Vishnu...

 #யார்_அந்த_விஷ்ணு...?


#எது_ஆன்மீகம் என்ற ஆறு பதிவுகளுக்கு காரணமான சகோதரி, விஷ்ணு யார் என்கிறார்...


#மநுவும்_பெண்களும் பதிவும் தொடரவில்லை...


சனிக்கிழமை தவறாமல் பெருமாள் கோவிலுக்கு போவதை வழக்கமாக கொண்டவர், எது ஆன்மீகம் என்ற பதிவுக்கு பின் ராமாயணம், கந்த புராணத்தை களவாடி தன் திருத்தங்களை(மநுவை) புகுத்தி ராமாயணம், என்றதை தெரிந்தேன்... கிருஷ்ணர் என்பது வியாசர் தனக்கு தானே சூட்டிய பெயர்(கிருஷ்ண த்வைபாயனர்)...


பெருமாளை வணங்கலாமா...? யார் அந்த விஷ்ணு...? தொடர்ந்து கேட்கிறார்...


பதில் சொல்வோமா இன்று...,


இந்திய வரலாறு, இந்தியா ஒரு திராவிட நாடென்கிறது... 


முதலில் கைபர் போலன் கணவாய் வழியே வந்த (ஆரியர் - யூதர்) பார்ப்பனர்கள் தங்களை நிலைநிறுத்த உருவாக்கிய புணைவுகளே புராணங்கள்... 


அதில் தன்னை எல்லா நிலையிலும் மேம்பட்டவனாக காட்டிக்கொள்ள உருவாக்கியது வேதங்கள் என்ற பெயரில் தங்களை கடவுளின் தூதுவர்களாக காட்சிப்படுத்தினர்....


அவர்கள் நுழைந்த கணவாய் சரஸ்வதி நதியுடையது, சரஸ்வதி நதிக்கு பிரம்மபுத்திரா என்ற பெயரும் உண்டு... எனவே அவர்கள் அவர்களை பிரம்மனின் புத்திரர்களாக(மகன்களாக) காட்சிப்படுத்தி கதை எழுதினர்...


ஆரிய வர்க்கத்தில் பெண் தெய்வ வழிபாடுகள் கிடையாது...ஆனால் திராவிட பாரம்பரியம் பெண் தெய்வ வழிபாடுகளை(சாக்தம்) கொண்டது..

உடனே.,இன்று பிரம்மனின் மகளை திருமணம் செய்ததாக விமர்சனம் செய்கிறோமே.. அந்த பிரம்மபுத்திரா நதியான சரஸ்வதி நதியை, சரஸ்வதி என்றும் ஞானத்தின் இருப்பிடம் என்றும்... 


பிரம்மனின் புதல்வர்களுக்கே ஞானம் உண்டென்றும் நம்ப வைத்தனர்.. 


அதை நம்பவைக்க அவர்கள் கையாண்ட யுக்தி யாகம்.... அவர்கள் இந்திய நிலப்பரப்புக்குள் நுழைந்த போது கோடை காலம்,, 

அதனால் தான் கணவாய்களில் குறைந்த அளவு நீர் இருந்ததை பயன்படுத்தி நுழைந்தனர்... 


காடுகளில் தங்கிய அவர்கள்... வனவிலங்குகளிடமிருந்து தங்களை காப்பாற்ற நெருப்பை மூட்டி குழுமியிருந்தனர்... 


அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற இடையர்களுக்கு இவர்களின் செயல் விநோதமாக தென்பட்டது...


தொடர்ந்து பல நாட்கள் கோடையில் தீயை வளர்த்து இவர்கள் குழுமியிருந்த செயல் வியப்பளித்தது... அந்த பகுதிவாசிகளுக்கு இந்த தகவல் கூறி, அனைவரும் வந்த போது அவர்களின் மொழி புரியவில்லை...


இவர்களின் செய்கை மூலம் வெப்பத்தை குறைப்பதற்காக என கருத துவங்கினர்... வெப்பத்தை குறைக்க யாராவது தீமூட்டுவார்களா என ஏளனமும் செய்தனர்... 


ஆனால் தொடர்ந்து கோடை முடிவில் மழை வந்தது...அதை இவர்களுக்கு சாதகமாக்கினர்... 48 நாட்களில் பருவநிலை மாறி மழைவந்ததை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டனர்...


இன்றும் யாகம் என்றால் 48 நாட்கள் என்ற நம்பிக்கைக்கு இதுதான் காரணம்...


இந்த தகவல் கிராம நிர்வாகிகள் மூலமாக மன்னருக்கு தெரிந்தது.. அப்போது மகதத்தின் ஆட்சி....


மகத அரசர் நம்பிக்கையிழந்து மழையை நிறுத்த கூறினார்...மொழி அவர்களுக்கு சாதகமாகி போனது... அவர்கள் கூறுவது புரியாது..

