Malegaze (II)

 முதல் பதிவின் தொடர்ச்சி.....


மலையிலும்,கடலிலும் வேட்டை சமுகமாய், 

கானகத்தில் மேய்ச்சலோடு, பயிரிட பழகி, 

காடு திருத்தி நாடு கண்டான், தானியங்களை பயிரிட பழகினான். இத்தனையும் காணும் வரை பாலின,சாதிய பாகுபாடுகள் அவசியமற்று போனது. 


நிலையான இடம்பெற்ற பிறகுதான் அதிகார ஆசை உருவானது. 

அந்த அதிகார எண்ணம் தான் ஆதிக்கத்தை உருவாக்கியது.


பிற தொழில்கள் பிறந்தது. 

மரங்களையும் கற்களையும் ஆயுதமாக்கியவன், 

தச்சுவேலைக்கும், 

கொல்லனாகவும் உருமாறினான். 


இலை, தளைகளை ஆடையாக்கியவன், பருத்தியில் நூற்க பழனினான். 


அரைகுறை ஆடைகளில் காடோடியாக திரிந்த போது வராத சந்தேகம், ஆசைகள் தோன்றிய பிறகு வந்தது. 


தன் உணர்ச்சிகளை கொண்டே துணையாகிய பெண் உணர்ச்சியை அளவிட்டான். 

தன்னால் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளை வைத்தே பெண் உணர்வுகளை மதிப்பிட்டான். 


அந்த உணர்ச்சிகளை பெண்கள்  கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதித்தான். கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வற்புறுத்தினான்.


காதலுக்குள் கலகம் பிறந்தது. 


காரணம்..,மானுட இனத்தில் ஆதிக்கம் பிறந்ததே பெண்ணிடம் இருந்துதான். 


தன் தேவைகளுக்காக யாரை சார்ந்தும் பயணிக்கவில்லை.புணர்ச்சி எனும் உணர்ச்சிகளுக்கே துணை அவசியமானது. 


சார்பு வாழ்க்கைக்கு பழக்கமாகி துணை அவசியமானது ஆணுக்குத்தான். மிக நீண்ட குழந்தை பருவம் கொண்ட மனித இனத்தை தற்சார்பு வாழ்க்கைக்கு பழக்கமாகும் வரை  உணவு, பாதுகாப்பு வழங்கி பராமரித்தது பெண்தான்.


சார்பு வாழ்க்கைக்கு பழக்கமாகி,  தலைவன் என்ற குழுவினராய் சார்பு வாழ்க்கை வாழ துவங்கியதும், முதல் தலைவன் பெயர் சேயோன்(சேயொன்).


அந்த சேயொனுக்கு முந்தைய தாய் தெய்வத்தின் பெயர் - #பரை. 


வேட்டை சமூக பரை ஒரு கொலை தெய்வமாகிறாள்.  காரணம் அவள் வேட்டையை தன் சேயுக்கும் சேர்த்தே செய்கிறாள். 


பரை எனும் சொல்லுக்கு சக்தி என்ற பொருளுண்டு.


பரையர்கள் தொல்குடிகள் (தாய்வழி மரபினர்) என்பதும், சிவனே பரையர்களின் முதல்வன் என்பதும், அதன் வழி உருவான ஆதிப்பெயர்கள்.


பின்னர் வந்த பக்தி இலக்கியங்கள், பாலின பாகுபாட்டை கட்டமைக்க, பெண்ணடிமைதனத்தை ஊக்குவிக்க பரையை, 


பரத்தை (கட்டுப்படாதவள்) என்றது. பரத்தையர் - தவறான பெண் என்றும், ஆணை கவர தாசியர் ஆடும் ஆட்டத்தை பரத்தையர் ஆட்டம் என்றது, இப்போது அது பரதமாகி போனது.


ஆணாதிக்கத்தை நிலைநிறுவ பரையை (தாய்வழி மரபினர்) ஏற்றுக்கொள்ளா நிலையை உருவாக்க, 


பரனின் துணைதான் பரை என்றார்கள். #பரன் என்றால் சிவன் என்றார்கள். 


பரன் என்பதே பரமன், பரம்பொருள், பரம்பரை, பாரம்பரியம் என்ற வார்த்தைகளின் மூலதனம்.


