சிலப்பதிகாரம்

 #சிலப்பதிகாரமும்_கண்ணகியும்...


#ஒரு_ஆய்வியல் #தொடர்ச்சி


சென்ற பதிவில், 


சேரள - பாண்டிய வாணிப தொடர்பால், நாய்கன்களின் நம்பிக்கைக்குரிய எகிப்திய இசிஸ்(Isis) தெய்வம், 


சாத்துவன்கள் மூலம் சேரள - பாண்டிய நாடுகளுக்குள் பரவிய நம்பிக்கைகள், அதை மதுரை கூல சாத்து வாணிகர் சீத்தலை சாத்தனார்(சாத்து +அனார்) மூலம் சேர இளவல் இளங்கோவடிகள் அறிய காப்பியமானதை அறிந்தோம். 


இதில் சோழநாடு குறிப்பிடப்பட வேண்டிய அவசியம் யாது...?


சேரன் செங்குட்டுவன், இளவல் இளங்கோவடிகளின் தாயார் மணங்கிள்ளி என்ற நலங்கிள்ளி நற்சோனை சோழநாட்டு இளவரசி ஆவாள்.


சோழ மன்னனும் தனது தாய்வழி தாத்தாவுமான காரியாற்று துஞ்சிய நெடுங்கிள்ளியின் மறைவுக்குப் பின்னர், சோழ அரியணையை கைப்பற்றுவதில் வாரிசுகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது. 


அங்கு சென்ற செங்குட்டுவன், சோழ வாரிசுகள் #சேத்சென்னி உள்பட அவனது சகோதரர்கள் 9 பேருடன் போர் தொடுத்து, நேரிவாயில் என்ற இடத்தில் வென்றான், பின்னர், தனது மாமன் ராஜசூயம் வேட்டநற்கிள்ளிக்கு அரியணையை பெற்றுத் தந்தான்.


[ இந்த சேத் என்ற பெயர் இசிஸ்(Isis) புராண கதையில், இசிஸின் சகோதரனும், கணவருமான ஓசிரிஸ்(Osiris)ஐ கொன்றவன் பெயர். இந்த சேத்தும் ஒசிரிஸின் (Osiris) பங்காளிதான், சேத்சென்னியும் நற்கிள்ளிக்கு பங்காளிதான், இருவருமே சகோதரி மகனிடம் (மருமகனிடம்) தோற்றார்கள். ]

 

செங்குட்டுவன் ஏறத்தாழ இருபது வயதிற் பட்டம் பெற்றான். ஐம்பது வருட காலம் அரசாண்டான். அவன் சிறந்த போர் வீரன். 


தன் தாயும், இமயம் வென்ற இமயவரம்பன் சேரலாதன் மனைவியுமான நற்சோணை என்பவள் இறந்தவுடன், அவளுக்கு பள்ளிப்படை சமைக்கத்தக்க கல்லை இமயத்திலிருந்து எடுத்துவரச் சென்றான். 


கனகன், விஜயன் என்னும் இரு இமயமலைச் சாரலில் ஆண்ட மன்னர்களை ஆரிய அண்ணல் என்று பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடுகிறது. 


இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில் பொறித்தபோது தம் போன்ற மன்னர் அங்கு இல்லை என்று ஆரிய அண்ணல் கனகனும், விஜயன் தம்பட்டம் அடித்துக்கொண்டதாகவும் மேலும் தமிழ் மன்னர்களை அவதூறு பேசியதாகவும்,


பொதிய மலையில் இருந்து கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்கும் பராக்ரமத்திற்கும் சான்றாகாது என்று எண்ணிய சேரன் செங்குட்டுவன், 


தமிழ் மன்னர்களை அவதூறாகப் பேசிய வடநாட்டு மன்னர்கள் கனகன் மற்றும் விஜயனை வென்று இமய மலையில் இருந்து அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமந்து வரச்செய்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேரநாட்டு இடும்பில்பறம் என்னுமிடத்துக்குக் கொண்டுவந்து சிலை அமைத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.


இந்த நிகழ்வில், இருமுறை செங்குட்டுவன் இமயம் சென்ற வரலாறு எதுவும் இல்லை, ஒருமுறை சென்று வென்றிருக்கிறான் என்ற தகவலே அதிகம் கிடைக்கிறது.


