Periyar

 இது பெரியார் தேசம் 


இந்த வார்த்தைகளுக்குத்தான் எத்தனை எதிர்ப்பு....!


வளர்ப்பு மகளையே மணந்தவர்,

தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார், 

திருக்குறளை தங்கத்தட்டில் வைத்த மலமென்றார்,

சிலப்பதிகாரத்தை விமர்சித்தார், இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமென்றார், 


என்ற குற்றச்சாட்டுகளும்,


சாதியை ஒழித்தார், 

பெண்ணடிமைத்தனத்தை ஒழித்தார், விதவை திருமணத்தை ஆதரித்தார்,

மதுக்கடைகளை ஒழித்தார் என பொய் பரப்பி, பெரியாரை கொண்டாட செய்கிறார்கள் திராவிடம் பேசுபவர்கள்....


விதவை திருமணச்சட்டம், சதி ஒழிப்பு இவை ஈஸ்வர சந்திர வித்யாசாகர், மோகன்ராய் போன்றவர்களால் கொண்டுவரப்பட்டது, அந்த சமயத்தில் பெரியார் பிறந்திருக்கவேயில்லை....


தமிழ் மொழியில் திராவிடம் என்ற வார்த்தையே இல்லை, திராவிடம் என்பது ஏமாற்று வேலை... தமிழர்கள் ஆள வேண்டும் என்று சாதியை குடி என அடையாளப்படுத்தி, நாம் தமிழர் என்ற அரசியல் கட்சி, சீமான் தலைமையில் தொடர்ந்து பரப்புகிறது..


பெண் தொடர்பான குற்றச்சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் பெரியாரும் விமர்சிக்கப்படுவார், திருமணம் தாண்டிய உறவு (EMA) நிகழ்வுகள் பெண் சம்பந்தப்பட்டால், கற்பு,ஒழுக்கம், விமர்சிக்கப்பட்டு, கள்ளக்காதல் என பெயரிடப்பட்டு, பெரியார் குற்றம் சொல்லிவிடுவார்கள்...


சரி இந்த கேள்விகளுக்கு எத்தனை முறை எத்தனை விளக்கங்கள் அளித்தாலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புரியாது, கடந்து விடுவோமா என்றால், சீமானின் பொய்யை மெய் என நம்பும் அளவுள்ள என் நண்பர்கள் வட்டாரமே, இந்த பதிவுக்கு காரணம்....!


முதலில் சங்கி சீமானுக்கு பதிலளிக்கிறேன்....


தமிழில் திராவிடம் என்ற வார்த்தையே இல்லை, பெரியார், அண்ணா, கலைஞர் தமிழரே இல்லை.


தமிழ்த்தாய் வாழ்த்தெழுதிய மனோன்மணியம் சுந்தரனார் கேரளாவில் பிறந்தார்.

அவர் தமிழரா...? மலையாளியா..?


ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை கூறிய செண்பகராமன், நீ கூறும் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை...? அவர் தமிழரா... மலையாளியா....?


உனக்கு அவர்களை தமிழராக அடையாளப்படுத்தியது, பிள்ளை எனும் சாதிய பின் ஒட்டு...


1891ல் அதே சுந்தரனார் எழுதிய மணோன்மணியம் என்ற நூலின் பாடல் தான்,பின் நாளில் தமிழ்த்தாய் வாழ்த்தாக  ஏற்றுக்கொள்ளப்பட்டது... சுந்தரனார் பாட்டெழுதிய போது,பெரியாருக்கு வயது வெறும் 12, அண்ணா, கலைஞர் பிறக்கவேயில்லை...


அவர் திராவிட நல் திருநாடு என்கிறாரே.... அது எந்த நாடு....?


1911 கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக பாடப்பெற்று 110 வயதை கடந்த இந்திய தேசிய கீதம், திராவிட நாடு என்கிறதே,அது எந்த நாடு...?


திருக்குறள் தொடங்கி சங்க இலக்கியங்கள் எதிலும் தமிழ் என்ற சொல்லும் தான் இல்லை...  மொழி தமிழ்.... என பெயர்பெற்றது எப்போது....?


