Malegaze.... (IV)

வாழ்க்கைத்துணை என்பது  உணர்ச்சிகளால் உருவான தேவைகள் நிறைவேற துணைபுரியும், உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், என்ற நம்பிக்கைத்தான் சார்பு வாழ்க்கைக்கு அடிப்படையான காதலை உருவாக்கியது... 


அந்த நம்பிக்கையில் எது தவறினாலும், அந்த முரண் வாழ்க்கை முழுவதுமே தொடர்கிறது. நம்பிக்கையற்ற சூழலில்,

அந்த துணைகள் பிரியும்.


சார்பு வாழ்க்கை விடுத்து தனித்து வாழும் எண்ணம் பிறக்கும். இன்னொருவரின் சொல்/செயல் நம்பிக்கை தருவதாக அமைந்தால், காதல் கைமாறிக்கொள்ளும். 


சார்பு வாழ்க்கையின் மிகப்பெரும் பின்னடைவே,துணை என்ற நிலையில் உள்ள, தாய்,தந்தை,வாழ்க்கைத்துணை என எல்லோரின் நிலையும் இதுதான். 


நம்பிக்கையற்ற நிலை தொடர்கதையானால், விரக்தி மனநிலை தனித்து வாழ முடியாது என்ற எண்ணத்தை உருவாக்கிவிடும். தற்கொலை எண்ணம் பிறக்கும். 


தற்கொலை எனும் பலவீனத்தை மனித இனம் உட்பட அனைத்து  உயிரினங்களிலும் எளிதாக கடந்தது பெண் இனம் என்றால் நம்பமுடிகிறதா...? 


காரணம்,பெரும்பாலான உயிரினங்களின் சார்பு வாழ்க்கையில்,தன் தேவைகளையும் நிறைவேற்றிக்கொண்டு, துணையின் தேவைகளையும் நிறைவேற்றுகிறாள் அல்லது நிறைவேற துணைபுரிகிறாள். 


உணவும்,புணர்ச்சியும் தவிர பிற தேவைகளற்ற உயிரினங்களில்,தேனீ தொடங்கி, புலி, சிங்கம் என தனக்கும் இரை தேடி, துணைக்கும் இரைதேடும் பழக்கம் பெண்ணினத்திற்குத்தான். 


துணை என்பது உயிரினங்களில், கணவனை மட்டும் குறிப்பதல்ல, குழந்தைகளும் துணைகள் தான்... 

தன் குஞ்சுக்கு இரைதேட கற்றுக்கொடுத்து ஆபத்தென்றால் எதிர்த்து உயர பறப்பது கோழிதான், சேவல் அல்ல... 


ஓநாய் போன்ற சில உயிரினங்கள் தன் துணையான பெண் இறந்தால், வேறு துணை தேடுவதில்லை. பல உயிர்கள் இணை இறந்தால் தற்கொலை செய்துகொள்ளும்.


அதனால் பல உயிரினங்கள் ஒரே துணையுடன் நிலைத்திருப்பதில்லை. குறிப்பிட்ட காலம் வரை துணையை தக்க வைக்கும். அதன்பிறகு வேறு துணை தேடி பயணிக்கும். 


அதிகபட்சமாக உணர்ச்சிகளின் தேவைகளுக்கு மட்டும் ஆணிற்கு பெண்துணை அவசியமானது. முதலில் ஆண்துணையோடு வாழ்ந்து, குஞ்சு அல்லது குட்டிகளுக்கு இரைதேட கற்றுதந்து, தானே உணவு சேகரிக்கும் நிலையை குழந்தைகள் அடைந்தவுடன் பெண்ணும் வேறு துணை தேடிக்கொள்ளும்... 


மனித இனத்திலும் அப்படியான சூழல்தான் நிலவியது. மிக நீண்ட குழந்தை பருவம் கொண்ட மனித இனத்தில், குழந்தைகள் தன் தேவைகளை நிறைவேற்றும் வரை,தாயின் துணை அவசியமானது. 


பலவீனமான பிறவி ஆண்தான். அந்த பலவீனத்தை மறைக்கத்தான், பெண்ணுக்கென்று கட்டுப்பாடுகளை விதித்தார்கள். 


இன்று பெண்ணுக்கெதிராக நிகழும், 

பெண்கள் விமர்சனம் பெறும், அத்தனை வன்மங்களிலும்,வன்முறைகளிலும் ஆணின் பலவீனமிருக்கும். 


காதல் தோல்வியென்று தொடங்கிய திராவக வீச்சு,கொலை, பாலியல்

வன்புணர்வு தொடங்கி, இன்று பிஞ்சு குழந்தைகளை பாலியல் பொருளாக பார்க்க வைத்தது வரை, ஆணின் பலவீனத்தால் நிகழும் கொடூரங்கள்.


ஆடையில் தொடங்கி விபச்சாரி, வேசி, ஒழுக்கமற்றவள், குடியை கெடுப்பவள், என விமர்சிக்கும் அத்தனை விமர்சனமும் ஆணின் பலவீனத்தால் உருவானதுதான். 