பரைக்கு கொற்றவை (கொல்+அவை) என புதிய பெயரிட்டு பாலை நிலத்துக்குரியவள் என்றன இலக்கியங்கள்.


(தாய் - தந்தை, பாட்டன் - பாட்டி, பூட்டன் - பூட்டி, ஓட்டன் - ஓட்டி, சேயோன் -சேயோள், பரன் - பரை என இரண்டு முதல் ஏழுதலைமுறை உறவுகளை தமிழில் அழைப்பது உண்டு.)


பரன் - பரை பற்றி பார்த்தோம். தாயாகிய

பரையின் வழித்தோன்றாலாகி, குழுவினரின் சார்பு வாழ்க்கையில் தலைவன் சேயொன். 


சேயொன் தான் துணை வேண்டி சேயோளை நாடி காதலிக்கிறான். அவளுக்கு நம்பிக்கை விதைக்கிறான், அந்த நம்பிக்கையால் வள்ளனாகி வள்ளியின் மணம்புணருகிறான்.


அந்த நம்பிக்கை இணைவர்களாக காடுகளில் ஓடி,

ஓட்டன் - ஓட்டியாக வாழ்ந்ததையும், 


கானகம் திருத்த ஏறு பூட்டி, 

பூட்டன் - பூட்டியாக வாழ்ந்ததையும்,


அந்தகாடுகளில் பாடுபட்டு (பாடு என்பதற்கு உழைப்பு என்ற பொருளும் உண்டு)  பாட்டன் - பாட்டியாக வாழ்ந்ததையும் கொண்டே இவைகள் அமைந்தது.


அதை உணர்ந்து, நாடு கண்டபின் ஆதிக்கத்தையும் கட்டுப்பாடுகளையும் ஏற்காதவர்களாக பெண்கள் தொடர்ந்தார்கள்.


தொடர்ந்து இயங்கிய ஆண்களும்,பெண்களும், அதிகார ஆசையில் நாடுகளை விரிவாக்கி,புது தொழிலையும் உருவாக்கினார்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் தகுந்தாற்போல் தெய்வங்களை உருவாக்கினார்கள். 


தாய் தெய்வத்தை மத்தியிலும், சேய் தெய்வங்களின் வழிவந்த மரபினர் தெய்வங்களை எல்லையிலும் நிறுவி அதனை நாடு என்றார்கள்.


வெவ்வேறு பகுதிகளில் நாடு கண்ட, ஒரே மானிட இனத்திற்குள் அதிகார போட்டிகள் ஆரம்பமானது. அதிகாரத்தை கைப்பற்ற போர்கள் மூண்டது.


பயத்தினால் உருவான பதற்றத்தை எதிர்கொள்ளும் நம்பிக்கையாக

தாய் தெய்வத்தையும், சேய் தெய்வங்களையும், பயமுறுத்தியவைகளையும் வழிபட தொடங்கினர்.


இவைகள் எல்லாவற்றிலும் பலியிடுதல் பிரதாணமாக இருந்தது. 


அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியில், குறிப்பிட்ட நிலப்பரப்பை தன்வசப்படுத்தி, தலைவனை வேந்தன் என்றார்கள். 


வேந்தன் என்றால் ஆணைகளை விதிப்பவன் என்று பொருள். 


வேந்தன் தலைமையில் அரசுகள் அமைந்த பின், ஆட்சி எனும் அதிகாரம், தலைவன் எனும் தனிநபர் வசமானது.  


பாகுபாடுகள் கட்டமைக்கப்பட்டதில், இலக்கண,இலக்கிய, காப்பியங்களின் பங்கு இன்றியமையாதது.


எழுத்துவடிவில் இயங்கிய கற்பனை உலகத்தை வைத்தே, முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என எண்ணிக்கொண்டிருக்கிறோம். 


யார் முன்னோர்கள்...? 


இலக்கணமும், இலக்கியமும், காப்பியங்களும் படைக்கப்பட்ட காலத்தில், அவைகளை படித்து அறிந்துகொள்ளும் வகையில் கல்வியறிவு பெற்றிருந்த சமூகம், 


எப்படி அதன்பிறகு அந்த கல்வியறிவை இழந்தது.?


கல்வியறிவை இழந்தபோதும், அந்த இலக்கியங்கள் கூறிய பாகுபாடுகளை தொடர் பழக்கவழக்கமாக பின்பற்றக் காரணம் என்ன...?


