அரசியல்
#DravidianModel....
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) - ன், தகவல் தொழில்நுட்ப அணியினர் நேற்றைய ஒன்றிய பிரதமரை வரவேற்ற நிகழ்வில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரை தாண்டி, எதிர்க்கட்சி தலைவர் Edappadi K. Palaniswami அவர்களை, இந்திய ஒன்றிய பிரதமர் தட்டிக்கொடுத்த நிகழ்வின் காணொலியை பகிர்ந்து, பரப்பி சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்....
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று தனித்திராவிட நாடு கொள்கையில், சீனப்போரில் தேச பாதுகாப்புக்காக சமரசம் செய்த அண்ணா,
மாநில சுயாட்சிக்காக,மாநில உரிமைக்காக, ஒன்றிய அரசுடன் சமரசமில்லாமல் எதிர்ப்புக்குரல் எழுப்பித்தான் அண்ணாவுக்கு பழக்கம். அண்ணா தொடங்கிய DMK - Dravida Munnetra Kazhagam - ன் பழக்கமும் அதுதான்....
அண்ணாவின் கொள்கைகளுக்கு நேரெதிராய் செயல்படும், ஒன்றிய அரசுக்கு அடிமை சேவகம் செய்பவர்களை, தட்டிக்கொடுக்கலாம், கட்டித்தழுவலாம் தவறில்லையே,
அகில இந்தியத்திற்கும், அண்ணாவிற்கும், எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை...
அண்ணாவும், அவர் எழுப்பிய மாநில சுயாட்சி கொள்கைகளும்தான், அகில இந்தியத்தையே ஆட்டம் காணச்செய்தது.இன்று பல மாநிலங்கள் மாநில சுயாட்சி பேச காரணமானது.
அப்படி இருக்கையில் அகில இந்தியமும், அண்ணாவும் ஒரு கட்சியின் பெயரில் இருக்கமுடியாது.
அகில இந்திய அடிமைகள் என்று பெயர் பதிவிட முடியாமல்தான், காமராஜர் போன்றவர்களை நெருக்கடி நிலையை பயன்படுத்தி கைது செய்ய துடித்த, அகில இந்தியத்திடம் அடிமையாகி,
ஆட்சியே போனாலும் பரவாயில்லை, என காமராஜரை பாதுகாத்து நெருக்கடி நிலையை எதிர்த்த, திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்த்து உருவான அகில இந்திய அடிமைகளை தட்டிக்கொடுப்பது அவர்களின் வழக்கம் அதில் தவறில்லையே...!
இனி ஒரு கடந்தகால நிகழ்வுகளையும் கூற வேண்டியுள்ளது... நரேந்திர மோடி தட்டிக்கொடுத்த அனைவரும் சசிகலா தொடங்கி அமெரிக்க அதிபர்வரை அதிகாரத்தை இழந்ததும், சிறை சென்றதும் கடந்தகால வரலாறு...
முதலில் ஒன்றிய பிரதமரை வரவேற்க தமிழ்நாடு அரசின் சார்பில் சென்றவர்கள் அமைச்சராக உங்களுக்கு தெரியலாம்....
ஆனால், தத்துவ மோதலை, கொள்கை முரணை அந்த வரவேற்பில் அழகாக நிகழ்த்தியிருந்தார்....
அண்ணாவின் கலைஞரின் கொள்கை வாரிசென வரவேற்பிலேயே காட்டியிருந்தார் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின்....
மாநில சுயாட்சியை அடிப்படையாக கொண்ட திராவிட முன்னேற்ற கழக பொதுசெயலாளர் Durai Murugan அவருடைய வரவேற்பை அகண்ட பாரதம், தேசியம், எனும் அகில இந்தியம் எப்படி பார்க்கும்...?
அடுத்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி....
மதவாதம் அரசாளும் மாநிலங்களை விட, அகில இந்தியத்தின் உயர்கல்வி பெற்றவர்களின் விகிதத்தைவிட, திராவிட அரசில் உயர்கல்வி பெற்றவர்கள் அதிகம்....அந்த கல்வியறிவு ஓரளவேனும் பகுத்தறிவை தந்தது...
அந்த கல்வியறிவும், அதனால் பெற்ற பகுத்தறிவும் மதவாதிகளுக்கு எப்படி பிடிக்கும்....
திராவிட இயக்க பொதுசெயலாளரும், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையும் வரவேற்க சென்றால், அவர்களை எதிர்க்கும் மதவாதம் அடிமைகளைத்தான் தட்டிக்கொடுக்கும்.
மதவாதத்தை திருப்பியனுப்ப வழியனுப்பி வைக்க, திராவிட முன்னேற்ற கழக தலைவர், தமிழ்நாட்டு முதல்வர் நேரில் சென்றார்....
BJP Tamilnadu மாநில தலைவர் K.Annamalai, கடந்த கால அடிமைகளை போல், உரிமைகளை இழந்தாலும், அகில இந்தியத்தை புகழும், நிமிர்ந்தே பழக்கப்படாதவர்களை போல் பிரதமரை புகழும் புகழுறைகளை எதிர்பார்த்தார்...
#GoBackModi திமுகவினர் இப்பொழுது Trend செய்வார்களா, என கேலி பேசிய பாஜகவினருக்கு, நேற்றைய முதல்வரின் பேச்சு, இதற்கு #Gobackmodi பரவாயில்லை என அழ தொடங்கிவிட்டனர்...