நிர்வாணமாய் திரியும் எந்த விலங்குக்கும், மற்ற விலங்குகளின் நிர்வாணம் உணர்ச்சியை தூண்டுவதில்லை. இயல்பாக வரும் உணர்ச்சிக்குத்தான் துணை அவசியமாகிறது.


ஆடையில் இருந்தாலும், ஆடை விலகினாலும், அரை நிர்வாணமாய் நின்றாலும், நிர்வாணமாய் நின்றாலும் உணர்ச்சிவசப்படுவது ஆணின் பலவீனம்தான். 


ஆனால், அதையே சுய சிந்தனையை மழுங்கடித்து, பெண்ணின் பலவீனமாக எண்ணச்செய்தவை கடவுளர் கதைகளும், இலக்கியங்களும் தான்.


அந்த ஆழபதிந்த எண்ணங்கள் தான்., விளம்பரங்களில்., ஆண்கள் குறிப்பிட்ட உள்ளாடை அணிந்தால் மயங்கிடுவாள்., குறிப்பிட்ட வாசனை திரவியத்தை பயன்படுத்தினால் மயங்கிடுவாள்., குறிப்பிட்ட பற்பசை பயன்படுத்தினால் மயங்கிடுவாள் என்றும், 


படங்களில் படித்தால்,பணத்தால், சண்டையிட்டால், அமைதியாக இருந்தால், நாடக காதல் என்ற பெயரில் நல்ல உடை, உயர்ரக அலைபேசி, முத்தமிட்டால், கட்டிபிடித்தால், உடலுறவு கொண்டால்

என அத்தனைக்கும் மயங்கிடுவாள் என பெண்ணை பாலியல் பொருளாக காட்சிபடுத்தியது.....


தேவைகளை பயன்படுத்தித்தான் அடிமைத்தனத்தை உருவாக்கினார்கள். நிரைகளை அடிமைபடுத்திய போது, கட்டிவைத்து அதன் ஒரே தேவைக்கான இரைகளுக்காக, நிரைகளே தேவைக்காகத்தான் அடிமையானது. அதுபோலத்தான்

அவள் தேவையை, அவள் நிறைவேற்றக்கூடாதென்றுதான் கட்டுப்பாடு என்று கட்டிப்போட்டார்கள்... தேவைகளுக்காக ஆணை சார்ந்து வாழும், சூழலை உருவாக்கினார்கள்...


காதலை எதிர்க்கும் சாதியவாதிகளும், மதவாதிகளும், கடவுளர் கதைகளால் உருவான இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள காரணம்,ஆணின் பலவீனத்தை மறைத்து, பெண்ணை பலவீனமானவளாக்கி,அதன்மூலம் தனக்கு பெண்கள் அடிமையாவார்கள் என்ற ஆதிக்க மனநிலைதான். 


தனக்கு கீழ் அடிமையாக ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம், தனக்கு மேலிருப்பவனை பற்றி கவலைத்தராது.


தேவைகளுக்காக அடிமையான பெண்ணினம் நிரைகளைப்போல ஏற்றுக்கொண்டதற்கும், சுயசிந்தனையை மழுங்கடித்த கடவுளர் கதைகளே காரணம்.


காதலை தவிர,மகளுக்கு, மனைவிக்கு பிடித்ததை வாங்கி தருகிறேன், பிடித்ததை செய்கிறேன், அவர்களுக்கு எல்லாவற்றையும் முடிவெடுக்க சுதந்திரமும் வழங்கியுள்ளேன் என கதையளக்க தயாராகும் முன்,


சுதந்திரம் என்பது யாருக்கும் பயப்படாமல் வாழ்வது. தனிப்பட்ட ஒருவரின் சுதந்திரத்தை யாரும் வழங்க முடியாது. அவரவர் சுதந்திரம் அவரவரிடம் தான்...


எல்லா முடிவுகளையும் சுதந்திரமாக எடுக்கும் மகள், வாழ்க்கைத்துணை தேர்வுசெய்வதில் மட்டும் சுதந்திரமற்றவளா..? திருமணமே வேண்டாம் என்றால் விடுவீர்களா...? விவாகரத்தை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிப்பீர்களா...? 


வாழ்க்கைக்கு துணை என்பதை தவிர, அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் வாழ முடியும்..


21-ம் நூற்றாண்டில் கூட,

இராவணக்கோட்டம் என்ற திரைபடத்தில் முத்தமிட்டதற்காக காதல் வந்தது என்றும், 

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைபடத்தில் மாமா மகன் என்பதற்காக காதல் வந்தது என்றும் கதையெடுக்க முடிகிறதென்றால், பெண்கள் குறித்த ஆதிக்க மனநிலை எப்படி இருக்கிறதென்று தெரிந்து கொள்ளமுடிகிறது....


  ....... தொடரலாம் மற்றுமொரு பதிவில்......


                                       - சாய்.S.சுரேஷ் குமார்

                                             +91 - 8344 00 2855



Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்