மனுவும் மனிதமும்..

 #மநு_எனும்_அநீதி...


இன்று காலை ஒரு வலதுசாரி நண்பரோடான உரையாடல், பார்ப்பனரல்லாத உயர்பிரிவை சார்ந்தவர்...


மநு தர்மம் தான் நடைமுறையில் இல்லையே, இப்போது அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் தானே நடைமுறையில் உள்ளது.


திடீரென திருமாவளவன் இந்து பெண்களை விபச்சாரிகள் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா...? 


மநுவில் இருந்தாலும் நடைமுறையில் இல்லையே...


இந்து மதம் பெண்களை தெய்வமாக மதிக்கிறது, நதிகள்,பூமி, ஏன் இந்தியாவையே தாய் நாடுதான் என்கிறோம்...இது நடைமுறையில் இல்லாத மநுவை சுட்டிக்காட்டி பேசியதை கண்டிக்க வேண்டியவர்கள் ஆதரிக்கிறார்கள்...


நான் பதிலளிக்க தொடங்கினேன், 


👉 மநு நடைமுறையில் இல்லை, அரசியலமைப்பு சட்டம் தான் நடைமுறையில் உள்ளது சரிதானே,


அரசியலமைப்பு சட்டம் என்று மட்டும் சுருக்கிவிட்டால் எப்படி, 


இந்து திருமண சட்டம் 1955, 

இந்து விதவைகள் மறுமணச்சட்டம் 1856, 

சதி ஒழிப்புச் சட்டம் 1827, 

இந்து வாரிசுரிமைச் சட்டம் 1937,1956,1987,2005, என எத்தனை திருத்தம்,


இவைகளும் இவைகளில் ஏற்பட்ட திருத்தங்களும் யார் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை..


அரசியலமைப்பை வைத்து பெண்கள் பாதுகாப்பு என்றால் இந்த சட்டங்கள் யார் நலனுக்காக...?


திருமாவளவன் இந்து பெண்களை விபச்சாரி என்றார் என பொங்கும் நீங்கள், 


ஏன் பால் பாக்கெட் சேகர், பத்திரிக்கை துறை பெண்கள் தங்கள் பணிக்காக எந்தவித சமரசமும் செய்யவேண்டும் என்றாரே...! அன்று என்ன செய்தீர்கள்..


திருமாவளவன் கூறியது தன் சொந்தக்கருத்து இல்லை, மநுவில் இருப்பதை கூறினார், 


ஒரு வேளை மநுவில் அப்படி இல்லை என நிருபித்துவிட்டு தானே அவரை கண்டிக்க முடியும், அதை செய்ய ஏன் இந்த திடீர் போராளிகள் தயார் இல்லை...


ஆனால் சேகர் தன் சொந்த கருத்தை, பெண் நிருபர்களுக்கு எதிராக பயன்படுத்தினார், ஏன் பொங்கவில்லை...


என் சமூக பெண்களை பூநூல் போட்டவன் வேசி எனலாம் தப்பில்லை, 


ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவன் அப்படி மநுதர்மத்தில் எழுதியிருக்கிறது என கூறினால் தவறா..?


இதற்கு பெயர் தான் மநுதர்மம், அரசியலமைப்பு உதட்டளவிலும், மநு தர்மம் செயலளிவிலும் உள்ளதை காட்டவில்லையா...? 


பிராமணனின் செயலுக்கு இந்த அளவு எதிர்ப்பு இருந்ததா..?


பாவாடை சேகர் மீது வழக்கு தொடுக்க எந்த அஸ்வத்தாபனுக்கும் துணிவு இல்லையே...


தேசிய கொடியை அவமதித்தான், திலீபனுக்கு ஒரு நீதி, சேகருக்கு ஒரு நீதி..


அந்த நாயின் உரையாடல்களில் பெண்களின் பாவாடை என்று பல இடங்களில் வக்கிர விமர்சனம் செய்தான், அது பெண்களை அவமதிக்கும் செயல் இல்லையா..?


