Malegaze....(VI)
வணிகம் தோன்றும் முன்,
களவு எனும் திருட்டு, வழிப்பறி தொழிலுக்கு அவசியமில்லை...
களவு என்பது காதலில் துணையொடு இணைந்திருந்து மகிழ்ந்திருப்பது.
மலையில் சேயர்களாகி வேட்டையாடி, ஆடை அறிமுகமாகும் முன் துணையோடு இணைந்திருந்து மகிழ்ந்திருந்தார்கள்...
காடுகளில் ஆயர்களாகி/இடையர்களாகி கால்நடைகளோடு மேய்த்தலுக்கு நாடோடி வாழ்க்கை முறையில், ஆடை அறிமுகமாகிய பின், துணையோடு இணைந்து மகிழ்ந்திருக்க காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
அதனால் நாடோடி வாழ்க்கையில் கள் உண்டு களித்திருந்தார்கள்...
பாலை என்பது கோடைகால, மழையற்ற தன்மையில் மலையும், காடுகளும் அடையும் பசுமை மாற்றமே.
நிரைகளையும், நாடோடி வாழ்க்கையும் கொண்ட ஆயர்கள்/இடையர்கள், மேய்த்தல் பொருட்டு வெவ்வேறு இடங்களுக்கு பயணப்பட, ஒரே துணை என்ற நிலையை கடந்து, பிரிதலுக்கு பழக்கப்பட்டார்கள்...
கள் - பனை குடும்ப மரங்களிலிருந்து இறங்குவது. (களிப்பு - மகிழ்ச்சி )
மள் - பிற தாவரங்களிலிருந்து இறங்குவது...
மள் + ஈகை பொருள் :- மளீகை பொருள் என்பதே மளிகை பொருளாகியது....
மள் + ஈகை பூ - மளீகை பூ என்பதே மல்லிகை பூவாகியது...
மல்லு வேட்டியும் கூட, பருத்தியிலிருந்து வந்த வேட்டி என்றானது.
வேளாண்மை, நெசவு, குயவு, மேய்த்தல், பால் பொருள் தயாரிப்பு, தச்சு, தோல் பொருள் தயாரிப்பு, பனை பொருள் தயாரிப்பு, என பிற தொழில் தொடங்கிய
சமகாலத்தில் பரவையர்களும்(பரதவர்கள்) மீன்பிடித்தல் தொழிலை விரிவுபடுத்தியிருந்தனர்....
தச்சர்கள், கருமான் துணையோடு மரக்கலங்களை தயாரித்து ஆழ்கடல் மீன்பிடித்தலை ஆரம்பித்திருந்தனர்.
சங்கு சேகரிப்பு தொடங்கியிருந்தனர்.
தேவைக்கு போக மீதமானவற்றை கொடுத்து பிற பொருட்களை கையகப்படுத்தும், பண்டமாற்று முறை வணிகம் அறிமுகமாக, வணிகர்கள் அறிமுகமாக எருதுகள்,கழுதைகளில் வணிக பயணம் செய்தார்கள்.
நிலத்தின் மீது அதிகாரம் செலுத்த சண்டைகள் தொடங்கியது. அரசு உருவாக, அரசர்கள் தனக்கு வேண்டியவர்களுக்கு நிலங்களை பகிர்ந்தளித்து, வேளாண்மை தொடர்ந்தான்.
வணிகர்கள் வணிகரீதியாக பொருட்களை பதுக்கி கொள்ள, வணிகர்களின் வணிகப்பயணங்களின் போதே அதிகாரமிழந்தவர்கள் வழிப்பறியை தொடங்கினார்கள்....
வணிகர்களும் தங்கள் வணிகபயணத்தை பாதுகாக்க வீரர்களை நியமித்தார்கள்...
அரசருக்கெதிரானவர்கள் அணிதிரள்வதை தடுக்கவே, வீரர்களை அரசர்கள் நியமித்தார்கள்...
அதன்பிறகே மற்ற நாடுகளுடன் சாத்துவணிகமும், நாவாய் வணிகமும் விரிவடைந்தது. சாத்துவணிகர்களைவிட, நாவாய் வணிகர்கள், அதிக நகரங்களுக்கு பயணப்பட, அதன்மூலம் பெற்ற மாற்றம், மற்றவர்களின் பழக்கவழக்கங்களிலிருந்து முரண்பட, நகரத்தார் என்ற அடையாளம் பெற்றனர்.
அரசுகள் அமைந்ததால், எல்லா இடங்களிலும், அதிகாரமிழந்தவர்கள், தேவைகளுக்காக திருடர்களாயிருந்தார்கள்...
கடல் வாணிபத்திலும், கடல்கொள்ளையர்கள் இருந்தார்கள்...
அரசர்கள் வணிகர்களுக்காகவே, வணிகர்களை பாதுகாக்க, படையை உருவாக்கினார்கள்... வீரர்களை அதிகப்படுத்தினார்கள்...
அதிகாரமிழந்தவர்கள் நகரத்தொடங்கி, எல்லையைத்தாண்டி வேறு பகுதியில் நிலங்களை உருவாக்கி பயிரிட தொடங்கியிருந்தனர். வணிகர்களின் பேராசை, அரசர்களை தூண்டிவிட்டு அந்நிலங்களிலும் அதிகாரம் செலுத்தும் சூழலை உருவாக்கியது.