வேந்தனின் ஆதிக்கத்தை நிலைநிறுவ, அவன் கொணர்ந்த ஆணைகளை, தொடர் பழக்கவழக்கம் என நம்பவைக்க இலக்கியங்கள் துணைபுரிந்தன.


சங்கம் வைத்து தமிழை வளர்த்த புலவர்களை இகழ்வதா....? 


முதலில் சங்கம் இருந்ததா...? 

சங்கத்தால் தமிழ் வளர்ந்ததா...? 

இல்லை தமிழால் சங்கம் வளர்ந்திருக்குமா...?


குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல்,பாலை என்பது நிலங்களின் இயற்பெயரா...?


திணை என்றால் என்ன...? நிலமா...?


சங்கம் என்ற சொல், 

பக்தி இலக்கிய காலத்திற்கு பிறகே பயன்பாட்டுக்கு வந்தது. 


சங்கம் இருந்ததற்கான சான்றாக முசிறி நீலகண்டன் என்பவர் 9-ம் நூற்றாண்டில் இறையனார் அகப்பொருள் உறையை மட்டுமே ஆதாரமாக காட்டுகிறார். 


வேறு எந்த நூலிலும் சங்கம் பற்றிய குறிப்புகளே இல்லை. எந்த கல்வெட்டு ஆதாரமும் சங்கம் பற்றி குறிப்பிடவில்லை. 


முதற்சங்கம் சிவன், முருகன், அகத்தியர் ஆகியோரை குறிப்பிடுகிறது. 


அதாவது எப்படி சமஸ்கிருதம், விஷ்ணு,ராமர், வியாசர் என கடவுளின் பெயரால் கதையளந்து மன்னர்களின் புரவலத்தாலும் வளர்ந்ததோ,


அதேபோல் தமிழும் கடவுளரால், மன்னர்களின் புரவலத்தால் வளர்ந்த மொழி என்பதாக காட்சிபடுத்த சங்கம்தான் தமிழை வளர்த்தது என கதையளந்தார்கள்.


தமிழ்மொழி,வெகுமக்களின் மொழியாக இருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வுகள் கி.மு 6ம் நூற்றாண்டிற்கும் கிமு 5ம் நூற்றாண்டிற்கும் இடைபட்ட காலத்திலேயே எழுத்தறிவு பெற்ற வெகுமக்கள் இருந்ததை உறுதிபடுத்தியுள்ளது.இது சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் முந்தைய காலம். 


ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளும், தன்பொருநை நதி, வைகை நதி நாகரீகங்கள் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. உலகிற்கு நாகரீகத்தை கற்று தந்தவர்கள், தமிழர்கள் என்று... ஆனாலும் கடவுளர் பெயரால், இலக்கியங்கள் துணையால் அவற்றை மறுக்கின்ற முக்கியப்பணியை தொடர்ந்து செய்கின்றன இம்மண்ணிற்கு தொடர்பற்ற ஒரு இனம்.


இன்னும் விளங்கக்கூறினால், மயில் அகவும், குயில் கூவும், காகம் கரையும், யானை பிளிறும் என்பதுபோல், மனிதன் பேசினான். ஒலிவடிவ மொழியாகத்தான் நாடோடி வாழ்க்கை முழுவதும் பயணப்பட்டது. 


நிலையான இடம் கண்டபிறகு, எல்லா நிலப்பரப்பிலும் ஒத்த ஒலி அமைப்பை பெற்றிருக்கவில்லை. 


நிலப்பரப்பிற்கு தகுந்தாற்போல் வழக்குமொழியாக ஒலி அமைப்பில் வேறுபட்டிருந்தது. பயிர்தொழில் தவிர்த்து பிற தொழில்கள் உருவான பிறகே அவை ஒளிவடிவம் அவசியமானது. 


முதலில் வெவ்வேறு வடிவ அமைப்புடன் வாணிப மொழியாக பயணப்பட்டு, பரவலான பிறகே ஒத்த ஒளி வடிவத்தை பெற்றது.


இன்றுவரை பழமையான இலக்கண நூலாக கருதப்படுவது தொல்காப்பியம் தான்.


