Malegaze....(V)

மலையில் தோன்றி தாய் பரையின் வழிவந்த பரையர்களாகி.,

பரையின் சேயர்களாகி., சேரர்களானார்கள். 


ஆவினங்களை அடக்கி ஆயர்களாகி, 

ஆய் நாடு கண்டார்கள்... 


ஆடை பிறந்தது எப்படி...? 

ஆடை என்பது உடலை மறைக்க உருவானதா...? 

ஆடை என பெயர் வந்தது எப்படி...?


இயற்கையில் விலங்குகளின் இயற்கை உடலமைப்பே தட்பவெட்ப நிலைக்கு தகுந்தாற்போல் அமைந்திருந்தது. அல்லது விலங்குகள் தங்கள் உறைவிடங்களை சூழலுக்கு தகுந்தாற்போல் அமைத்துக்கொண்டது...


ஆனால் மனிதனுக்கு அவ்வாறான அமைப்பும் இல்லை, சூழலும் இல்லை... அதனால் விலங்குகளைவிட மனிதனுக்கு துணை அவசியமானது... ( இடந்தலைப்பாடு)


ஒன் + அயர் = ஒனயர் என்பதே உணர் என்றானது.


புண் + அயர் = புணயர் என்பதே புணர் என்றானது.


அயர் - மறதி 


(ஒன்) இயற்கையை மறந்த நிலை உணர்வு.

(புண்) துன்பத்தை மறந்த நிலை புணர்வு.


இருப்பினும் எல்லா பருவநிலைக்கும் துணை மட்டுமே போதாதென்று உணர்ந்து. குளிருக்கு பயந்தே வேட்டைச்சமூகத்தில் விலங்குகளின் தோலை போர்த்திக்கொண்டான். 


நிலையான வசிப்பிடமற்ற நிலையில், குளிர்காலத்தில் நாடோடி வாழ்க்கையில் தன் உடலில் அதை மூடிக்கொண்டான்.


நிரைகளை கொண்டு மேய்த்தலுக்கு பழக்கி ஆயர்களாகி வாழ்ந்தவன், தோலை உலர்த்தி உடுத்தத்தொடங்கினான்... 


அதன் பிறகே தோலை பயன்படுத்தி பிற பொருட்களை தயாரித்தான். மற்ற இனங்களின் தோலைவிட ஆவினங்களின் தோல், பயன்படுத்த ஏதுவாக அமைந்தது. 


போர்த்துதலை ஆடை என்றான். 

பாலை போர்த்தியதையும் ஆடை என்றான்.

பனங்கிழங்கின் தோலிற்கும் கிழங்கிற்கும் இடையில் இருக்கும் வெண்ணிறமான பகுதியையும் ஆடை என்றே வழங்கினர். 


ஆடை போர்த்திய பிறகு, துணையின் உடல் தேவை குறைய தொடங்க, ஆடையை தொடர்ந்து அணிய பழக்கப்படுத்தினான்.


குளிர்காலத்தில் ஆவினங்களில் தோல்கள் பயன்பட்டது, கோடையில்,வைக்கோலை முதலி நார் கொண்டு கட்டி ஆடையாக்கினான்.


வைக்கோல் என்பது உலர்ந்த தாவர தண்டுகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு நார். 


முதலி என்பது தாழைமரம்....


நிலையான வசிப்பிடம் கண்ட பின்பு, எழுதிய இலக்கியங்கள் ஆடை அணிதலை ஒழுக்கம் என்றது. 


கைக்கொள்ளுதல் என்பதை கைகோள் என்றது.


கைகோள் என்பதை ஒழுக்கம் என்றது.


ஒழுக்கம் என்பது வேறொன்றுமில்லை, தொடர் பழக்கவழக்கம். 


சேயர்களின் வேட்டை வாழ்க்கையிலும், ஆயர்களின் மேய்த்தல் வாழ்க்கையிலும்,  ஆடை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆயர்களாக பருத்திப்பழம், பஞ்சு, பருத்திவிதைகளை அறிந்திருந்தாலும், நூற்க தரி அவசியமானது.


நாடு கண்டபின் பிறகு, தரி கண்டறிந்த பின்தான் பருத்தி பயிரிட பழகினார்கள். அதன்பிறகு பருத்தி ஆடைகள் வந்தது.