இவர்கள் பதிலளிப்பதும் புரியாது...


மீண்டும் யாகம், அடுத்த 48 நாள், பருவநிலை மாறியது மழை நின்றது... மன்னனின் நம்பிக்கையை பெற்று அரசின் குரு ஆனார்கள்...


மகத நாட்டின் மன்னர்கள் சாக்த வழிபாட்டை உடையவர்கள்.. காளி தேவி உபாசகர்கள் பலியிடுதல் போன்றவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினர்...


மகதத்தில் பெரும்பாண்மை மக்கள் முல்லை நில இடையர்கள், அவர்கள் கண்ணன் வழிபாட்டை கொண்டிருந்தார்கள்...


மன்னனிடம் ஆலோசனை வழங்குவதைவிட மக்களிடம் நம்பிக்கையை வளர்க்க திட்டமிட்டு, அவர்களிடம் பிரம்மா, சரஸ்வதி, பிரம்மபுத்திரர்கள் தாங்கள் என நம்பிக்கையை வளர்க்க தொடங்கினர்..


தாங்கள் கடவுளின் குழந்தை,எங்களால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வளர்த்தனர்... 


காளிதேவி சிலைகளில் தெரிந்த பல கைகளை வைத்து, அவர்கள் உருவகபடுத்திய அத்தனை கடவுளுக்கும் நான்கு கைகளை படைக்க தொடங்கிணர்...


பிரம்மா,சரஸ்வதி,விஷ்ணு,வைஷ்ணவி தேவி(லக்ஷ்மி),தக்ஷிணாமூர்த்தி,விநாயகர், என எல்லோருக்கும் நான்கு கைகளை உருவகப்படுத்தியவர்கள் அவர்களே....


மகத மக்களிடையே இந்த நம்பிக்கை ஆழமாக பரவ தொடங்கியது... ஆரியர்களை கடவுளின் குழந்தைகளாக ஏற்றுக்கொள்ள தொடங்கினர்... 


மகத நாட்டின் அமைச்சரவையில், மன்னன் தனநந்தனுக்கு #சாணக்கியனின் ஆலோசனையால் மற்ற அமைச்சர்கள் அரசுக்கு எதிராக செயல்படுவது தெரிந்தது... சாணக்கியனை விரட்டியடித்தார்...


மகத அரசை வீழ்த்தி, தன்னை நிலைநாட்ட காத்திருந்தான் சாணக்கியன்... மற்றொரு மன்னனுக்கு உதவி செய்தால், அவனும் தன்னை விரட்டிவிட வாய்ப்புண்டு...


எனவே வேறு ஒருவன் மூலம், மக்களிடம் உள்ள நம்பிக்கையை பயன்படுத்தி, அவன் மூலம் மகதத்தை வீழ்த்த திட்டமிட்டான் சாணக்கியன்...


அதற்காக வேடர் குலத்தில் பிறந்த சந்திரகுப்தனை தயார் செய்து, சாணக்கியத்தனங்களால் மகதத்தை வீழ்த்தி வென்றான்... சந்திரகுப்த மௌரியன் மன்னனானான்...மௌரிய அரசு தொடங்கியது...


சந்திரகுப்த மௌரியன் தந்தை சூரியகுப்த மௌரியன், 


ரகு குலம் = சூரிய குலம்....

ஸ்ரீராமசந்திரன் = சந்திரகுப்தமௌரியன்


ராமாயணம் = கந்தபுராணம் + மநு...


அசோகருக்கு பின் மௌரிய அரசை ஆண்டவர் தசரதமௌரியர்...


ராமனின் தந்தை தசரதன்...


சாணக்கியனின் பெயர் விஷ்ணுகுப்தர்....


யார் அந்த விஷ்ணு.....? 

விஷ்ணு + குப்தர் ,

சந்திரன் + குப்தர், 

சூரியன் + குப்தர், 

ஸ்ரீ + குப்தர்......


சாணக்கியனும் விஷ்ணுகுப்தர்,

மௌரியனும் சந்திரகுப்தர்.....? அதெப்படி....


#நீங்க_படிச்ச_Schoolல_Headmaster_டா...


கடவுளை நம்பிக்கைக்கு மட்டும் வச்சிருந்தா, நானும் ஆதரிப்பேன்...நீ எப்போ பார்ப்பனர்கள் தான் இந்துமத காவலர்கள்னு கதை சொல்ல ஆரம்பிச்சீங்களோ...அப்போவே தயார் ஆயிட்டோம் டா, நான் படிச்சது ராஜகிரகத்துல டா....


அடுத்த பதிவுக்கு முட்டுகொடுக்க எல்லா அவதார புராணங்களையும் தெளிவா படிச்சிக்கோங்க....தொடரும்.....


                               - சாய்.S.சுரேஷ் குமார்

                                     +91 - 8344 00 2855

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்