ஆனால் இந்த தொல்காப்பியத்திற்கு முன் அகத்தியம் இருந்ததாக கூறுவதுண்டு. அகத்தியரின் சீடராக தொல்காப்பியர் இருந்தார் என்றும், இறையனாரின் அகப்பொருள் உரைதான் கூறுகிறது. அகத்தியம் பற்றியோ, அகத்தியர் பற்றியோ, தொல்காப்பியத்தில் எந்த சிறுகுறிப்பும் இல்லை. இது இடைசங்க நூலாக கருதப்படுகிறது.


அகத்தியர் பற்றிய முதல்குறிப்பு கிரேக்க ஆய்வாளர் தாலமியின் குறிப்புகளில்தான் முதலில் ஆரம்பித்தது.இறையனாரின் அகப்பொருள் உரையை தவிர மற்ற எந்த நூல்களிலும் சங்கம் பற்றிய குறிப்புகள் இல்லை.


சோழர்கள் பாண்டியர்களை வீழ்த்திய கதை சொன்ன பட்டினப்பாலை, சேரர்களின் பெருமை சொன்ன பத்து பாட்டு, இவையெல்லாம் பாண்டிய மன்னன் தலைமை வகித்த கடை சங்கத்தில் அரங்கேறியிருக்குமா...? 


சங்கம் வைத்து புலவர்களும், மன்னர்களும் தான், தமிழ் வளர்த்தார்கள்   என்ற கட்டுக்கதைகளை உருவாக்கவும், 


சமஸ்கிருதத்திற்கு பிந்தையது தான் தமிழ்மொழி என எடுத்துக்காட்டவும், இடை செறுகலாக இந்த சங்ககாலம் என்ற கற்பனைகள்,இலக்கியங்களுக்குள் புகுத்தப்பட்டது. 


தொல்காப்பியருக்கு சமகாலத்தவர் யார் என வரலாற்றை தேடி பார்த்தால், 


பாணினி என்ற வடமொழிக்கு இலக்கணம் எழுதியவர் என்ற வடமொழி அடையாளத்தோடு வரலாறு எழுதப்பட்டிருக்கிறது


தமிழுக்கு சமகாலத்திலேயே இலக்கணம் எழுதப்பட்டது வடமொழி என்பதன் மூலம், தமிழுக்கு மூந்தைய மொழியாக வடமொழியை காட்சிபடுத்தவே சங்கம் என்ற அமைப்பு முறை இருந்ததாக உருவகப்படுத்தப்பட்டது. 


அதிகாரம் மிக்க அரசர்களை புகழ்ந்து, அரசர்களின் புரவலத்தால் புலவர்கள் வாழ்ந்தார்கள்.


புலவர்களால் தமிழ் வளரவில்லை.தமிழால்,புலவர்கள் வளர்ந்தார்கள். 


எந்த மன்னர்களின் வரலாற்றையோ,இலக்கிய ஆதாரங்களை வாசித்தாலும்,பேரரசோ, சிற்றரசோ எதுவானாலும் மன்னர்களின் வீரம்,கொடை என அவன் வள்ளன்மை பேசிய எந்த வரலாறும், இலக்கியமும்,


வெற்றிக்கு காரணமான படைவீரர்களை பற்றி பேசாது. அவன் சபையில் புலவர்களை எவ்வாறு நடத்தினான் என்பதை வைத்தே புகழ்ந்து, அவன் கொடை சிறப்பு வெளிப்பட்டிருக்கும். எந்த இலக்கியம், வெகுமக்களின் வாழ்வியலை கூறுகிறது. செல்வந்தர்களை சார்ந்தே சொல்வந்தர்களின் இலக்கியங்கள் அமைந்திருந்தது. 


பாண்டியன் நீதி தவறியவன் என எடுத்துக்கூறிய சிலப்பதிகாரம்,மணிமேகலை, அவசியமற்று சோழனை புகழ்வதன் மூலமும்,  


பாண்டிய நாட்டில் பிறந்த சாத்தனார், சேர இளவரசனுக்கு கதை கூறி சிலப்பதிகாரம் இயற்றப்பட்டதையும், அதன் தொடர்ச்சியான மணிமேகலையை சோழனை புகழ்ந்து சாத்தனாரே எழுதியிருப்பதன் மூலமும், 


பாண்டிய மன்னனால்,சாத்தனார் நாட்டைவிட்டு, விரட்டப்பட்டிருக்க வேண்டும்.அந்த கோபத்தில் மதுரை எரிந்தது என்று கூறியிருக்க வேண்டும். 