 

நெசவு செய்ததும் சாயம் ஏற்றுவதும் நம் முன்னோருக்கு தெரிந்து இருக்கிறது என்பதற்கான ஆதாரம் ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல் போன்ற இடங்களில் பயன்படுத்தியத்தன் சான்று கிடைத்துள்ளது.


ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரும்பாலான நூற்புக்கதிர்கள், அரிக்கமேட்டில் கிடைத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட நூற்புக்கதிர்கள், கொடுமணலில் கிடைத்த நூற்பு உருளைகள் போன்றவை தமிழகத்தில் பண்டைக்காலத்தில் நெசவு செய்யப்பட்டதற்கான ஒரு மிகப் பெரிய சான்று.

 

பிற நாடுகளுடன் வாணிபத்தொடர்பால்தான் சீனாவில் இருந்து பட்டுத்துணியும், கிரேக்க நாடுகளில் இருந்து மற்ற வகை ஆடைகளும் பயன்பாட்டிற்கு வந்தது.


ஆய் நாட்டை கடந்த,

ஆயர்களே/ இடையர்களே, 

ஆவினங்களில் கூட பாலின பாகுபாடின்றி மேய்த்தலுடன், பயிரிட பழகியவர்கள், வேணாடு கண்டார்கள்.... 


வேளிர் நாடு ஆகையால், வேள் நாடு எனப்பட்டு வேணாடு ஆனது. தமிழில் யானை வேழம் என்றும் அழைக்கப்படும். எனவே யானைகள் நிறைந்த பகுதியாகிய இந்நாடு வேழ நாடு எனப்பட்டு வேணாடு ஆனது. யானைகளையும் முதன்முதலில் வேளாண்மைக்கு பழக்கப்படுத்திய நாடு வேணாடு. 


சேயர்களாகி, ஆயர்களாகி, வேளிர்களாகி, பிற தொழில்கள் இருந்தாலும், வணிகம் காணும்வரை தனித்த தொழில் அடையாளம் இல்லை. நாஞ்சில் நாடு என்பதற்கு கலப்பை நாடென்று பெயர். 


அதன் பிறகே ஆநிரைகளில் கூட பாலினம் பிரித்தார்கள். பயிரிட பயன்படும் காளைகளை மட்டும் வேளாண்மை செய்வோரும், இதர ஆவினங்களை மேய்ச்சல் தொழில் செய்வோரும் பயன்படுத்த தொடங்கினர்... 


பாண்டியம் என்றால் எருது என்று பொருள். 


எருதுகளை கொண்டு உருவாக்கிய நாடு பாண்டிய நாடு. 


இன்று நாங்கள் தான் பாண்டியர்கள் என சண்டையிட,கூட்டத்தோடு அலைமோதும் நிகழ்வுகள் தொடர்கதையாகிறது... 


வேளாண்மையும், மேய்ச்சலும் தனித்தனி தொழில்களானது பாண்டிய நாட்டில் தான். 


வேணாட்டிலேயே பயிரிட, காடுகளை திருத்த ஆவினங்களை கொண்டு, நிலங்களை புண்படுத்திய போதும், நீரை தேக்க குளங்களை உருவாக்கும் பணிகளின் போதே, களிமண், இரும்புத்தாதுக்கள் கண்டறியப்பட்டு  மண்பாணை தயாரிப்பு, 

கலப்பை செய்யும் தச்சு தொழில்கள் உருவாயிருந்தன. 


சேரளத்திலும்(கேரளத்திலும்), ஆய் நாடு, வேணாடுகளில், இன்றளவும் உடை அணியும் தன்மையும், அதிக அளவில் வெண்மை நிறம் பயன்படுத்துவதையும் கொண்டு சாயமேற்றுதலை அறியாத கொடுந்தமிழர் பண்பாடாக அவை அமைந்திருந்தது என்பதை அறியலாம்.


சைவம், வைணவம், சாக்தம், சமணம், பௌத்தம், ஆசீவகம், கௌமாரம், காணபத்தியம், என எதுவுமே ஆதிமதங்கள் இல்லை. எல்லாமே கற்பனையான இலக்கிய,புராண கதைகளால் உருவான மதங்கள். 


சேயர்களிடம் தாய் தெய்வ வழிபாடும், தங்களின் தலைவன் சேயொன் மீதான நம்பிக்கையும் இருந்தது. 


