கண்ணகி காதல்

 

#சிலப்பதிகாரமும்_கண்ணகியும்...

#ஒரு_ஆய்வியல்...

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டோம்....

தேனி மாவட்ட கூடலூர் வனப்பகுதியில், சேரளமாவட்ட இடுக்கி வனப்பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். சித்திரா பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் நிகழ்வுக்கு ஒன்று கூடுவோம் என செட்டியார் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது....

கண்ணகிக்கும் சாதி சாயம் பூச வேண்டிய அவசியம் ஏன் வந்தது...?

மாநாய்கன், மாசாத்துவன் இருவருமே வணிகர்கள் என்ற குறிப்புகள் மூலம் வணிகர்கள் என்ற காரணத்திற்காக செட்டியார்கள் சாதி சாயம் பூசுகின்றனர்.

செட்டியார்கள் மட்டுமா வாணிபம் செய்தார்கள்...?

#ஸ்ரேஸ்தியார் என்ற ஆரிய சமஸ்கிருத சொல் (செல்வம் உடையவர்) மறுவி செட்டியார் ஆனது.

செல்வம் படைத்தவர் என்பதே செட்டியாரின் பொருளே தவிர, வாணிபர் என்று அது பொருள் தராது.

பக்தி இலக்கியங்களின் வருகைக்கு முன், சைவ,வைணவ ஆதிக்கங்களுக்கு முன், கொல்லாமையை வலியுறுத்திய பௌத்த, சமண மதத்தவர்களே, பண்டைய தமிழகத்தில் வாணிபத்தில் ஈடுபட்டார்கள். அரசர்களோ, படையெடுப்புகளோ செய்ய முடியாத, மதங்களையும், அதன் நம்பிக்கைகளையும் வணிகர்களே பிறநாடுகளுக்கு கொண்டு சென்றார்கள்.

சரி, சிலப்பதிகாரத்திற்குள் வருவோம். சிலப்பதிகாரம் யார் இயற்றினார்...? இளங்கோவடிகள்...

இளங்கோவடிகளுக்கு மாசாத்துவான், மாநாய்கன், கோவலன், கண்ணகி, மாதவி யாரையாவது தெரியுமா...?

தெரியாது,
இளங்கோவடிகள் அவரது அண்ணன் சேரமன்னன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது,

கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார்.

கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர,

மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.

சரி சீத்தலை சாத்தனார் யார்...?

சிலப்பதிகார கோவலன் - மாதவிக்கு பிறந்த மகள் மணிமேகலை குறித்த காப்பியம் படைத்த,மதுரை கூலவாணிகன், சமண மத சீத்தலை சாத்தனார்.

மாநாய்கன் கண்ணகி தந்தை பெயரா...?

நாவாய் எனும் நீர்வழிகலன் செலுத்துபவர்கள் நாய்கன் என அழைக்கப்பட்டார்கள். நாய்கன் என்னும் சொல் நீர்வழி தொழில் செய்பவர்களைக் குறிக்கும்.

உறையூர்ப் பொருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.  இந்தப் புலவரின் தந்தை ‘உறையூர்ப் பெருங்கோழி நாய்கன்’ எனப் போற்றப்பட்டவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை.

பெருங்கோழி என்னும் சொல் கோழியார் எனவும் வழங்கப்பட்ட உறையூரைக் குறிக்கும்.  இவன் காவிரியாற்றைக் கடக்க நாவாய் ஓட்டி உதவிய வணிகன்.

அந்த நாய்கனின் (கடல்வழி வணிகனின்) தலைவனை #மாநாய்கன் என்பர்.

மாசாத்துவன் என்பது கோவலனின் தந்தை பெயரா...?

தரை வாணிகக் குழுவுக்குச் சாத்து என்பது பெயர். சாத்து வணிகர்கள் ஆகையால் சாத்துவன் எனப்பட்டனர்.அவர்களின் தலைவனை #மாநாய்கன் என்றனர்.

மற்றபடி அவர்களின் பெயர்கள் எந்த இடத்திலும் கூறப்படவில்லை.

சிலப்பதிகார கதை மாந்தர்கள் சரி, கதை எங்கிருந்து வந்தது..?

எகிப்திய புராணங்களின் படி தாய்கடவுளாக கருதப்படும்,
இசிஸ்(Isis) மற்றும் அவரது சகோதரனான ஒசிரிஸ்(Osiris) ஐ காதலித்து மணக்கிறார். Osiris தனது மற்றொரு சகோதரனான சேத் என்பவரால் கோவலனைப்போல் கொல்லப்படுகிறார். அதன்பிறகு தனது மந்திர சக்தியால் உயிர்பிழைக்கச் செய்து, அதன்மூலம் குழந்தை பெற்று விட்டு, கணவர் மீண்டும் இறக்க, அந்த குழந்தை மூலம், தனது கணவனை கொன்ற சேத்தை கொலை செய்கிறாள்...

