Posts

Malegaze....(VI)

வணிகம் தோன்றும் முன்,  களவு எனும் திருட்டு, வழிப்பறி தொழிலுக்கு அவசியமில்லை...   களவு என்பது காதலில் துணையொடு இணைந்திருந்து மகிழ்ந்திருப்பது.  மலையில் சேயர்களாகி வேட்டையாடி, ஆடை அறிமுகமாகும் முன் துணையோடு இணைந்திருந்து மகிழ்ந்திருந்தார்கள்...   காடுகளில் ஆயர்களாகி/இடையர்களாகி கால்நடைகளோடு மேய்த்தலுக்கு நாடோடி வாழ்க்கை முறையில், ஆடை அறிமுகமாகிய பின், துணையோடு இணைந்து மகிழ்ந்திருக்க காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.  அதனால் நாடோடி வாழ்க்கையில் கள் உண்டு களித்திருந்தார்கள்... பாலை என்பது கோடைகால, மழையற்ற தன்மையில் மலையும், காடுகளும் அடையும் பசுமை மாற்றமே. நிரைகளையும், நாடோடி வாழ்க்கையும் கொண்ட ஆயர்கள்/இடையர்கள், மேய்த்தல் பொருட்டு வெவ்வேறு இடங்களுக்கு பயணப்பட, ஒரே துணை என்ற நிலையை கடந்து, பிரிதலுக்கு பழக்கப்பட்டார்கள்...  கள் - பனை குடும்ப மரங்களிலிருந்து இறங்குவது. (களிப்பு - மகிழ்ச்சி )  மள் - பிற தாவரங்களிலிருந்து இறங்குவது... மள் + ஈகை பொருள் :- மளீகை பொருள் என்பதே மளிகை பொருளாகியது.... மள் + ஈகை பூ - மளீகை பூ என்பதே மல்லிகை பூவாகியது... ம...

Malegaze....(V)

மலையில் தோன்றி தாய் பரையின் வழிவந்த பரையர்களாகி., பரையின் சேயர்களாகி., சேரர்களானார்கள்.  ஆவினங்களை அடக்கி ஆயர்களாகி,  ஆய் நாடு கண்டார்கள்...  ஆடை பிறந்தது எப்படி...?  ஆடை என்பது உடலை மறைக்க உருவானதா...?  ஆடை என பெயர் வந்தது எப்படி...? இயற்கையில் விலங்குகளின் இயற்கை உடலமைப்பே தட்பவெட்ப நிலைக்கு தகுந்தாற்போல் அமைந்திருந்தது. அல்லது விலங்குகள் தங்கள் உறைவிடங்களை சூழலுக்கு தகுந்தாற்போல் அமைத்துக்கொண்டது... ஆனால் மனிதனுக்கு அவ்வாறான அமைப்பும் இல்லை, சூழலும் இல்லை... அதனால் விலங்குகளைவிட மனிதனுக்கு துணை அவசியமானது... ( இடந்தலைப்பாடு) ஒன் + அயர் = ஒனயர் என்பதே உணர் என்றானது. புண் + அயர் = புணயர் என்பதே புணர் என்றானது. அயர் - மறதி  (ஒன்) இயற்கையை மறந்த நிலை உணர்வு. (புண்) துன்பத்தை மறந்த நிலை புணர்வு. இருப்பினும் எல்லா பருவநிலைக்கும் துணை மட்டுமே போதாதென்று உணர்ந்து. குளிருக்கு பயந்தே வேட்டைச்சமூகத்தில் விலங்குகளின் தோலை போர்த்திக்கொண்டான்.  நிலையான வசிப்பிடமற்ற நிலையில், குளிர்காலத்தில் நாடோடி வாழ்க்கையில் தன் உடலில் அதை மூடிக்கொண்டான். நிரைகளை கொண்டு மேய்த்த...

