சித்திரை முதல்நாள்
#சித்திரை_தமிழ்_புத்தாண்டா...?
#மலையாள_புத்தாண்டா...?
#தெலுங்கு_கன்னட_யுகாதி_புத்தாண்டா..?
தமிழ் புத்தாண்டை வாழ்த்துவதை விட விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள் ஏன்...?
கோமணம் கட்டிய ஊரில் அம்மணமாய் திரிபவனை மூடன் என்பது பழமொழி.
சரி,
அம்மணமாய் திரிந்த ஊரில் கோவணங் கட்டியவனை எப்படி பார்ப்பார்கள்...?
நாகரீகம் தோன்றிய பிறகு ஆடைவந்தது, ஆடை வந்த பிறகு அம்மணமாய் திரிவது அறிவின்மை தான்.
ஆனால் முதல் முதலில் ஆடை அணிந்த ஒருவனையும், இந்த சமூகம் மூடனாய்த்தான் பார்த்திருக்கும்...
இப்படித்தான் மாற்றி அமைத்தார்கள் அத்தனையும்...
ஒவ்வொரு மொழியும்,அது தோன்றிய வரலாற்றையும் கணக்கில் கொண்டு காலக்கணக்கீடு செய்ய அம்மொழி மக்களை ஏமாற்ற வருடப்பிறப்பு கணக்கிட முடியும்.
எப்போது தோன்றியதென தெரியாத, கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றி, உலகத்திற்கு நாகரீத்தை கற்றுத்தந்த தமிழ்மொழியின் காலத்தை எவன் கணக்கிட முடியும்...?
வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என ஒரு நாளையே சிறுபொழுதுகளாக்கி,
குளிர்காலம்,முன்பனிக்காலம், பின்பனிக்காலம்,இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்,கார்காலம், என வருடத்தை பெரும் பொழுதுகளாக்கி வாழ்ந்த தமிழினத்திற்கு,
எவன் வருடப்பிறப்பை கண்டுபிடித்தது.
குறிஞ்சியும்,முல்லையும் வசித்தவனுக்கு வேனிற்காலமும், கார்காலமும் அவசியமாகவில்லை, மாறாக அச்சுறுத்தின...
காடுதிருத்தி கழ(வு)நீர் கண்டவன், விளைச்சல் காண அவை அவசியமானது. பின்பனிக்காலத்தில் இயற்கையை வணங்கி, வேளாண்மை தொடங்கி, இளவேனிற்காலத்தில் முதல் அறுவடைக்கண்டான். அந்த அறுவடையை இயற்கைக்கு படைத்து வணங்கினான்.
அந்த அறுவடைநாள் தான் ஆரிய கதையான சித்திரை நாள்.
மலையாள புத்தாண்டு ஆவணி மாதம் தான்,கொல்லம் ஆண்டு பிறப்பு. ஆனால் ஆரிய பிராமண கதைகளை நம்பி அவர்களும் கொண்டாட தொடங்கினார்கள்...
மலை நாடான சேரளத்தில், கனிகளும், கொன்றை மலர்களும் அதிகம் விளைச்சல் கண்டது. அதைத்தான் படைத்து வழிபட்டார்கள். ஆய்க்குடிகள், கழநீ கண்டு வேளாண் குடிகளான வேணாடு, கொங்கணத்திலும் கனி காணுதலில் வேளாண் உற்பத்தி பொருட்களும் படைக்கப்பட்டது. முருக வழிபாடுகளுடன்...
வேளாண்மை கண்ட ஒவ்வொரு நிலத்திலும், அறுவடைநாள் கொண்டாடப்படுகிறது.
தெலுங்கு, கன்னட யுகாதிகளும் அதுபோலத்தான் உருவானது. இளவேனிற்கால தொடக்கத்தை அறுவடை நாளைத்தான் கொண்டாடினார்கள். (பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்த நாள்).
அஸ்ஸாமி பிஹூ, பஞ்சாபில் பைசாகி,
தமிழ்நாட்டில் பங்குனி உத்திரமாக இருந்ததைத்தான், புராண கதைகளைக்கொண்டு கடவுளர் கல்யாணநாள் என கதை சொல்லி மாற்றிப்போனார்கள்.