இதுதான் சிலப்பதிகாரம் எழுத தேவைப்பட்ட மூலக்கதை...

இந்தக்கதை எப்படி சேர,சோழ,பாண்டிய நாடுகளுக்குள் வந்தது...?

சேரள நாட்டில் உள்ள இன்றைய கொச்சி நகரம், பண்டைய ரோம, கிரேக்க வரைபடங்களில் முசிறிஸ் என பதிவாகியுள்ளது.

முசிறிசுக்கும் எகிப்து, ரோம், கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கும் இடையே வணிகம் நடந்ததற்கான சான்றுகள் நிறைய உள்ளன. பண்டைய காலங்களில் மாலுமிகள் கடல் பயணத்தின் போது தங்களை இசிஸ்(Isis) தெய்வம் காப்பதாக நம்பியிருக்கின்றனர்.

அப்படி சேரள கடல் வணிக குழுக்கள் (நாய்கனின்) நம்பிக்கைக்குரிய கடவுளாக இசிஸ்(Isis) உருமாற்றம் அடைகிறாள்.

அப்படி சேர கடல்வழி வணிகனின் (நாய்கனின்) மூலம் பரவிய நம்பிக்கை, சேரள - பாண்டிய தரைவழி வணிகர்கள் (சாத்துவன்கள்) மூலம் பரவ தொடங்கியது.

அதையே கொஞ்சம், கலாச்சாரம், கற்பு, பெண்ணடிமைத்தனம் எனும் ஆரிய வர்ணம்பூசி, தமிழின் இலக்கண,இலக்கிய வளங்களை பயன்படுத்தி நம்பகத்தக்க வகையில் காப்பியமாக்கினார்கள்.

12 B என்ற திரைப்படம் பார்த்திருப்பீர்கள் தானே, பேருந்தை தவற விட்டதால் ஒரு நிகழ்வும், பேருந்தை பிடித்தால் ஒரு நிகழ்வையும் ஏற்படுவதாக அந்த திரைப்படம் காட்டியிருக்கும். அதை எல்லாம் 2000 வருடங்களுக்கு முன்பே இளங்கோவடிகளும்,சீத்தலை சாத்தனாரும் செய்துவிட்டார்கள்.

கணிகையர் குல பெண்ணின் மீது ஏற்படும்,  மோகத்தால்,ஒழுக்கம் தவறி, கற்பு தவறி, மணமான ஒருவன் அவளை அடைய நினைக்க, இன்னொருவளின் கணவன் என தெரியாமல் அந்த ஆணை மட்டும் காதலித்தால், உண்மை தெரிந்து நடக்கும் நிகழ்வை சிலப்பதிகாரமும், 

அதே சூழலில் ஆணைவிட, அவன் செல்வங்களை காதலிக்கும் பெண்ணால் ஏற்படும் நிகழ்வை மணிமேகலையும் விளக்கும்.

சிலப்பதிகார கணிகையர் குல பெண் - #மாதவி
சிலப்பதிகார கற்பு தவறிய ஆண் - #கோவலன்
சிலப்பதிகார கற்பு தவறிய ஆணின் மனைவி - #கண்ணகி

மணிமேகலை கணிகையர் குல பெண் - பெயர் தெரியவில்லை
மணிமேகலை கற்பு தவறிய ஆண் - #சாதுவன்
மணிமேகலை கற்பு தவறிய ஆணின் மனைவி - #ஆதிரை

சிலப்பதிகாரத்தில் மாதவியிடம் ஊடல் கொண்ட கோவலன் கண்ணகியை நாடி வருகின்றான். தன் அன்பு மனையாளின் அழகிய முகம் வாடி இருப்பதைக் கண்டு வருந்தினான்.

“குலம் தருவான் பொருள் குன்றம் தொலைந்த
இலம் பாடு நாணுத் தரும் எனக்கு என்ன” –
என்றான் கோவலன்.

சொத்துக்கள் இழந்ததை அவமானமாகக் கருதினான் என்பதை இளங்கோவடிகள் அழகாக தெளிவுபடுத்தியுள்ளார்.

வருந்துகின்ற கணவனிடம் கண்ணகி,

“நலம் கேழ் நகைமுகம் காட்டி
சிலம்பு உள கொண்மின்”
என்று புன்முறுவலுடன் கூறுகின்றாள்.