மதுரை எரிந்திருந்தால், பின்னர் வந்த பாண்டிய மன்னர்கள், சேர,சோழர்களைப்போல் தலைநகரை மாற்றியிருப்பார்கள். இது போன்ற கற்பனைகள் தான் இலக்கியங்கள்.


இது எப்படி தமிழை வளர்க்கும் செயலாக இருந்திருக்கும்.?


முதல் முதலில் சங்கம் அமைத்தவர்கள், சாத்து வணிகத்தொடர்பால், சமணர்களுடன் தொடர்பு பெற்ற வணிகர்கள். அதன்மூலம் சமண மதத்தை கொணர்ந்தார்கள்.


முதன் முதலில் மதம் என்ற அடையாளத்தோடு தமிழ் கண்டது சமணம் தான். 


இங்கு வழிபாடுகள்,


அவரவர் நம்பிக்கைக்கு தகுந்தபடி, தாய் கடவுளையும், சேய் கடவுளர்களையும், பயம் தருவனவற்றையும் வழிபட்டார்கள். 


ஆண் இறந்தால்,சேய் கடவுளர்களைப்போல் அவர்களை புதைத்து நடுகல் வழிபாடும், 


பெண் இறந்தால் தாய்கடவுளைப்போல் அவர்களை புதைத்து குலதெய்வமாக வழிபட்டும் வந்தனர். இவை எல்லாம் பலியிடுதலை பிரதாணமாக கொண்ட வழிபாடுகள். 


வணிகர்களின் பொருளாதார சூழல், மற்றும் தொடர்பயணம் உணவுமுறையை மாற்றியிருந்தது. எனவே கொல்லாமையை போதித்த சமணர்களின் தொடர்பு பெற்று, அவர்கள் சமணத்தை பரப்ப சங்கம் அமைத்தார்கள். 


பௌத்தமும் சமகாலத்திய மௌரிய அரச வணிகர்களுடன் வணிக தொடர்பால் சமணத்தை போல பரவிய மதம்.


சமணம்,பௌத்தம் என்பதெல்லாம் அரசராக இருந்து துறவு ஏற்ற ஒருவரின் கொள்கைகளால் உருவானதுதானே.


ஆனால் அரசுகள் மனித இனத்தின் அதிகார ஆசையினால் உருவானது.

அரசுகள் தோன்றி,அதிகார ஆசையில், 

பிற அரசுகளின் பகுதிகளை கைப்பற்ற, அதுவரை நிரைகளுக்கும், பயிர்களுக்கும் விலங்குகளிடமிருந்து பாதுகாக்க காவலாக இருந்தவர்களைப்போல், 


மற்ற அரசுகளிடமிருந்து நாடுகளை காப்பாற்றவும், மற்ற அரசுகளின் நிலங்களை கைப்பற்றவும், அரச காவலர்கள் என்ற தொழிலை ஏற்படுத்தினார்கள்.


அதன்பிறகே போர்கள் உருவாகி, 

அரசுகள் பேரரசுகளாக உருமாறின. பேரரசுகள் உருவாகும் நிலையில்தான், அதிகாரமிழந்த மன்னர்களை கொண்டு, தன் அதிகாரத்தை செலுத்த,குறுநில மன்னர்கள் என்ற அமைப்பு முறை உருவானது.


முதலில் வணிகர்கள் மூலம் பரவி, அரசர்களும் ஏற்றுக்கொள்ள சமணமும், பௌத்தமும் நாடு முழுக்க பரவ தொடங்கியது. பயிரிடுதலை அடிப்படையாக கொண்ட சமூகங்களில் அவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின...


வேட்டை சமூகத்திலும், மேய்த்தல் தொழிலை அடிப்படையாக கொண்ட, 

நிரை மேய்த்தல்,நிரை காத்தல், பனை தொழில் செய்தவர்கள், தோல் பதனிடுதல்,கடல் வேட்டை சமூகத்திலும் பௌத்த,சமண சமயங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


    ........ தொடரலாம் மற்றொரு பதிவில்...


                                   - சாய்.S.சுரேஷ் குமார்

                                        +91 - 8344 00 2855



Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்