கல்யாண் என்ற நாய் ஒருவன், சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டிற்கு எதிரான பெண்ணை பொதுவெளியில் பெயர், முகவரி கேட்டு மிரட்டினான்...என்ன செய்தீர்கள்...?


காட்டைவித்து கள்ளு குடிச்ச, என ஒரு சமூகத்தை குறிக்கும் வகையில் விமர்சனம் செய்தானே, என்ன நடந்தது..,


இங்கு விமர்சனம் செய்வதற்கு கூட தகுதி வேண்டும், கருத்து சுகந்திரம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமை, அந்த உரிமையை பறிக்க பொதுவெளியில் மிரட்டியவரை என்ன செய்தது...


அரசு, திருமாவளவன் மீது வழக்கு ஆறு பிரிவுகளில்... 


உடன்கட்டை ஏறுதல் எனும் கொடும் பழக்கம் நடைமுறையில் இருந்தது எந்த மதத்தில்...


சைவம்,வைணவம்,காணபத்தியம்,சாக்தம்,கௌமாரம்,பௌத்தம்,சமணம், என எல்லா சமய  நிகழ்வுகளிலும் உடன்கட்டை நிகழ்வுகள் இல்லை...


இன்னும் சொல்லினால் பார்ப்பனிய புராணங்களில் கூட, பாண்டுவை இழந்த குந்தி உடன்கட்டை ஏறவில்லை, தசரதனை இழந்த கைகேயி உடன்கட்டை ஏறவில்லை...


ஆனால் மநுதர்மம் கொணர்ந்த இந்துத்துவம் உடன்கட்டையை புனித கடமை என நிறைவேற்ற வைத்தது,


எத்தனை கட்ட போராட்டம், ஏன் சட்டமியற்றிய பிறகும் தடுக்க முடியாமல் 1987 வரை தொடர்ந்து, அதன் பிறகு பெரும் விவாதமாகி தண்டிக்கப்பட்ட பிறகு குறைய தொடங்கியது..


பாலிய விவாகம் என்ற நிலையை மாற்றி, 8 வயது பெண்குழந்தைக்கு நடந்த திருமணத்தை தடை ஏற்படுத்தி, 14 வயது பெண்ணின் திருமண வயது என்ற போது, எதிர்த்தவர்கள் அத்தனை பேரும் அரசியலமைப்பை விட மநுவை மதிப்பவர்கள் என்பதே உண்மை, 14, வயது 18 வயதாக்கும் முன் எத்தனை கட்ட போராட்டம்...அதையும் தான் எதிர்த்தார்கள்....


இன்னும் சில கொடுமைகள் சொல்லவா, ஆணுக்கே திருமண வயதை சட்டம் நிர்பந்திக்க காரணம், சில பொருளாதார உயர்நிலை எய்தியவர்கள், சொத்துக்களை காப்பாற்ற, பராமரிக்க என்று சிறுவர்களை திருமணம் செய்தார்கள்....


பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பாலியல் தொல்லைகள், குழந்தை மறுமணங்கள் நடந்தது உண்டு...

காந்தி மிக இளம் வயதில் திருமணம் செய்தவர்..


ஆனால் ஆணுக்கு மறுமணமோ,பலதார மணமோ நடைமுறையில் இருந்தது.. பெண்ணுக்கு உடன்கட்டை என்பது தான் மநு விதித்தது...இந்துத்துவம் சொன்னது...


முத்தலாக் சட்டத்தை எதிர்ப்பதற்கு முன், 


அவர்களும் பலதார முறையில் வாழ்ந்தார்கள்...அங்கும் அடிமை முறையில் பெண்கள் நடத்தப்பட்டார்கள்..


நாளடைவில் பல மனைவிகளுடன் வாழ்ந்தால் வருமானத்தை சரியாக பங்கிட வேண்டும்..அனைத்து குழந்தைகளும் வாரிசாக கருதப்படும்.. 