இயற்கையை வணங்கி, வேளாண்மை தொடங்கியதைத்தான், கதிரவனை வணங்கும் உழவர் திருநாள், தமிழர் திருநாள்.
அதற்கும் சூரியன் மகரத்தில் உச்சம் பெறும் நாள், உத்தராயணம் என கதை எழுதினார்கள். அதைத்தான் மகர சங்கராந்தி என மற்ற மாநிலங்கள் கொண்டாடின.
ஆனால் வழிபாடு வேளாண் வழிபாடுதான்.
சேரளநாட்டில், மலநாட்டில், காந்தமலையில் வாழ்ந்த மக்கள், பின்பனிக்காலத்தை வரவேற்க, வேளாண்குடிகளுக்கு வழிகாட்ட விளக்கேற்றினர்.
அதைத்தான் இன்று மகரஜோதி என்று கதையெழுதி மாற்றிப்போனார்கள்.
ஆரம்பத்தில் மலபார் பிராமணர்கள்(நம்பூதிரிகள்) புத்தாண்டாக கொண்டாடியதை, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கதை சொல்லி ஏமாற்றி, அவர்களை வழிபாட்டையெல்லாம் கொண்டாட வைத்தார்கள்.
வட மாநிலங்களுக்கு ராமனும், கிருஷ்ணனும், (மன்னர்களையும், ஆயர்களையும்) ஏமாற்ற,
ஆந்திராவுக்கு நரசிம்மன்(மனித மிருகம்), அன்னையும், பிதாவும், முன்னறி தெய்வம்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை பொய்யாக்க தோன்றிய அவதாரம் நரசிம்மன்.
கேரளாவுக்கு பரசுராமர், வாமணன்,
மன்னர்களை(சத்ரிய) அழிப்பதை லட்சியமாக கொண்ட பிராமணக்கடவுள். இறப்பில்லாதவன்.
மன்னனிடம் பிராமணன் யாசகம் என்ற பெயரில் இரந்து பெற்று,மன்னனை அழித்து, நாட்டை அபகரித்த பிராமணக்கடவுள்.
உழவனாய் கார்(பூமி) கண்டு,
பூமிக்கு தேவையான மழைப்பொழியும் காலத்தை கார்காலம் என்றும்,
மேகத்தை கார்க்குழல் என்றும்,
அந்த காலத்தை வரவேற்க கார் ஈத்த கை (கார்த்திகை) என முருகனை வழிபடும்
மாதத்தை தீபமேற்றி,
உழவு தொழிலை உருவாக காரணமான கடவுளான முருகனுக்கு கார் ஈத்த கயன் [கார்த்திகேயன்] (கழனி தந்ததால் கொண்டாடப்படுபவன்) என பெயர் தந்து,
வேளீராக
வாழ்க்கை, நாகரீகம் தொடங்கிய தமிழர்கள் வேளாண்மை தொடங்கியதை கொண்டாடவா...?
அல்லது புராணகதை நம்பி ஆரிய வழிகாட்டை மேற்கொள்வதா...?
கொண்டாடுவோம்...
தையை உழவர் திருநாளாக...!
பங்குனி உத்திரத்தை, தெலுங்கு,கன்னட யுகாதியை,அஸ்ஸாம் பிஹூவை, பஞ்சாப் பைசாகியை, சித்திரை விஷூவை அறுவடை நாளாக...!
நான் வேணாட்டான், எனவே சித்திரையை அறுவடைநாளாக கொண்டாடினேன்...
உலகிற்கு நாகரீகம் தந்த தமிழனுக்கு வரலாறெழுத எவனொருவனும் இங்கில்லை....
கதைகளை வரலாறாக்க முயற்சிக்கும், ஆரியர்களுக்கும்,ஆரிய கைகூலி அடிமைகளுக்கும் இனிய பிராமண புத்தாண்டு வாழ்த்துக்கள்....
- சாய்.S.சுரேஷ் குமார்
+91 - 8344 00 2855
Comments
Post a Comment