பலர் வாழ்தல் பொருட்டு அரசர்களின் அதிகாரத்தை ஏற்றுப்பயணித்தனர். அரசனுக்கு அடிபணிந்தவரின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
மற்ற பகுதிகளைவிட பொன்னி நதிபாயும் ஆற்றுப்படுகை நெல்விளைச்சலுக்கு ஏற்றதாக அமைந்திருந்தது.
நெல்லை சொல் என்றே வழங்கினார்கள். சொல் நாடு என்பதே சோழ நாடு என்றானது.
பரையின் சேயர்களாய் சேரர்களாகி,
பாண்டியம்(எருதால்) பாண்டியநாடு கண்டு, நெல்(சொல்) விளைந்த. சொல்நாடு(சோழநாடு) கண்டார்கள்.
நிலத்தின் மீதான அதிகார வெறியும், வாணிப பேராசையும், ஒவ்வொரு பகுதிக்குள்ளும், அரசனின் அதிகாரத்திற்கு அடங்கியவர்களை அடிமைபடுத்தியும், அடங்காதவர்களை கொடுமைபடுத்தியும், அரசனுக்கு துணை நின்றவர்களுக்கும், வணிகர்களுக்கும் நிலங்களை பகிர்ந்தும்,அரசன் அதிகாரம் செலுத்த, நிலங்களை பெற்றவர்கள் மற்றவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்தினார்கள்.
அரசுகள் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்தி பேரரசுகளாக பரிணமித்தது. நிலங்களை பெற்று ஆதிக்கம் செலுத்தியவர்கள் அந்த நிலத்தின் சிற்றரசர்களாக, அதே வேளையில் பேரரசின் அமைச்சர்களாக செயல்பட்டனர்.
மலைதாண்டி, காடு கண்டு,நிலையான இருப்பிடம் பெற்றதால் உருவான அதிகார, ஆதிக்க எண்ணங்கள், முதன் முதலில் உருவானது துணைகளுக்குள் தான்.. தன் தேவையை தானே நிறைவேற்ற முடியும் என்பதால் பலர் துணை அவசியமற்றது என தனித்து இயங்கிய சூழலில்தான், அரசுகள் அமைந்தது.
இந்த அமைப்பு முறை உருவான பின்தான், இலக்கியங்கள் தோன்றியது.
துணை இல்லாமல் ஆண் தனித்து இயங்கமுடியாது என்பதைத்தான், சங்க இலக்கியங்களே உறுதிபடுத்துகிறது.
பருவமெய்தியதும் இயல்பான துணையாக இணைந்து, முரண் வரும்போது தனித்து இயங்கியிருக்கிறார்கள். அதைத்தான் சங்க இலக்கியங்கள் மரபுவழி மணம் என்கிறது.
ஏறு தழுவி, மடலேறி, பரிசம் கொடுத்து, சண்டையிட்டு, சேவை செய்து, துணங்கையாடி....துணைக்காக...,
துணையை கவர்வதற்காக,
வீரத்தை, காதலை வெளிப்படுத்தியது ஆண்தான் என்கிறது சங்க இலக்கியங்கள்....
சங்க இலக்கியங்கள் தான், நிலங்களை திணை என வகைப்படுத்தியது.
திணை என்றால் என்ன...?
திணை என்றால் ஒழுக்கம்...
ஒழுக்கம் என்பது தொடர் பழக்கம்...
அகத்திணை என்பது உள் ஒழுக்கம். அதாவது காதலை மட்டும்தான் மனதின் ஒழுக்கமாக கூறுகிறது.
ஒவ்வொரு நிலப்பரப்பில் இருக்கும் மரம்,செடி,கொடிகளை வைத்தே நிலங்களை திணை என குறிப்பிட்டனர்.
குறிஞ்சியின் அகத்திணையாக புணர்தலையும், முல்லைக்கு காத்திருத்தலையும், மருதத்திற்கு ஊடலையும், பாலையில் பிரிதலையும், நெய்தலுக்கு வருந்துதலையும் குறிப்பிடுகிறது...
மற்ற நிலங்களை விவரிக்கும் இலக்கியத்தில் நெய்தல் திணையில் ஆண் மட்டுமே மீனவன் என்ற எண்ணத்தோடு இரங்கல் என்று குறிக்கிறது.
மற்ற நிலங்களைவிட நெய்தல் திணையின் பெண்கள் சிறப்புற்றிருந்தனர்.
தனித்து இயங்கினர்.துணைகளுக்குள் நடக்கும் போட்டியோடான காதலும், தனித்துவமானது. துணையோடான கடல்வேட்டை சுவாரசியமானது.
தொண்டகம், ஏறுகோட்பறை, நெல்லரி,மீன்கோட் பறை, நாவாய்ப் பம்பை
ஆறலை, சூறைகோள் என ஐந்திணைகளுக்கு உரிப்பொருளாக பறை இருக்கிறதே...!
பறை என்றால் வெளிப்படையாக கூறுவது...
மறை என்றால் வெளிப்படைத்தன்மை இல்லாமல் மறைப்பது...
வேதத்தை கூட வெளிப்படைத் தன்மையற்றதால் மறை என்றார்கள்....
.......... தொடரலாம் அடுத்த பதிவில்.....
- சாய்.S.சுரேஷ்குமார்
+91 - 8344 00 2855
Comments
Post a Comment