இடையர்களிடம் தாய் தெய்வ வழிபாடும், சேயர்களில் மேய்த்தல்,காத்தல்,போன்றவற்றிற்கு துணைபுரிந்த சேயர்களை தெய்வமாக்கி வழிபாடும், தங்களின் தலைவன் மாயோன் மீதான நம்பிக்கையும் இருந்தது.


வேளிர்களிடம் தாய் தெய்வ வழிபாடு, சேயொன் வழிபாடு, சேயர்களின் வழிபாடு,

மாயொன் வழிபாடு இருந்தது.நிலையான வசிப்பிடம் பெற்ற சூழலில்,தலைவனின் தேவை அவசியமற்று போனது. அதனால் தலைவன் என்ற அமைப்பற்று இருந்தனர்.


வேளிர் நாட்டைத்தாண்டி நிரைகளை பாலின பாகுபாடு காட்டி பிரித்தவர்கள்

வேளிர்கள், இடையர்கள் என பிரிந்தனர்.


இடையர்களில் நிரைகளை காவல்புரிந்த சிலரும் வேளிரோடு உடன்பட்டு, பயிர் காவலுக்கு பழகினர். 


மனிதர்களுக்குள் முதல் பிரிவினை உருவாக்கியது பாலின பாகுபாடுதான்....


வேளாண்மை விரிவடைய, 

மேய்ச்சல்கள் குறைய தொடங்கியது. சம காலத்தில் குயவு,தச்சு,நெசவு என மற்ற தொழில்கள் விரிவடைய ஆரம்பித்தது. 


தேவைக்கு அதிகமான விளைச்சல் கண்டது. பண்டமாற்று வணிகம் தொடங்கியது.வணிகர்கள் உருவானார்கள். 

சாத்து வணிகமும், நாவாய் வணிகமும் தொடங்கினார்கள். 

வணிகம் உருவாகும் வரைக்கூட பிரிவினைகள் இல்லை. வணிகம் உருவான பின்தான் தொழில் ரீதியான பிரிவினை உருவானது.


வேளிர்கள் நிலத்தின் மீது அதிகாரம் செலுத்த தொடங்கினார்கள்.தலைவனற்ற கூட்டம். வலியோர் அதிகாரம் செலுத்த ஊர்கள் பிரிந்து மகிழ்நன், ஊரன்

அரசுகள் உருவானது. 


நிரை மேய்த்தல், நிரை காத்தல், தோல் பொருள் தயாரித்தல், பனை தொழில் புரிவோர்,தொழில்களுக்கு தொல்லை தருவதாக வேளாண்மை அமையத் தொடங்கி நிலத்தை அதிகாரம் செலுத்த அவர்களும் தயாரானார்கள்...


வலிமைமிக்கவர்கள் கைப்பற்றி 

அதிகாரம் செய்யத்தொடங்கினர். அதிகாரமிழந்தவர்கள் இணைந்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்க அரசுகள் உருவானது. அரசுகள் உருவான பின் நிலங்கள் அரசுடைமையானது. அரசன் தனக்கு நம்பிக்கையானவர்களை கொண்டு சிற்றரசர்களை கொண்டு நிலங்களை பகிர்ந்து பயிரிட செய்தான். நேரடி வணிகமுறை போய், அரச வணிகமானது. தன்னை புகழ்பவர்களுக்கு தானம் வழங்கினான். 


அப்படி மன்னர்களை புகழ்ந்து மற்றவர்களை இகழ்ந்து புரவலத்தால் வாழ்ந்தவர்கள் தான் புலவர்கள்.... அவர்கள் தான் தமிழை வளர்த்தார்களா...? இல்லை தமிழ் அவர்களை வளர்த்ததா...?

இலக்கியங்கள் உண்மை கூறியிருக்குமா..? 


இந்து மதம், ஆதிமதம் என எதுவுமே இல்லையா...? 


கங்கை.,,


சைவ சிவனின் மனைவியா...? 

வைணவ மகாபாரத பீஷ்மரின் தந்தை சாந்தனுவின் மனைவியா...?


..............தொடரலாம்  அடுத்த பதிவில்.....


                                      - சாய்.S.சுரேஷ் குமார்

                                          +91 - 8344 00 2855



Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்