Politics

 #காலம்_வெல்லும்_கலைஞர்


அரசியல் பதிவுகளை, சமீபகாலமாக தவிர்த்து விடுகிறேன்.... காலையில் ஒரு நண்பர் வேண்டிக்கேட்டதற்காக....


பேரறிவாளன் விடுதலையையும், 

திமுக தலைவரை சந்தித்ததையும், பற்றி எதையும் எழுதும் மனநிலை இல்லை....


ஒரு கொலை மன்னிக்கக்கூடாதது தான்... அவர்கள் குற்றமற்றவர்கள் என கூறுவதிலும் எனக்கு உடன்பாடில்லை....


தகப்பனை இழந்த குழந்தைகளின் வலி கொடிதுதான்... இது எல்லோருக்கும் பொருந்தும் என்றால், பேரறிவாளன் விடுதலையும் தவறு....


மரண தண்டனை ரத்து செய்த போதே, மறுசீராய்வு மனு தாக்கல் செய்து கொன்றிருக்கலாமே...! 

அல்லது சிறைத்தண்டனையாவது, ஆயுள் காலத்தை கணக்கிட்டு வாதாடி பெற்றிருக்கலாமே.... உச்சநீதிமன்றம் மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியதே, அப்போதாவது எதிர்த்தார்களா...?


காங்கிரஸ் கட்சி மற்றும் பிற கட்சிகள் தேசிய அரசியலில் ஆதாயம் தேட பயன்படுத்தப்பட்ட ஒர் உபகரணமாகவே ஏழு உயிர்கள்... 


தமிழீழ விடுதலை புலிகள் என்ற அமைப்பே 1976ல் தான் பிரபாகரனால் தோற்றுவிக்கப்படுகிறது.


அதற்கு முன் ஈழத்தில் பல அமைப்புக்கள் இலங்கை தமிழரின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளது.


நெருக்கடி நிலையை காரணங்காட்டி கலைக்கப்பட்ட திமுக அரசு 1976 - 89 வரை தமிழகத்தில் ஆட்சி அமைக்கவில்லை.


1977 நாடாளுமன்ற தேர்தலில், அஇஅதிமுக காங்கிரஸூடன் கூட்டணி.காங்கிரஸ் வீழ்ந்து இந்திய ஒன்றியத்தில் காங்கிரஸ் அல்லாத கட்சியின் முதல் பிரதமராகிறார் மொரார்ஜி தேசாய்...

நாடாளுமன்ற கூட்டணி அமைத்து, தோல்விக்கு பின் கூட்டணியை முறித்துக்கொண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு, 1977 தமிழ்நாட்டில், MGR தலைமையிலான All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)   ஆட்சி அமைக்கிறது. 


நெருக்கடி நிலையின் காரணமாக இந்திய ஒன்றியமெங்கும் காங்கிரஸூக்கு எதிரான அலை உருவான நேரத்தில், ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸை எதிர்த்த, காங்கிரஸால் ஆட்சி கலைப்புக்குள்ளான, திமுக மீது எதிர்ப்பும்..... 


நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து தோல்விக்கு பின் கூட்டணியை விட்டு பிரிந்த MGR மீதான ஆதரவும் உருவாக, 


முதலாளித்துவ ஊடகங்களும், சனாதன சாதியமும் காரணமாக அமைந்தது. 


இன்றுவரை கலைஞரையும், அவரது குடும்பத்தினரையும்  எளிதாக விமர்சித்துவிட முடிகிறதென்றால் காரணம், அவர் தமிழ்நாட்டில் எந்தவொரு பெரும்பான்மை சமூகத்தின் பிரதிநிதியும் அல்ல...


ஊழல் ஊழல் என எத்தனை விமர்சனங்கள், ஆனால் ஒன்று கூட நீதிமன்றத்தில் நிருபனமாகவில்லை... ஆனாலும் விமர்சனங்கள் தொடர்கதைதான்....


இலங்கை தமிழர், இனப்படுகொலை, தமிழர், தமிழ் இனம்,குடி என பேசி திரிகிறானே செந்தமிழன் சீமான் , அவனிடம் ராபின்மெயின் ஊழல் குற்றவாளி யார் என்ற கேள்வியை மட்டும் எழுப்புங்கள்... 


தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்புகள் யாருக்காக போராடின, இந்த அமைப்புக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் யாரால் நடத்தப்பட்டன... 


இந்த கேள்விகள் ஏன் எப்பொழுதும் எழுவதேயில்லை...!


ஈழத்தமிழர்களுக்கான பிரச்சணை என்பது, இந்தியாவில் தமிழர்களும் எதிர்கொண்ட நெருக்கடிதான்.... மொழி ( இந்தியாவில் ஹிந்தி, இலங்கையில் சிங்களம்,இரண்டுமே சமஸ்கிருத கலப்பில் பிறந்த மொழிகள்) மற்றும் மதத்தால் (பெரும்பான்மை என ஏமாற்றி சனாதன சகதிகள் சுகவாழ்வு வாழ இந்தியாவில் ஹிந்துத்துவம் இலங்கையில் பௌத்தம்)....


அசோகருக்கு பின்,பௌத்தத்தை ஏற்ற மௌரிய அரசை, சதி செய்து வீழ்த்தி, கடைசி மௌரிய அரசனான பிருஹத்ரத மௌரியாவை ஏமாற்றி கொலை செய்து, அரியணை ஏறிய பிராமணன், புஷ்யமித்ர சுங்கன் ஆட்சியை கைப்பற்றி பௌத்தர்களை துன்புறுத்தினான்...


இந்தியாவில் கலிங்கம் வரை போர்நடத்தி வென்றிருந்த அசோகருக்கு, கலிங்கப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பௌத்தத்தை ஏற்க செய்தது. 

அசோகர் பௌத்தத்தை தழுவிய பிறகு, அவருக்கு பிறகு மௌரிய பேரரசை ஆட்சி செய்த அத்தனை பேரும் பௌத்த மதத்தை ஏற்ற அசோகரின் வாரிசுகள்...


இந்திய வரலாறு அவர்கள் அத்தனை பேரையும் இந்து என கூறுகிறது, இதுதான் சனாதனம் எழுதிய பொய் வரலாறு... ஆனால் புஷ்யமித்ர சுங்கன், ஏமாற்றி கொலை செய்து ஆட்சியை கைப்பற்றி பிறகு பௌத்தர்களை துன்புறுத்தியிருக்கிறான்... 


மிக தெளிவாக வரலாற்றை படிக்கின்ற போது, ஆரிய சனாதன கருத்துக்களை ஏற்காத நந்த அரசை, சதி செய்து வீழ்த்தி மௌரியர்களை ஆட்சியமைக்கச்செய்து, அதே மௌரியர்களும் சனாதன கருத்துக்களை ஏற்காத போது மீண்டும் சதி செய்து வீழ்த்தியதும் பிராமணர்கள் தான்.... 


தங்கள் சுகவாழ்வுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.... 


இதற்கு பெயர் சாணக்கியத்தனம், சாணக்கியர் என்று வரலாறு குறிப்பது இருவரை, விஷ்ணு குப்தர் மற்றும் கௌடில்யர்...


இலங்கை பிரச்சணை பேசிவிட்டு பிராமண துவேஷம் பேசுகிறான் என எண்ணத்தோன்றும்... இன்று நடைபெறும் இன அழிவுக்கு முக்கிய காரணமே இந்த சண்டாளர்கள் தான்....


நந்த அரசின் வீழ்ச்சி தொடங்கி மௌரிய அரசு உருவாகும் வரை விஸ்ணு குப்தர் - கௌடில்யர் இருவரும் ஒன்றாக பயணித்தவர்கள், ஆனால் மௌரிய ஆட்சி காலத்தில் விஸ்ணு குப்தரைவிட, கௌடில்யர் கை மேலோங்கியது.

இருவரின் வழிவந்தவர்களில் கௌடில்யர் வழிவந்தவர்கள், மௌரிய பேரரசில் மிகவும் மதிக்கப்பட்டார்கள்... 


அதனால் இருவேறு பிரிவுகளாக பிரிந்தார்கள்... அதன் பிறகு விஸ்ணு குப்தரின் சூழ்ச்சியில் மௌரிய பேரரசை வீழ்த்தி சுங்க ஆட்சி அமைத்தார்கள்...