நற்சோனைக்கும் இமயத்தில் கல் எடுத்து பள்ளிப்படை அமைத்து, கண்ணகிக்கும் சிலை அமைத்திருந்தால், நற்சோனையின் பள்ளிப்படை எங்கே...? கண்ணகியின் சிலை எங்கே...? 


மங்கல தேவி கோவிலில் எந்த சிலையும் கிடையாது...


நெடுங்காலம் கணவனுடன் வாழ்ந்து, கணவன் உயிருடன் இருந்த போதே இறக்கின்றவளை மங்கலதேவி என்பார்கள். 


கண்ணகி கோவலன் இறந்தபின், துறவு கொண்டாள், வானகம் சென்றாள் என்ற குறிப்புகள் தான் சிலப்பதிகாரம் கூறுகிறது.


சோழர்களிடம் அரசன் அரசியர் இறந்தால் பள்ளிப்படை கோவில் அமைக்கப்படுவது மரபு. 


பக்தி இலக்கியங்களின் வருகைக்கு பிறகே சைவ அடையாளங்கள் பள்ளிப்படை கோவிலில் அமைக்கப்பட்டன.  


சேயோன் வழிபாட்டோடு, தாய் தெய்வமான கொற்றவை வழிபாடும் இருந்த மலநாடான,சேரளத்தில் அமைக்கப்பட்ட நற்சோனையின் கோவிலே மங்கல தேவி கோவிலானது. பின்னாளில் கண்ணகி கோவிலானது.


தாய்க்காக சென்றதைத்தான் கண்ணகிக்கு கல்லெடுக்க இமயம் சென்றதாக உருவகப்படுத்தினார்கள் சிலப்பதிகாரத்தில்...


எகிப்திய புராண கதைகளையும், சொந்த வாழ்க்கையும் இணைத்து உருவான காப்பியமே சிலப்பதிகாரம்.


சமகாலத்தில் கண்ணகி எங்கெல்லாம் கோவில் கண்டாள்...? 


சிலப்பதிகாரம் கண்ணகி கதைகள் பரவலான பிறகு, 


சேரள பேரரசின்,கொங்கு சிற்றரசர்கள் கண்ணகிக்கு கோவில் அமைத்தார்கள்.

[ (திருச்செங்கோடு) வஞ்சி(கரூர்) நகரத்தோடு தொடர்புடையவர்கள்.]


பாண்டிய பேரரசின் சிற்றரசான, ஈழ மன்னன் கயவாகு ஈழத்தில் கண்ணகிக்கு கோவில் அமைத்தான்.


சோழ தேசத்தில் பிறந்தவளை, சோழ தேச மணமகளை, 


ஏன் சேரளமும், தலைநகரை அழித்த போதும் பாண்டியமும் கொண்டாட வேண்டும்...?


செங்குட்டுவனுக்கும், இளங்கோவடிகளுக்கும் தன் தாயை வழிபடச்செய்ய, அனைவரும் போற்றி புகழச்செய்ய ஒரு காப்பியம் அவசியமானது. 


அந்த நேரத்தில் வணிகர்களிடம் பரவிய இசிஸ் (Isis) நம்பிக்கையை, மதுரை கூல சாத்து வணிகம் செய்த சாத்தனாரை கொண்டே இரட்டை காப்பியம் செய்தார்கள்...


சேரளமும் - பாண்டியமும் சாத்து வாணிகம் செய்த பாதையை மதுரையிலிருந்து, கீழ்குயில்குடி, முத்துப்பட்டி பெருமாள்மலை, கொங்கர்புளியங்குளம், விக்கிரமங்கலம், சித்தர்மலை, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் என வழியெங்கும் வரலாற்றுச்சான்றுகள் காணப்படும் பெருவழியொன்று மதுரையில் துவங்கி கம்பம் பள்ளத்தாக்கு வரை அமைந்திருந்ததை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். 


[ இந்த பகுதிகளில் கண்ணகி, சிலப்பதிகார நம்பிக்கைகள் கொண்ட பகுதிகள்.]


மேலும் கம்பம் பகுதியில் அகஸ்டஸ் சீசர் காலத்தைய ரோமானிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளதாகவும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் குற்றாலம், தென்காசி, செங்கோட்டைக் கணவாய் வழியாக மேற்குக் கடற்கரையை அடைய உதவிய வணிகப் பெருவழியாகும்.