அண்ணாமலைக்கு இதயத்தில் ஈட்டி பாய்ச்சியதைப் போலான உரை அது, மாநில உரிமைகளை, ஒன்றிய அரசின் வஞ்சணையை, பிரதம அமைச்சரின் முன்னிலையில் பேசியதும் முதல்வர் எடுத்துக்கூறியதும், ஊடகங்கள் மத்தியில் ஒப்பாரி பாட தொடங்கிவிட்டார் அண்ணாமலை,,,,
Prime Minister - பிரதம அமைச்சர்,
Chief Minister - முதல் அமைச்சர்,
என இருவருமே அமைச்சர்கள் தான், குடிமக்கள் தான் அவர்களின் மன்னர்கள்.
குடிமக்கள் தான் மன்னர்கள் என்பதை எடுத்துக்கூறவே, அவர்களின் பிரதிநிதி ( President of India ),
முதல் குடிமகன் என்ற பெயரோடு அழைக்கப்படுவதோடு, முப்படைகளின் தலைவராகவும், எந்தத்துறையிலும் தலையிடும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது...
மன்னரான குடிமக்களுக்கு, சேவகம் செய்ய வழங்கப்படுவதே பிரதம அமைச்சர், முதல் அமைச்சர் பொறுப்புக்கள்...
மாகாணங்களை ஒன்றிணைக்காதவரை, ஒவ்வொரு மாகாணமும் தனித்தனி பிரதம அமைச்சர்களை கொண்டிருந்தது.
மாகாணங்களை ஒன்றிணைத்துதான், ஒன்றிய அரசு உருவானது. அதன் பிறகு ஒன்றியத்திற்கு மட்டும் பிரதம அமைச்சர் பொறுப்பும்,
மாகாணங்களை மாநிலங்களாக்கி அதற்கு முதல் அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
குடிமக்கள் தான் மன்னர்கள், அவர்களின் வரி வருவாய்தான் நாட்டின் மூலதனம்.
ஒன்றியமாக ஒருங்கிணைத்துவிட்டு, மாகாண மக்களிடம் அவர்களின் வரிவசூலை சமமாக பகிர்ந்தளிப்பதே,பிரதம அமைச்சர் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையின் பணி,
ஒன்றிய அமைச்சரவை அனைத்து மாநிலங்களுக்கும், சமமான அளவில் நிதிபகிர்வு, திட்டங்களை வகுப்பதில் பாகுபாடு இல்லாமல்,
அனைத்து மாநில, அனைத்துத்தரப்பு மக்களின், மொழி, மதநம்பிக்கை, உணவு,கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும்...அவர்களும் இந்நாட்டு மன்னர்கள்தான், அவர்களுக்கும் சேவை செய்வது, பாதுகாப்பது பிரதம அமைச்சர் தலைமயிலான ஒன்றிய அமைச்சரவை, மற்றும் முதல் அமைச்சர் தலைமையிலான மாநில அமைச்சரவையின் கடமை....
சமஸ்கிருதத்திற்கு அதிக நிதிபகிர்வு, இந்தி திணிப்பு, புதிய கல்வி கொள்கை, நிதி பகிர்வில் பாகுபாடு, மத நம்பிக்கைகளை சிதைப்பது, உணவை திணிப்பது, மக்களின் வரி பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது....
என முடியாட்சி என எண்ணி, ஆட்சி செய்யும் அயோக்கியர்களுக்கு, இது குடியாட்சி என எடுத்துரைக்கும் இயக்கமாக, மக்கள் தான் மன்னர்கள், எந்த பொதுத்துறை நிறுவனங்களும் பிரதம அமைச்சரின் பணத்திலோ, அல்லது அமைச்சரவையின் பணத்திலோ உருவானதில்லை, பெருமுதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்து, முதலாளிகளுக்கு சேவை செய்ய அவர்களின் கட்சி பணத்தை பயன்படுத்தட்டும்...
மக்கள் பணத்தை பயன்படுத்தக்கூடாது என மக்களுக்கு மக்களாட்சி பற்றி பகுத்தறிவை உருவாக்க ஆரம்பித்த இயக்கம் தான், திராவிட முன்னேற்ற கழகம்...
அதன் தலைவர், Chief Minister of Tamil Nadu M. K. Stalin ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு இழைக்கும் அநீதியை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் உரிமைகளை மாநில முதல் அமைச்சர் என்ற அடிப்படையில், ஒன்றிய பிரதம அமைச்சரோடு, மன்னரான மக்களுக்கும் தெரியும் வகையில் பொதுக்கூட்டத்தில் கேட்கிறார்....
அண்ணாமலை அவர்களே, உனக்கு வேண்டுமானால் பிரதம அமைச்சர் முதலாளியாக இருக்கலாம், அவருக்கு ஏவல் செய்ய நீ தவங்கிடக்கலாம்.....
மற்றவர்களிடம் அதை எதிர்பார்ப்பது தவறு, மக்களுக்கு சேவை செய்யவேண்டிய பிரதம அமைச்சர், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதை, முதல் அமைச்சர், மன்னரான மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதானே சரியான அணுகுமுறை.
மக்களாட்சியை பற்றியும், குடிமக்கள் தான் மன்னர்கள், நாம் அவர்களின் சேவகர்கள் என்பதை அறியாத சனாதன முதலாளிகளின் கைக்கூலியின் ஏவலாளியின் கோபம் தான், நேற்றைய ஊடக பேட்டியாக அமைந்தது.
#அவையறிந்து_ஆராய்ந்து_சொல்லுக_சொல்லின்
#தொகையறிந்த_தூய்மை_யவர்.
#இடைதெரிந்து_நன்குணர்ந்து_சொல்லுக_சொல்லின்
#நடைதெரிந்த_நன்மை_யவர்.
என்ற வள்ளுவனின் மொழிகளுக்கு எடுத்துக்காட்டாய் அமைந்தது நேற்றைய நிகழ்வுகள்.....
- சாய்.S.சுரேஷ் குமார்
+91 - 8344 00 2855
Comments
Post a Comment