Malegaze.... (IV)

வாழ்க்கைத்துணை என்பது  உணர்ச்சிகளால் உருவான தேவைகள் நிறைவேற துணைபுரியும், உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், என்ற நம்பிக்கைத்தான் சார்பு வாழ்க்கைக்கு அடிப்படையான காதலை உருவாக்கியது...  அந்த நம்பிக்கையில் எது தவறினாலும், அந்த முரண் வாழ்க்கை முழுவதுமே தொடர்கிறது. நம்பிக்கையற்ற சூழலில், அந்த துணைகள் பிரியும். சார்பு வாழ்க்கை விடுத்து தனித்து வாழும் எண்ணம் பிறக்கும். இன்னொருவரின் சொல்/செயல் நம்பிக்கை தருவதாக அமைந்தால், காதல் கைமாறிக்கொள்ளும்.  சார்பு வாழ்க்கையின் மிகப்பெரும் பின்னடைவே,துணை என்ற நிலையில் உள்ள, தாய்,தந்தை,வாழ்க்கைத்துணை என எல்லோரின் நிலையும் இதுதான்.  நம்பிக்கையற்ற நிலை தொடர்கதையானால், விரக்தி மனநிலை தனித்து வாழ முடியாது என்ற எண்ணத்தை உருவாக்கிவிடும். தற்கொலை எண்ணம் பிறக்கும்.  தற்கொலை எனும் பலவீனத்தை மனித இனம் உட்பட அனைத்து  உயிரினங்களிலும் எளிதாக கடந்தது பெண் இனம் என்றால் நம்பமுடிகிறதா...?  காரணம்,பெரும்பாலான உயிரினங்களின் சார்பு வாழ்க்கையில்,தன் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டு, துணையின் தேவைகளையும் நிறைவேற்றுகிறாள் அல்லது நிறைவேற துணைபுரிகிறாள்...

Malegaze (III)

 எதற்கு இந்த பதிவை தொடர்கிறீர்கள்...? காதல் திருமணங்களில் விவாகரத்துகள் அதிகமானதாக உச்சநீதிமன்றம் கூறிய கருத்திற்கும் இந்த பதிவிற்கும் என்ன தொடர்பு என்று நண்பரின் கேள்விக்கு நானளித்த பதிலோடு தொடங்குகிறேன். இந்த சமூகத்தில் நிலவும் எல்லா பாகுபாடுகளும், மதத்தின் பெயரால், கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி உருவானவை தான். அதில் வெளித்தோற்றத்தில் பெரிய பாகுபாடு சாதிய பாகுபாடு. மறைமுகமாக வெகு இணக்கமாக பயணிப்பது பாலின பாகுபாடு.  ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாழ்க்கை உண்டு. துணை என்பது ஒருவருக்கொருவர் அந்த வாழ்க்கையை வாழ துணைபுரிவதற்காக பாலுணர்ச்சிகளைத்தாண்டி, வாழ்தல் குறித்த பயத்தால், நம்பிக்கையால் பிறந்த காதலால் உருவான கட்டமைப்பு. நம்பிக்கை தவறும் சூழலில் துணைகள் பிரிகிறது. இது இயல்பான ஒன்று. கடவுள் பெயரால் கட்டமைக்கப்பட்ட பாலின பாகுபாடு, மற்றும் கட்டுப்பாடுகளால் ஒரு பாலினத்திற்கு மட்டும் நம்பிக்கை இழந்த பின்னரும் இணைந்து வாழ வேண்டிய நிர்பந்தத்தை கொடுக்கிறது. அந்த கட்டுப்பாடுகளையும், நிர்பந்தத்தையும் பயன்படுத்தி,ஒரு பாலினம் ஆதிக்கம் செலுத்துவதும், மறைமுகமாக அடிமைப்படுத்துவதும் தொடர்கதையாகிற...

Malegaze (II)

 முதல் பதிவின் தொடர்ச்சி..... மலையிலும்,கடலிலும் வேட்டை சமுகமாய்,  கானகத்தில் மேய்ச்சலோடு, பயிரிட பழகி,  காடு திருத்தி நாடு கண்டான், தானியங்களை பயிரிட பழகினான். இத்தனையும் காணும் வரை பாலின,சாதிய பாகுபாடுகள் அவசியமற்று போனது.  நிலையான இடம்பெற்ற பிறகுதான் அதிகார ஆசை உருவானது.  அந்த அதிகார எண்ணம் தான் ஆதிக்கத்தை உருவாக்கியது. பிற தொழில்கள் பிறந்தது.  மரங்களையும் கற்களையும் ஆயுதமாக்கியவன்,  தச்சுவேலைக்கும்,  கொல்லனாகவும் உருமாறினான்.  இலை, தளைகளை ஆடையாக்கியவன், பருத்தியில் நூற்க பழனினான்.  அரைகுறை ஆடைகளில் காடோடியாக திரிந்த போது வராத சந்தேகம், ஆசைகள் தோன்றிய பிறகு வந்தது.  தன் உணர்ச்சிகளை கொண்டே துணையாகிய பெண் உணர்ச்சியை அளவிட்டான்.  தன்னால் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளை வைத்தே பெண் உணர்வுகளை மதிப்பிட்டான்.  அந்த உணர்ச்சிகளை பெண்கள்  கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதித்தான். கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வற்புறுத்தினான். காதலுக்குள் கலகம் பிறந்தது.  காரணம்..,மானுட இனத்தில் ஆதிக்கம் பிறந்ததே பெண்ணிடம் இருந்துதான்....