விருப்பமில்லாமல் வாழ்பவர்கள் தலாக் கூறி பிரியலாம் என்றிருந்தது, அவ்வாறு பிரிந்தால் எந்த வித ஜீவனாம்சம் கோர உரிமை மறுக்கப்பட்டது..... இதை தவறாக பல ஆண்கள் பயன்படுத்தினர்... 


நாளடைவில் இஸ்லாமியத்தில் விபச்சாரம் பெருக தொடங்கியது... அதன் பிறகு, இஸ்லாம் விபச்சாரத்தை கடுமையாக எதிர்த்தது, அதற்கு காரணமான தலாக் முறையில் பல மாற்றங்களை முன்னெடுத்தது...


பிரிவதற்கு தயாரானவர்கள் அறிவிப்பு செய்து குறிப்பிட்ட கால எல்லை நிர்ணயித்து மூன்று முறை தலாக் கூறி பிரியலாம்... இந்த கால இடைவெளி தம்பதிகளின் மனமாற்றத்திற்கு வழி செய்யும் என நம்பினர்... 


மனம் மாறாத தம்பதிகளில் பெண்களுக்கு மறுமண சுதந்திரம் இருந்தது... ஆனால் ஜீவனாம்சம் கோரும் உரிமை மறுக்கப்படுகிறது...


இந்த ஜீவனாம்ச காரணத்தை தவிர, முத்தலாக் எதிர்ப்புக்கு பெரிய காரணம் எதையும் கூற முடியாது...


இன்னொரு கதை ரொம்ப நாளாக அழகாக கையாளப்படுகிறது...


ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுபாட்டை இந்து மதம் விதைத்தது என்று...


முதலில் இந்த மநு புனைந்த பார்ப்பனிய புராணங்களில் பெண்ணடிமையை போதித்த ராமாயணத்தை தவிர, எல்லா கடவுளர் அவதாரங்கள் இரண்டு தொடங்கி பல மனைவிகளோடு தான் வாழ்ந்ததாக கூறுகிறது.., 


அப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை இந்து மதம் விதைத்திருந்தால், திருமணமான பெண்கள் அடிமையாக நடத்தப்படாமல் இருந்திருந்தால்,


இந்திய தண்டனைச் சட்டம்(IPC) பிரிவு 493 - 498 வரை, அவசியமற்ற சட்டமாகியிருக்கும்... 


வரதட்சணை கொடுமை, புகுந்த வீட்டில் மாமியார் மற்றும் குடும்பத்தினர் கொடுமை, கணவன் மனைவியை தாக்குவது, இரண்டாவது திருமணம் செய்ய தடை, 


இந்திய தண்டனை சட்டங்களும் மற்றும் பாலியல் நோய்களுமே, ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைபாட்டிற்கு கொண்டு வந்தது... இன்னும் மனைவிக்கு தெரியாமல் இரண்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட மனைவிகளோடு வாழும் கணவர்களும் சமூகத்தில் இருக்கிறார்கள்...


இந்துத்துவம் ஒருத்திக்கு ஒருவன் என்ற கட்டுப்பாட்டையும், பெண் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற பெண்ணடிமை தனத்தை தவிர, ஆணுக்கு எந்த கட்டுப்பாட்டையும் நியதியும் வரையறுக்கவில்லை...


ஒருவனுக்கு ஒருத்தி என வாழக் கற்றுதந்தது பாலியல் நோய்களே தவிர மதமல்ல...!


பெண்ணிற்கு மறுமணம் கிடையாது, கணவனை பிரியக்கூடாது, சொத்து கிடையாது, விதவைகள் அபசகுணங்களாக கருதப்பட்டனர்.. இது தான் இந்து மத கலாச்சாரம்...


