுகளை பகிரும்,

மனதின் பாரங்களை இறக்கிவைக்கும் சுமைதாங்கியான துணைகளையே தேடுகிறார்கள்....


ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ துணையை தவிர மற்றவர்களிடம் சொல்ல இயலாத பாரங்களோடு பயணிக்கிறார்கள்...

அந்த பாரங்களை பரஸ்பரம் பகிர்ந்து ஒருவருக்கு மற்றொருவர் சுமைதாங்கியாகும் உறவுகளை தேடுகிறார்கள்...


ஆனால் அதை ஆண் எளிதாக தாய்மையோடு ஒப்பிட்டுவிடுகிறான், பெண்களுக்கும் அதே தாய்மைதான் தேவைப்படுகிறது...


ஆணுக்கு,பெண்மையின் ஒவ்வொரு பரிமாணமும் துணையாகிறது... தாய்மை தொடங்கி வாழ்க்கை துணை வரை...


பெண்ணுக்கும், பெண்மையின் துணை தான் தேவைப்படுகிறது....ஆனால் ஆண் எனும் அகம்பாவம், தன்னில் பெண்மையை உணராமலேயே ஆண் இருந்து,வாழ்க்கையை முழுமையடைவதில்லை....


கோடி ரூபாய் வருமானத்தையும், வறுமையையும் ஒரே நிலையில் கையாளும் பெண்மை... 


ஒருநாள் வருமானமற்ற சூழல் என்றாலும் தன்னிலை தவறும் ஆண்மை...


ஆண்மை உணரவேண்டியது தன்னிடமுள்ள பெண்மை...


கால் போன பாதையில் 

பயணப்படும் குறிக்கோளற்ற மனிதனைக்கூட,கடமையை உணர செய்வது நல்ல துணையே...


மறுபடியும் பாலசுப்பிரமணியனும் ஜானகியும் கண்மணியே பேசு, மௌனம் என்ன கூறு என கேள்வி கேட்கிறார்கள்...


அந்த மௌனத்தின் காரணங்கள் அறியாமல் தானே,பலர் தாங்களும் மௌனமாகிவிடுகிறார்கள்...!


உன்னைக்கொடு என்னைத்தருவேன்

ஒரு தாலாட்டில் பிள்ளைத்தமிழ் சொல்லித்தருவேன்...விழிமூடாமல்...


கண்களால் என் தேகம் எங்கும் காயம் செய்கிறாய், 

கைகளால் என் பாதம் நீவி

ஆறச் செய்கிறாய்...


வானகம் இவ்வையகம் யாவுமே 

என் கையகம் நீதான் தந்தாய்...!


எல்லோருக்குமே மற்றொரு 

தாய்மை தேவைப்படுகிறது... அதற்கு ஆண்மை பெண்ணிடமும்,

பெண்மை ஆண்மையிடமும் தத்தம் இயல்புகளை இழந்தால் மட்டுமே சாத்தியமாகிறது...


நல்ல ஆண் துணை, தடுமாறுவது தன் இணை பெண்ணின் கண்ணிடம் தான்... 

மாமலையை கடுகாக்க உதவும் மாபெரும் ஆயுதமாயிற்றே..! அதனால் காயம் கண்டால்,

ஆறுவது கூட அவளில்லாமல் சாத்தியமில்லை..! 


பாதம் இந்த செயல் இழிவானதாகவே கருதப்படும், ஆனால் இதன் இன்றியமையாமை அவசியமானதாகும்...எப்போது இணைகள் தங்களுக்குள் ஒருவர் மாற்றி ஒருவர் பாதம் நீவுகிறார்களோ...அங்கே எந்த குழப்பங்களும் வருவதில்லை...


காரணம் பாதம், ஒவ்வொருவர் உடற்சூடு சொல்லும், உடற்சூடு உடல்நிலை, உழைப்பு ஆகியவற்றை காட்டிக்கொடுக்கும்...


பாதங்களை யாரும் வெளிக்காட்டுவதில்லை... வெடிப்பு தொடங்கி அத்தனையும் தன் இணைக்கு தெரிந்து, ஆறுதலிக்க கூடாதா என்ற எண்ணமே 

இன்று பலருக்கு பிரதாணம்... 

Crack cream தராத மருத்துவம்,இணையின் கை தீண்டலுக்குண்டு.... 


தனக்கு இத்தகைய ஆறுதல் தரும் இணை அமைந்தால் மூவுலகங்களையும் ஆளும் மனநிறைவை நிச்சயமாய் இணைக்கு தர முடியும்...


அப்படியே எண்ணிக்கொண்டிருக்க யேசுதாஸின் குரலில் பல ஏக்கங்களை பாடுகிறார், 


பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, என...


காதலை தன் இணையிடம் கூற இயலாமல், தவிப்பின் துடிப்புகளை கூறுகிறார்....