Male Gaze -01

  #Malegaze .. கடந்த வாரம் உச்சநீதிமன்றம், விவாகரத்து தொடர்பான வழங்கு ஒன்றில், பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களில்தான் நடக்கின்றன, என கருத்து தெரிவித்திருந்தது...! இது தொடர்பாக நண்பர் தொடர்புகொண்டு நிறைய கேள்விகளை எழுப்பினார்...? மிக நீண்ட விவாதங்களில், என் பதில்களை ஒரு பதிவாக பதிவிடுகிறேன்.... விவாகரத்துகள் பெரும்பாலும் காதல் திருமணங்களில் நடப்பதாக கூறிய நீதிமன்றம், காதல் என்றால் என்ன..? என்பதற்கும் விளக்கம் தந்திருக்கலாம்... அதை ஏனோ எந்த நீதிபதிகளும் கூறுவதில்லை... இந்த சமூகத்தில், காதல் சார்ந்த ஒருவித பதற்றத்தை நீதிமன்றத்தின் இக்கருத்துக்கள் ஆழவிதைத்து செல்லும். இந்த நாகரீக மானுட சமூகத்தில்.., முதலில் தோன்றிய பாகுபாடு எதுவெனில், பாலினபாகுபாடு தான்.... உலகில் முதலில் தோன்றிய சாதி எதுவெனில், அது பெண்சாதி... ஆண்மை, பெண்மை என்ற "மை" விகுதிக்குள் அடைக்கப்பட்ட போதே அடிமைத்தனம் தொடங்கிவிட்டது. வேட்டை சமூகமாக இருந்தவரை, துணையென்ற சார்பு வாழ்க்கை அவசியமற்றதாகிப்போனது. தன் உணவை தானே தேடிக்கொண்டு, தன் தேவைகளை தானே தேடிக்கொண்டு, நிவர்த்தி செய்யும் வரை பாகுப...

இளங்கோவடிகள்

 #சிலப்பதிகாரமும்_கண்ணகியும்  #ஒரு_ஆய்வியல்  #தொடர்ச்சி... காவிய நாயகர்களையும், புராண நாயகர்களையும்,காப்பிய நாயகர்களையும் கொண்டாடியே, இன்று திரைப்பட நாயகர்களை கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோம்....  எகிப்திய இசிஸ்(Isis) நம்பிக்கை, நாவாய் வணிகம் செய்த சேரள நாய்கன்கள் மூலம் பரவி, சாத்து வணிகம் செய்த சாத்துவன்கள் மூலம் வளர்ந்து,  ஒரு சாத்துவணிகனும், ஒரு சேர அரச வாழ்வை துறந்த துறவியும் இணைந்து, புணைவுகளால் கண்ணகி என்றார்கள்... நமது கொண்டாட்ட மனநிலை, சில அடிப்படை கேள்விகளை கூட கேட்க தவறவிட்டதால், ஒரு காப்பியம், வரலாறாகி போகின்றது. சில கேள்விகள்,   கண்ணகி - மாதவி - கோவலன் - மாநாய்கன் - மாசாத்துவன் என அத்தனையும் தெரிந்த, சீத்தலை சாத்தனார் ஏன் சிலப்பதிகாரத்தை இயற்றாமல், மணிமேகலை இயற்றினார்...? புகார், மதுரை, வஞ்சி என சோழ,பாண்டிய, சேர தொடர்பை வகைப்படுத்தி இளங்கோவடிகளுக்கு கூறிய மதுரை கூல வாணிகர் சாத்தனார்., ஏன் மணிமேகலையில் பாண்டிய நாட்டை தவிர்க்கிறார்...? மாதவியின் அரங்கேற்று காதை தொடங்கி, பாண்டிய நாட்டுக்கே வராத மாதவியின் அத்தனை நிகழ்வுகளையும், சிலப்பதிகாரம் விவர...