மநுவின் அத்தியாயங்களை பலரும் முகநூலில் பதிவிட தொடங்கிவிட்டனர், நான் பெண்ணடிமை குறித்து மநு போதித்ததை எழுத விரும்பவில்லை...மநு,அர்த்த சாஸ்திரம் என பெண் குறித்து பார்ப்பணியம் கூறியதை படித்தே தெரிந்து கொள்ளுங்கள்...


நான் நேரடியாக கூறுகிறேன், ஒவ்வொரு அர்ச்சணையின் போதும், பிராமணன் உன்னை வேசிமகன் என்கிறான் நம்புவீர்களா...?


ஏக மாதா பகு பிதா சூத்திர, அந்த மந்திரங்களை கேட்டவர்களை விட நான் கூறுவதை நிச்சயம் கேட்டிருப்பீர்கள்...


நாம தேஸ்ய - நாமம் என்றால் பெயர், தேசிய என்றால் - விலைமகளின் பிண்டம்...


தேசி என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் விலைமகள்...இது சமஸ்கிருத தழுவலோடு இந்தியில் இன்னும் தொடர்கிறது... 


தமிழில் தேசிய, தேசியம்,என்ற வார்த்தைகளின் அர்த்தங்கள் வேறு சமஸ்கிருத அர்த்தம் வேறு...


(சந்தேகம் இருந்தால், Desi என Google search செய்யவும்... அது கண்டிப்பாக பாலியல் தொடர்புடைய செக்ஸ், போன்ற பல அர்த்தங்களை காட்டும்...)


மநு நடைமுறையில் இல்லை, அரசியலமைப்பு படி தான் நடக்கிறது...


பெண்கள் சொத்துரிமை வழங்கும் சட்டம் 2005 ல் நடைமுறைக்கு வந்த போது எதிர்த்தவர்கள், 14 ஆண்டுகள் அதை எதிர்த்து வழக்கு நடத்தியிருக்கிறார்கள் மநு ஒழிந்துவிட்டது நம்புங்கள்....


பெண்களுக்கு வேலை வாய்ப்பு, மற்றும் தேர்தலில் பாலின மக்கள் தொகை அடிப்படையில் வாய்ப்பு மறுப்பார்கள்... 


30, 33% என பிரதிநிதித்துவம் தந்த திராவிட இயக்கங்களை, மதத்தின் பெயரை சொல்லி, பெண்களை அவமதிக்கும் இயக்கமாக காட்டுவார்கள்...நம்பி மறுபடியும் வீட்டுக்குள் முடங்குங்கள்...


திருமாவளவன் இந்து பெண்களை விபச்சாரி என்று சொன்னான், சொன்னான் என்பவர்கள், 


மநு தர்மத்தில் அப்படி குறிப்பிடவில்லை என கூறவில்லையே, 


அவர்கள் ஒரு அத்தியாயம் காட்டினால், நீங்கள் அதை மறைக்க வேறொரு அத்தியாயம் காட்டுகிறீர்கள்...


அவர்கள் காட்டும் அத்தியாயம் பெண்களை அவமதிக்கவில்லை என மறுக்க முடியுமா...?


ஈரோடு இராமசாமி நாயக்கர்  இந்து கடவுளை அவமதித்தார்..கடவுள் மறுப்பாளர் என பெரியாரை ஏளனம் செய்பவர்கள்...


நாதுராம் கோட்சே, கோவால்கர் நாத்திகர்கள் தானே அவர்கள் எப்படி இந்து மத காப்பாளர்கள் ஆனார்கள் என்று விளக்குவார்களா...?


கடவுளை மறுப்பதற்கு கூட பூநூல் வேண்டுமா புண்ணாக்குகளே..?