அதன்பிறகே பௌத்தத்தை ஏற்ற சுங்க அரசை விரும்பாதவர்கள் தெற்கு நோக்கி பயணப்பட்டார்கள்... இலங்கை வரை பயணப்பட்டார்கள்... பாண்டிய படையெடுப்புகளை தடுக்க அனுராதபுர(இலங்கை) மன்னனுக்கு துணையானார்கள்.. 


இலங்கையில் இங்கு எப்படி கதையெழுதி  தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்களோ, அதே போல் பௌத்த மதத்திற்கேற்ப கௌடில்யர் கதைகளை உருவாக்கினார்.


விளக்கத்தோடு கூறினால், சனாதனவாதிகள் முதலில் எழுதிய நூல், இராமாயணம்....சூரிய குல ராமனின் கதை....


ஸ்ரீராமசந்திரன் - சந்திரகுப்த மௌரியன்.


சூரிய குலம் - சூரியகுப்த மௌரியனின் மகன்....


காட்டில் திருடனான வால்மீகி ராமனின் தரிசனம் பெற்று, முனிவனாகி இராமாயணம் எழுதினாராம்...


நந்த அரசில் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர்கள், காட்டில் நடந்துவரும் போது வேட்டையாடி, வழிப்பறி செய்த ஒருவனை கொண்டு தான் நந்த அரசை வீழ்த்தி, மௌரிய அரசை அமைத்தார்கள் அவன்தான் சந்திரகுப்த மௌரியன்...


ராமாயணன் எந்த ராமனின் கதை...!


இருவரும் இணைந்து அடுத்து எழுதிய கதை மகாபாரதம்.... 


கலிங்கப்போர் வரை அசோகர் சாணக்கியர்களின் சொல் கேட்டவர் தான்....கலிங்கப்போருக்கு பின் பௌத்தத்தை ஏற்றார். பௌத்தத்தை ஏற்ற பிறகும் கௌடில்யர் மீதான அன்பை இழக்கவில்லை...


அசோகருக்கு 99 சகோதரர்கள் என்றும் அவரே கொலை செய்ததாகவும் ஒரு கதையை சனாதனம் கூறும்...


நூறு பேர் கணக்கு நினைவிற்கு வருகிறதா....? மகாபாரதம் கூறுமே கௌரவர்கள் நூறுபேர்.... அதே கதை தான்.


இந்த இரு புராணங்களில் மட்டும்தான், 

ராமன் - லக்ஷ்மணன், 

கிருஷ்ணன் - பலராமன் என இரட்டையர்களாக கதை இருக்கும்....

மற்ற புராண கதைகள் அத்தனையிலும் ஒருவராக மட்டுமே பயணிப்பார் விஸ்ணு Sorry sorry விஸ்ணு குப்தர்...


ராமாயணத்தில் லக்ஷ்மணனுக்கு இருந்த அளவு முக்கியத்துவம், பலராமனுக்கு மகாபாரதத்தில் இருக்காது.... பாதி கதைக்கு பிறகு பலராமன் நினைவே பலருக்கு வராது...


இதை எழுதியவர் வியாசர் எனும் முனிவர்...யார் அந்த வியாசர்...?


பாண்டுவுக்கும், திருதிராஷ்ட்ரனுக்கும், விதுரருக்கும், சுகருக்கும் அவன் தான் அப்பா...!


சண்டை யாருக்கெல்லாம் பாண்டுவின் வாரிசுகளுக்கும், திருதிராஷ்ட்ரனின் வாரிசுகளுக்கும்,


சரி கிருஷ்ணர் யார்... பாண்டுவின் மனைவி, கிருஷ்ணனின் அப்பனுக்கு தங்கை...கிருஷ்ணனுக்கு அத்தை...!


பாண்டவர்கள், பாண்டுவுக்கு பிறக்காதவர்கள்.... Such a nice interesting story....


சரி  கதையெழுதிய வியாசருக்கு இன்னொரு பெயருண்டு கிருஷ்ண த்வைபாயனர்.... 


ஐ...! கிருஷ்ணரே இவர் தானா...?

இவர்தான், மகாபாரதத்தை மட்டுமல்ல,ராமாயணம் தவிர்த்து மற்ற அவதார புராணங்களை எழுதியவர், அதோடு  பீஷ்மர் கூற விஸ்ணு சஹஸ்ர நாமத்தை எழுதியவர்.