நல்ல பண்புகளும், குணங்களும் கொண்ட கணவன் தப்பு செய்தாலும், அவனை பெண்கள் வெறுப்பதில்லை. திருத்தி நிச்சயம் தன் தவறை உணர்வான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள்.

அதே போல்,ஆதிரையின் கணவன் சாதுவன் ஆதிரையை விட்டுவிட்டு ஒரு கணிகையிடம் வாழ்கின்றான். தன் உணவிற்கு அவள் கையை நம்பி வாழ்கிறான். வட்டாடல் சூதாடல் இவைகளில் பொருள் எல்லாவற்றையும் இழக்கிறான்.

இவனை பேணிய கணிகை சாதுவனிடம்,

“பிறர் நலங்காட்டி காணம் இலி
என கையுதிரிக் கோடலும்” -
எனக் கூறி அவனை விரட்டி விடுகிறாள்.

சொத்துக்களை இழந்த சாதுவன் ஆதிரையை பார்க்க வருகின்றான். கிழிந்த புடவை, மஞ்சள் கயிற்றுடன் நின்ற அவள் கோலத்தைப் பார்த்து அழுது புலம்புகின்றான்.

“ஆதிரை நான் எத்துணை தீயவன் மங்கலத் தோற்றத்தில் தெய்வச் சிலையாக நின்ற நீ இன்று சகலமும் அழிந்து சிதைக்கப்பட்ட சிலையாக நிற்கிறாய். அன்று அக்னி சாட்சியாக உன்னை கரம்பிடித்து ஏழு அடி வலம்வந்து உன் கழுத்தில் திருப்பூண் பூட்டியது உன்னை இப்படி நிற்க வைக்கத்தானா?” –
என்று கூறுகின்றான்.

சாதுவன் இழந்த செல்வங்களை திரும்பப் பெறவும் அவன் வாழ்ந்த புகார் நகரில் வளமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற வைராக்கியத்தில் திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப மரக்கலத்தில் சில வணிகர்களுடன் பயணம் மேற்கொள்கின்றான்.

இதில் எங்கே ஆரிய பார்ப்பனியம் கலந்தது...? ஏன் தமிழில்  ஒழுக்கம், கற்பு, இல்லையா...? இதுதானே உங்கள் அடுத்த கேள்வி...

இல்லறவியலில் களவும், கற்பும்,அதை சார்ந்த ஒழுக்கமும்,தமிழரின் வாழ்வியலில் பொதுவுடைமை. அதில் பாலின பாகுபாடு கிடையாது... அதற்குள் புகுந்த பார்ப்பன அயோக்கியதனங்கள் விமர்சனம் பெறும் போது அதை ஏற்றுக்கொண்ட நூல்களும் விமர்சனம் பெறும்.

மனுஸ்மிருதி, அத்தியாயம் 2 ஸ்லோகம் 213, 214.,அத்தியாயம் 5 ஸ்லோகம் 154, அத்தியாயம் 9 ஸ்லோகம் 78,

தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.

புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.

கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.

இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.

மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.

இந்த அத்தனையும் ஒருங்கே அமைந்த காப்பியங்கள் சிலப்பதிகாரமும், மணிமேகலையும்...

மணிமேகலையில் ஆதிரை, சாதுவன் இறந்ததாக கருதி,தன்னை தீக்கிரையாக்க துணிகிறாள். சிலப்பதிகாரத்தில் கிருஷ்ணர், பலராமர் கோவில்கள் இருந்ததாக கூறுகிறது. இந்திரவிழா நடைபெற்றதாக கூறுகிறது.
ஆயர்கள் மாயோன் வழிபாட்டையும், வேளீர்கள் வேந்தன் வழிபாட்டையும் ஏற்றுக்கொண்டார்கள்,
விழா எடுத்தார்கள் சரி,
அது என்ன பலராமர்...?

ஏர் ஏந்திய கடவுளை வைதீக பார்ப்பனர்கள் பலராமர் என மடைமாற்றம் செய்தார்கள்....

வைதீக பார்ப்பன மதங்களையும், அவற்றின் சடங்குகளையும், வர்ணதர்ம கோட்பாட்டையும் எதிர்த்து உருவான மதங்களாக கருதப்படும், பௌத்த,சமண மதங்களின்,காப்பியங்களான சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் இந்த மனுஸ்மிருதி எப்படி நுழைந்தது...?

... தொடரலாம் மற்றுமொரு பதிவில்....

                                      - சாய்.S.சுரேஷ் குமார்
                                            +91 - 8344 00 2855


.

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்