குழந்தை திருமண சட்டம் ஆங்கில அரசால் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு கொண்டுவரப்பட்டது, அந்த சட்டத்தை கொண்டு வர காரணமானவர் குஜராத்தை சேர்ந்த மலபாரி, 


5 வயது பிஞ்சுக்கு திருமணம்,  8 வயது சிறுவனுடன் அதற்கு மந்திரம் என கூறி காமசூத்திரம் கூறி அனுப்பிவிடுகின்றனர் , 8 வயது சிறுவன் 5 வயது பிஞ்சிடம், அத்தனை முறைகளையும் முயன்றதால் இறந்துவிட்டது என கண்ணீர் கடிதம் எழுதினார்...


ஆங்கில அரசு விசாரித்து சட்டத்தீர்மானம் நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வரும் முன் எத்தனை கட்ட போராட்டம்... அதற்காக மலபாரியின் குடும்பம் சந்தித்த இன்னல்கள் சொல்லமுடியாது... 


OBC இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டு வந்த V.P சிங் அரசை கவிழ்த்து, பல்கலைகழக உயர்சாதி மாணவர்கள் போராட்டம் செய்து, தீக்குளிப்பு நாடகம் நடத்தி, 


(இந்தி எதிர்ப்பு, போன்ற பல கட்டங்களில் தீக்குளித்து இறந்த பலரை தெரிந்தவர்கள்)


OBC இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கோஸ்சுவாமி என்ற மாணவன் தீக்குளித்தான், ஆனால் உயிர் போகாதவாறு...


அதனால் உச்சநீதிமன்றம் தானாக OBC இட ஒதுக்கீட்டை வழக்காக்கியது.. 


இந்த OBC இட ஒதுக்கீட்டின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும், 


இந்து என்ற எண்ணத்தை , இட ஒதுக்கீட்டை மறக்கடிக்க கையாண்ட யுக்தியே, ரத யாத்திரை...


தடை மீறி ரத யாத்திரைக்காக கைதானால், இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட போராடியவர் கைது..


அத்வானி இந்து என்றால், லல்லு பிரசாத் யாதவ் இந்து இல்லையா....?


அடுத்து பாபர் மசூதி இடிப்பு, கரசேவகர்களாக வாருங்கள் என்று அழைத்து...


நல்ல வேளை இவர்கள் எதிர்பார்த்தது நடக்காமல் நரசிம்மராவ் பிரதமர் ஆனார்..


அதனால் OBC இட ஒதுக்கீட்டில், மக்கள் தொகை பரவல் போன்ற பல்வேறு காரணிகளை வலுவாக வைத்து 1993ல் இட ஒதுக்கீடு உறுதியானது...


இன்றுவரை OBC இட ஒதுக்கீடு கண்ணில் விழுந்த மண்ணாய் அவர்களுக்கு உறுத்திக் கொண்டிருக்கிறது... 


ஒரு பக்கம் OBC இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என்கிறான்... அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை காலம் தாழ்த்துகிறார், மாநில அரசின் ஒப்புதல் இன்றி சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் சூரப்பாவை வைத்து விளையாடுகிறார்கள்...


இன்னொரு புறம் கந்த சஷ்டி கவச விமர்சனம், கருப்பர் கூட்டம், திருமாவளவன் என, இந்து என்ற உணர்வை தூண்டி திசைதிருப்புகிறான்...


மருத்துவ படிப்பில் OBC இட ஒதுக்கீட்டை மறுத்த போது எதிர்த்து போராட வேண்டிய OBCக்களை மத நம்பிக்கையை வைத்து மூளைச்சலவை செய்கிறான்...


முட்டாள்களா நீங்கள், அவன் எதிர்க்கும் திராவிட இயக்கங்கள் இல்லையென்றால் OBC இட ஒதுக்கீடு இல்லையே...


ஏன் உணர மறுக்கிறீர்கள்....?


இறைவன் கோவில்களில் வாழ்வதில்லை, அவரவர் உள்ளங்களில் வாழ்கிறான் என்ற நம்பிக்கையோடு மதவாதத்தை வேரறுப்போம்...


                             - சாய்.S.சுரேஷ் குமார்

                                  +91 - 8344 00 2855

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்