கிருஷ்ணருக்கு கதையெழுதிவிட்டு, ராமனை போல் வாழ வேண்டும், 

ராம ராம ராமேதி ரமே ராமேனு ஒரே ராமரை புகழ்ந்துகிட்டு இருந்தாரு... 


வேதங்களை தொகுத்த வேத வியாசராம், 

17 புராணங்களை அவரே எழுதினாராம், 

18வது புராணமாக பாகவதத்தை எழுதினாராம், 


பராசரர் - மச்சகந்தி(சத்யவதி) உறவு EMA or நாடக காதல் என்று சொல்ல வேண்டுமா...?


வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே; பௌத்ரமகல்மஷம் 

பராசராத்மஜம் வந்தே சு’கதாதம் தபோநிதிம் 


வ்யாஸாய விஷ்ணு ரூபாய 

வ்யாஸ ரூபாய விஷ்ணவே.....


வியாசர் = கிருஷ்ண த்வைபாயனர் = விஸ்ணு = விஸ்ணு குப்தர் - சாணக்கியர்....


சரி விஸ்ணு குப்தர் - கௌடில்யர் பிரிவு உண்மையா... 


கௌடில்யர் பௌத்தர்களோடு இலங்கைக்கு பயணப்பட்டாரா.... 


என புத்தமத நூல்கள் மகாவம்சம்,தீபவம்சம், நூல்களை தொடங்குகையில் பிந்துசாரரில் இருந்து தொடங்கும் நூல், சந்திரகுப்த மௌரியனை பற்றிய பதிவையே தவிர்த்திருக்கிறது....


ஆனால் மிக தெளிவாக சிங்கள மொழியின் வரலாறு, இந்தியாவிலிருந்து  நாடு கடந்த பௌத்தர்களால் உருவான, பாலி, சமஸ்கிருத மொழிகளின் கலப்பின மொழிதான் சிங்களம் என்கிறது....


பெரும்பான்மை என்ற பெயரில் ஊடுருவி, பிற மதங்களை அழிக்க தொடர்ச்சியாக சனாதனம் முயற்சித்து கொண்டேயிருக்கும்.... பிரிவினைகளை உருவாக்க தேவையான பிறமொழிகளோடு கலந்து கலப்பின மொழியாகி தன் வேலையை கவனமாக கையாளும்....


இன்னும் பல ஆதாரங்களோடு விரைவில் பேசலாம்....!


இப்படித்தான் சமய மோதலாக உருவான போர், மொழிப்போராக உருமாறி இருக்கிறது... 


கலப்பின மொழி தன்னை முதன்மைபடுத்திக்கொள்ள, திராவிட இனத்தில், இயற்கையாய் தோன்றிய மொழியை அழிக்க எத்தனிக்கிறது....


முதலில் சனாதன சக்திகள், மதத்தின் அடிப்படையில் இலங்கை பிரச்சணையில் தமிழர்களை ஆதரித்ததுண்டு.... ஏன் தமிழீழ விடுதலை புலிகளுக்கு இந்திராகாந்தியே உதவியிருக்கிறார்....


சனாதன சக்திகளுக்கு விளங்காத ஒன்று, 


எந்தவொரு சூழலிலும்,தமிழர்கள் தங்களை மதத்தால் அடையாளம் காட்டாமல், இந்துக்களின் உரிமைகளை காப்பாற்ற,  உதவி செய்யுங்கள் என கேட்காமல், மரணமே வரினும் தன்னை தமிழனாய் காட்டிக்கொள்வது...


இந்தியாவில் தமிழகத்தின் மீதான வன்மத்திற்கும், இலங்கையில் தமிழர்களுக்கு, இந்தியா உதவாமல் போனதற்கும் சனாதனத்தின் இந்த கோபமே காரணம்....


1980 நாடாளுமன்ற தேர்தலில் இந்திராகாந்தி வெற்றி பெறுகிறார், பிரதமராகிறார்.... தன்னை 1977 கூட்டணி அமைத்து ஏமாற்றிய MGR ஆட்சியை கலைத்துவிட்டு, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். 


திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி, திமுகவை விட அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது... 