புதுச்சேரி அருகிலுள்ள அரிக்கமேடு, இராமநாதபுரத்தின் அழகன்குளம் ஆகிய கடற்கரையோரப் பட்டினங்களும் அகழாய்வில் கிடைத்த தடயங்கள் மூலம் வணிகத்தில் பங்குபெற்ற இடங்களாகத் தெரியவருகின்றன. 


இந்த வணிகப் பெருவழிகள் வழியாக சேரளத்தின் மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, பருத்தி ஆடைகள், கொற்கை முத்துகள், தந்தம், சந்தனம், 


பாண்டியத்தின் விலையுயர்ந்த மணிகள், மரகதக் கற்கள் போன்றவை கிரேக்கம், ரோம் ஆகிய நாடுகளுக்குக் கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதும், 


அவர்களிடம் இருந்து பொன்னும், வெள்ளியும், மதுவும் இறக்குமதி செய்யப்பட்டதைக் காட்டும் வகையில் அந்நாடுகளின் நாணயங்களும் அகழாய்வுகளில் கிடைத்து வருகின்றன.


உண்மையான கண்ணகி கோவில், நாய்கன்களும்,சாத்துவன்களாலும் நம்பப்பட்ட இசிஸ்(Isis) எங்கிருக்கிறது...?


முசிறிஸ் என்றழைக்கப்பட்ட கொச்சிக்கு அருகே கண்ணகிக்கு ஒரு கோவில் உள்ளது. இது எகிப்திய கட்டடக்கலையில் கட்டப்பட்டது. இதனை குரும்பாதேவி கோவில் என இன்றும் மக்கள் அழைக்கின்றனர். 


கண்ணகி கோவிலான இந்த கோவிலும், எகிப்தில் உள்ள இசிசுக்கான கோவிலும் ஒரே மாதிரியான அமைப்பில் கட்டப்பட்டுள்ளன. 


இந்த கோவிலில் ஒரு ரகசிய அறை உள்ளது. இந்த அறையைக் கிழக்கு மேற்காக ஒரு சுரங்கம் இணைக்கின்றது. அந்த சுரங்கத்தின் வாசலின் இருபுறமும் குதிரை சிலைகள் பாதுகாப்புக்கு நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடப்பதற்கு வசதியாக ஆங்காங்கே சூரிய ஒளி படுமாறு அந்த சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த அமைப்பு அப்படியே எகிப்தில் உள்ள இசிஸ் கோவிலிலும் எதிரொலிக்கிறது. 


மழைக் காலம் தொடங்குவதற்கு முன் இந்த குரும்பாதேவி கோயிலில் பரணி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 


இதே காலத்தில்தான் இசிஸ் தெய்வத்தின் சடங்குகளும் கோலாகலமாக இன்றும் எகிப்தின் கடற்கரையோர பகுதிகளில் நடக்கின்றன. 


இந்த இரண்டு விழாக்களும் ஒரே காலத்தில் நடப்பதைத் தற்செயலான நிகழ்வாகப் பார்க்க முடியாது. 


தேனி - கேரள மாநில எல்லையான பளியங்குடியில் வேட்டை தொழிலை பூர்வீகமாக பளியர்கள் எனும் பழங்குடியினரால் முதலில் கொண்டாடப்பட்ட, கொற்றவை வழிபாடுகள்...,


பக்தி இலக்கியங்கள் வருகைக்குபின் அம்மன் வழிபாடுகளாக உருவகிக்கப்பட்டு, மங்கலதேவி அம்மன், கண்ணகி அம்மன் என பெயர் பெற்று, அம்மன் வழிபாடுகளுக்குரிய பங்குனி, சித்திரை மாதமாகி, கடைசியில் சித்ரா பௌர்ணமியாகி போனது.

பொதுவழிபாடாக மாறி போனது.


அதே சமகாலத்தில் பக்தி இலக்கியங்களின் வருகையால், மகாபாரத கதாநாயகி திரௌபதி(பாஞ்சாலி)யும் அம்மனாகி அதே தினத்தில் சோழநாடு, பல்லவநாடுகளில் வழிபாட்டை பெறுகிறாள்....


ஏனிந்த முரண்...?


................தொடரலாம் மற்றொரு பதிவில்.....


                                      - சாய்.S.சுரேஷ் குமார்

                                            +91 - 8344 00 2855



Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்