ஆறாத ஆசைகள் தோன்றும் 

என்னை தூண்டும்

ஆனாலும் வாய் பேச அஞ்சும் 

இந்த நெஞ்சம்

அவள் பேரை நாளும் 

அசை போடும் உள்ளம்

அவள் போகும் பாதை 

நிழல் போல செல்லும்

மௌனம் பாதி மோகம் பாதி

என்னை கொல்லும் என்னாளும்...


இன்றைய சூழலுக்கல்ல, என்றைக்குமே இந்த தடுமாற்றங்களை காணாத 

காதல் நிலைத்திருப்பதில்லை...


இங்கு காதலை சந்திக்கும் பலரும், ஆசையால் தான் உந்தப்பட்டு

காதலிக்கின்றனர்....


வெறும் பார்வை,பேசுவது என தொடங்கி பாலியல் தேவை வரை ஆசைதான்... 


ஆசைகளை அடைவதை விட ஏங்கி நிற்பதே/திருப்தியடையாததே காதல்..

எந்த ஆசையும் நிறைவேறிவிட்டால்/திருப்தி அடைந்துவிட்டால்,அடுத்த ஆசை துளிர்த்துவிடும்...


நிறைவேறா/திருப்தியடையாத ஆசைகளே 

காதலோடு பயணிக்கும்... 


காதலிக்கும் பருவத்தில் நிறைவேறா ஆசைகளுடனும், திருப்தி அடையாத ஆசைகளுடன் பயணிப்பவர்கள் காதலில் வெற்றி பெறுகிறார்கள்...


கண்களால் கவிதை கிறுக்கி

அவளே கிழித்து, 

அணிந்துரை எழுதி 

முகவுரைக்குள் புறப்பட்டு 

முடிவுரை எழுதி 

அவள் பார்வை பிரிகின்ற நொடி 

என் கண்கள் மூட வேண்டும்...

கண்கள் மூடிய மறுநொடி 

என் கனவின் தாழ்ப்பாள் திறந்து நான் காணும் முதல் கனவு அவள் கண்ணாக வேண்டும்....


அவள் பார்வையிலேயே திருப்தியடையாத என்னை, கொஞ்சும் கிள்ளை மொழியா

திருப்திபடுத்திவிடும்...


என நீள்கதையாக வேண்டும் ஏக்கங்கள்...காதலில்...


என ஏங்கி கொண்டிருக்கும் போதே, பாலசுப்பிரமணியன் இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொல்லுதே என உயிர்வலியை உருவகிக்கிறார்...


ஒவ்வொரு ஆணும் கர்ப்பம் தரிக்கிறான் காதலிக்கையில்...,

காதலிக்கப்பட்டு, கரு வளரும் காலம் எல்லாம் கனா காண்கிறான்.... 

கர்ப்பம் சுமந்தபடியே 

இணைந்து கொள்பவன் தப்பித்துக்கொள்கிறான்....


ஆனால் பிரசவ வலி காண்பதென்னவோ 

உயிர் வெளிவரும் வேளையில் தான்...


ஆம் கருவான காதல்

வெளியேற நினைக்கும்

போது வலி தருவது தவிர்க்கமுடியாதது...


இணைவதற்கு முன்னோ,பின்னோ

காதல் பிரசவிக்க மட்டும் கூடாது...

வாழ்வெல்லாம் இன்பமாய்

சுமக்க வேண்டிய கர்ப்பமே காதல்...


பனியாக உருகி 

நதியாக மாறி

அலைவீசி விளையாடி இருந்தேன்

தனியாக இருந்தும் 

உன் நினைவோடு வாழ்ந்து

உயிர் காதல் உறவாடி 

கலந்தே நின்றேன்

இது எந்தன் வாழ்வில் 

நீ போட்ட கோலம்

கோலம் கலைந்ததே 

புது சோகம் பிறந்ததே

நீயில்லாத 

வாழ்வு இங்கு 

காணல்தான்


என் ஜீவ ராகம் 

கலந்தாடும் காற்று

உன் மீது படவில்லை துடித்தேன்

அரங்கேரும் பாடல் 

உலகெங்கும் கேட்டும்

உன் நெஞ்சை தொடவில்லை 

ஏன் சொல்லம்மா

இசைக்கின்ற கலைஞன் 

நானாகி போனேன்

இசைக்கின்ற கலைஞன் 

நானாகி போனேன்

ஜீவன் நீயம்மா 

என் பாடல் நீயம்மா

நீயில்லாத வாழ்வு 

இங்கு காணல்தான்....


காதலித்தாலும்,

காதலிக்கப்பட்டாலும்,காதலோடு மட்டும் வாழ்ந்திருங்கள்...

நினைவுகளோடு கூட வாழ்ந்துவிடலாம்.... 

மறக்க வேண்டும் என 

நினைக்கும் நினைவுகளே

நிம்மதியில்லாமல் செய்துவிடும்....


                            _ தொடரலாம்..... 

          

                            - சாய்.S.சுரேஷ் குமார்

                                  +91 - 8344 00 2855



Comments