கலைஞர் தான் ஆட்சியை கலைத்தார் என ஊடகங்களை பேச வைத்து, அதன் மூலம் உருவான MGR மீதான அனுதாபம் அதிமுகவிற்கு வெற்றியை தந்தது.


1980 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குபின், ஒன்றிய அரசிடம் சரணடைந்தார் ம.கோ.ரா(MGR)... திமுக,காங்கிரஸ் கூட்டணி சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கிடையாது. அதிமுக கூட்டணி அமைத்துக்கொண்டது.


1984ல் இந்திராகாந்தி அம்மையார் படுகொலை நிகழ்ந்தது. 

ராஜீவ் காந்தி பிரதமரானார். ராஜீவ் காந்தி தன்னை சுயபரிசோதனை செய்ய மக்களவையை கலைத்து தேர்தலை சந்திக்க தயாரானார்.


அந்த அனுதாப அலையை பயன்படுத்த நினைத்த MGR, ஒரு வருடத்திற்கு முன்பே ஆட்சியை கலைத்து தேர்தலை எதிர்கொள்ள தயாரானார். 


ஆட்சி கலைத்துவிட்டு தேர்தல் நெருங்கும் நேரத்தில் சீறுநீரக கோளாறு என வெளிநாட்டு மருத்துவமனையில் சிகிட்சை என சிகிட்சை பெறும் படங்களையும் பயன்படுத்தி பிரச்சாரத்தில் அனுதாபம் தேடிக்கொண்டு,


இந்திரா காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாபமும்,  நடிகர் MGR-ன் சீறுநீரக சிகிட்சை அனுதாபமும் அதிமுகவிற்கு வெற்றியை தரும் என உணர்ந்தே கலைஞர் அந்த தேர்தலில் போட்டியிடவில்லை....


1984 தேர்தல் வெற்றி, அதன்பிறகு ராஜீவ் காந்தி பிரதமர், MGR முதல்வர்.... MGR ஆட்சி அமைந்த பிறகு திமுக சார்பாக,இலங்கை தமிழ் அமைப்புகளுடன் நடைபெற்ற எந்த பொதுகூட்டங்களிலோ, மற்ற நிகழ்வுகளிலோ விடுதலை புலிகள் பங்கெடுப்பதே இல்லை....


MGR உதவியுடன் தான்  இந்திய பிரதம அமைச்சரை சந்தித்தது என அத்தனையுமே....


சமகாலத்தில் கலைஞர் 1981ல் இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழர் வாழ் பகுதிகள் சூரையாடப்படுவதை கண்டித்தும், அதை தடுக்க பிரதம அமைச்சருக்கு கடிதம் எழுதி, போராட தயாரான நிலையில், அஇஅதிமுக அரசால் கைது செய்யப்பட்டார்....


1983ல் இலங்கை வெளிக்கடை சிறையில் இருந்த 35 தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து, 7 மணி நேரத்தில்,8 லட்சம் பேரோடு மிகப்பெரிய பேரணியை நடத்தி உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தார்...தொடர்ந்து இலங்கை தமிழர்கள் மீது கவனம் செலுத்த இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். கண்டுக்கொள்ளாத ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார், கூடவே இனமான பேராசியரும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார்...


1985ல் டெசோ அமைப்பை தொடங்கினார்.அதன் தலைவராக அவரே இருந்தார்.அதன் பின்னர் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அஇஅதிமுக அரசு அவரை கைது செய்தது.


சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், பாலசிங்கம்,சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாடுகடத்த நடந்த இலங்கை அரசின் முடிவை தடுக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் தொடரும் என்ற கலைஞரின் அறிவிப்புக்கு பிறகே அவர்கள் நாடுகடத்தல் நிகழ்வு நிறுத்தப்பட்டது. 


1986, கலைஞர் டெசோ அமைப்பின் சார்பாக வாஜ்பாய், ராமராவ், ஜஸ்வந்த் சிங், பகுகுணா என அகில இந்திய தலைவர்களை அழைத்து வந்து, இலங்கை தமிழர் பாதுகாப்பு மாநாட்டை நடத்தினார்..


