தீபாவளி

 #தீபாவளி_2022


நரகாசூரன் யார்..? 


(நரன் - மனிதன்)


வராக அவதாரம்(பன்றி) - பூமா தேவிக்கும் பிறந்தவன்..


மனு தர்மப்படி,

பெண், காம எண்ணங்களை கட்டுப்படுத்த முடியாதவள்.,அது விலங்குகள் என்றாலும் கூட ,


என்று எழுதி வைத்ததை 


எல்லா புராணங்களிலும், கடவுள் அவதாரம் எடுத்தார் என்று இறை நம்பிக்கையை வைத்து, பெண்ணை காம பொருளாக நம்ப வைத்தார்கள்.


கூர்மம் - மோகினி,

வராகம் - பூமா தேவி,

பரசுராமர் - ரேணுகா தேவி,

ராமர் - தசரதனின் மனைவிகள் அஸ்வமேத யாகம் எனும் பெயரில் குதிரைகளோடு....  அகலிகை  

கிருஷ்ணர் - மச்சகந்தி, அம்பிகா, அம்பாலிகா, பணிப்பெண்,


என ஆயிரம் கதை சொல்லி, பெண் காமத்திற்கானவள்..

என எழுதி நம்ப செய்தார்கள்... 


பெண்களையும், சூத்திரர்களையும் சுற்றி மட்டுமே இந்த அவதார புராணம், வேதம் எல்லாம் எழுதப்பட்டது.


சூத்திரர்களை மட்டுமே மனிதன்,அசுரன் என்று புராணங்கள் அடையாளம் செய்தன. மற்றவர்களை தேவர்கள்,ரிஷிகள், முனிவர்கள், என்று அடையாளம் செய்தனர்.


மனிதர்களை துன்பப்படுத்தியதர்க்காக எந்த அசுரனையும், விஷ்ணு அவதாரம் எடுத்து கொல்ல வில்லை. 


தேவர்களை,முனிவர்களை துன்பப்படுத்தினால் அவதாரம் எடுத்து கொல்லுகிறார். 


பெண்ணுக்கும் விலங்குக்கும் பிறந்தவன் சூத்திரன் என்கிறது மனு தர்மம். அவனை நரன்(மனிதன்) என்கிறது புராணம்.


நரன் + அசுரன் = நரகாசுரன்...


அவர்கள் எழுதிய கதைகளை நம்ப வைக்க,கொண்டாட செய்ய, ஒவ்வொரு அரசிலும் ஆலோசகரான அவர்கள் விடுப்பு அளித்தார்கள். அதுவே ஓய்வின்றி உழைத்த பலரையும் கொண்டாட வைத்தது.


இன்று அரசு விடுமறை என இருக்கும் அத்தனை பண்டிகை நாட்களும் புராண கதைகளுக்கானது. 


பொங்கல் பண்டிகையை விடுமுறை நாட்களில் இருந்து விலக்க நினைத்து, ஜல்லிகட்டை தடை செய்து, அத்தனையும் போராடி தான் மீட்டோம்.

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்