அமிர்தலிங்கம்,திலகர்,சந்திரகாசன்,ரத்தின சபாபதி,ஈழவேந்தன்,வரதராச பெருமாள்,வாசுதேவன் ஆகிய இலங்கை தமிழர் விடுதலை போராட்ட அமைப்பை சார்ந்தவர்களும் பங்கெடுத்த மாநாடு, விடுதலை புலிகள் MGR தூண்டுதலால் புறக்கணித்தனர்... கலைஞரே சகோதர யுத்தம் வேண்டாம் என கண்ணீர்மல்க வேண்டிய மாநாடு அது... 


அதன் பிறகே சகோதர யுத்தம் அதிகரித்தது...


1987 வீட்டுகாவலில் இருந்த தளபதி கிட்டுவை காண சென்ற வை.கோ, NVN சோமு, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


1987 கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி, இந்திய ராணுவம் இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமைதிப்படையை அனுப்ப ஒப்புதல் வழங்கினார் பிரதமர் ராஜீவ்காந்தி.


1987 இலங்கை சென்ற இந்திய அமைதிபடை மீது தாக்குதல் நடத்த, பதில் தாக்குதல் தொடங்கி, அதன் பிறகு சொல்ல இயலாத அளவு சேதங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தது அமைதிப்படை.


1989 திமுக மீண்டும் ஆட்சி பொறுப்பிற்கு வருகிறது. முதலமைச்சர் என்ற முறையில் இந்திய அமைதிப்படையை திரும்பப்பெற ராஜீவ்காந்தியிடம் விண்ணப்பிக்கிறார் கலைஞர்.


ராஜீவ்காந்தி கடைசிவரை இந்திய அமைதிப்படையை திரும்பப்பெறவில்லை. அடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், V.P.சிங் தலைமையிலான திமுக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு, V.P.சிங்கிடம் முறையிட்டு இந்திய அமைதிப்படையை இலங்கையிலிருந்து திரும்ப அழைக்கச்செய்தவர் கலைஞர்...!


1990 இந்தியா திரும்பிய இந்திய அமைதிப்படையை கூட வரவேற்க செல்லாதவர் கலைஞர்.


1991ல் விடுதலை புலிகள் ஆதரவு என்ற அடிப்படையில் தான் திமுக அரசு கவிழ்க்கப்படுகிறது.


1991ல் அஇஅதிமுக - காங்கிரஸ் கூட்டணி, பிரச்சார பொதுக்கூட்டத்தில் தான் ராஜீவ் காந்தி கொலையாகிறார்....  


ஏன் அந்த பொதுகூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை...? 


ராஜீவ்காந்தி கொலையும், 

அதனால் ஏற்பட்ட அனுதாபமும், ஜெயலலிதாவுக்குத்தான் முதல்வர் பதவியை கைப்பற்றவும், அஇஅதிமுகவை தலைமையேற்கவும் வாய்ப்பாக அமைந்தது. 


MGR உடல்நிலை தோய்வுற்ற நேரத்தில், தன்னிடம் ஆட்சியை ஒப்படைக்கும் படி ராஜீவ்காந்திக்கு,சேலம் கண்ணன் மூலம் கடிதம் எழுதியவர் தானே ஜெயலலிதா....! அப்படி MGR இருந்த போதே தலைமையேற்க உதவாத கோபமும் ஜெயலலிதாவுக்கு ராஜீவ்காந்தி மேல் இருக்கலாம் தானே...!


ஆனால் சொல்லி வைத்தாற் போல், கலைஞர் மீதும், திமுக மீதும் பழி சுமத்தி, திமுக கொடிகம்பங்கள் வரை வெட்டி வீசிய அத்தனை பேரும் அதிமுககாரர்கள்...


இந்திரா காந்தி இறந்த போதும் அதனால் பலன் அடைந்த இயக்கம், அஇஅதிமுக..


ராஜீவ்காந்தி இறந்த போதும் அதனால் பலனடைந்த இயக்கம் அஇஅதிமுக....


காங்கிரஸ் இழந்தாலும் திமுக, விடுதலை புலிகள் இழந்தாலும் திமுக....


கலைஞரின் வசனம் தான் நினைவிற்கு வருகிறது....


பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்.


                        - சாய்.S.சுரேஷ் குமார்

                              +91 - 8344 00 2855



Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்