அ,விலிருந்து ஏன் தொடங்கியது தமிழெழுக்கள்...?


திராவிடத்தின் பொருள் என்ன...? 


திரு + ஆ+ இடம் = திரு + ஆவிடம் =திராவிடம்....


நாகரீகமற்ற காடுகளில் வாழ்ந்த  மனிதனை, காட்டை சமன்படுத்தி நாடாக்க பயன்பட்டது ஆவினங்கள்...

அந்த ஆவினங்கள் உருவாக்கிய இடம் ஆவிடம், அந்த ஆவிடத்தை மரியாதையோடு அழைத்து உருவான திரு + ஆவிடம் = திராவிடம்...


அந்த ஆவினங்கள் மட்டுமே அன்றைய காடுறை மிருகங்களில் மனிதனால் அடக்க முடிந்தது... அந்த ஆவினங்கள் கொண்டே காடு நாடானது...


காடுவிட்டு நாடுகண்டவர்கள் ஆதிதிராவிடர்கள், அதன் நீட்சியே திராவிடர்கள், வேளாண்மை எப்போது தொடங்கியதோ அதன்பிறகே, கோன்(அரசன்), குடிகள் உருவானார்கள்...


அரசனுக்கு குடி கிடையாது, தொழிலை வைத்து குடி உருவானது... 

எந்த அரசனையும் குடி கொண்டு அடையாளப்படுத்திய வரலாறு கிடையாது...!


பாட்டன் முப்பாட்டன் என கதையளக்கிறாயே,  முதல் அரசன் என்று யாராவது ஒருவனை கூறு, சேர, சோழ,பாண்டிய,பல்லவன் என எப்போது நாடுகள் பிரிந்தது... ஆரம்பத்தில் இருந்தே மன்னர் பரம்பரைகள் இருந்ததா...?


தொழில்கள் உருவாகி, வணிகம் உருவாகி, வளம் கண்டதால் நாடு பிரிந்ததா...?


நாவை அடக்குவாய் என பார்த்தால் கதைகளை நீட்டிக்கொண்டே போகிறாய்...! 


தமிழ்தேசியம் என்பது இலங்கை தமிழர்களை வைத்து பிழைப்பதா...?

12 வருடம் கட்சி நடத்த ஈழ தமிழர்களை ஏமாற்றி வாழும் நீயெல்லாம் தமிழ்தேசியம் பற்றி பேசலாமா...?


விடுதலை புலிகளை ஆதரிக்கிறாயா, ஈழத்தமிழர்களை ஆதரிக்கிறாயா...?


பிரபாகரனுக்கு முன் நடந்த படுகொலைகள் பற்றி தெரியுமா...?

ஒரு மொழி நுழைந்து, ஒரு இனத்தை அடிமைபடுத்திய வரலாறு இலங்கையோடது...


இலங்கையில் எப்படி சிங்களமோ, இந்தியாவில் ஹிந்தி...


கிட்டத்தட்ட மைதிலி தொடங்கி பல மொழிகளை அழித்த வரலாறு தெரியுமா...? 


இரண்டு மொழிகளுமே சமஸ்கிருத கலப்பு தெரியுமா...?


மொழியோடு மதமும் தான் பிரச்சணை, 


சமஸ்கிருத சிங்கள சனாதனம் புத்தமதற்கிற்குள் புகுந்து, தமிழினத்தை அழிக்கிறது...


இங்கும் அதேதான் சமஸ்கிருத ஹிந்தி, ஹிந்து மதம்....


அங்கும் மதகுருமார்கள் ஆலோசனையில் தான், தமிழினம் அழிக்கப்படுகிறது...இங்கும் அதே சனாதன கூட்டம் தான் தொல்லை தருகிறது....


இது அத்தனையும் அரண்ட ஒரே பெயர், சனாதனவாதிகளுக்கு  ராமசாமி நாயக்கர், சமூகநீதிக்கு பெரியார்...!


நீ சாதி அரசியல்வாதி என்பதை கொளத்தூர் என்பதை விடுத்து திருவொற்றியூரை தேர்ந்தெடுத்த போதே தெரிந்து கொண்டோம்... 


நீ விவாதம் செய்ய தயாரென்றால் நானும் தயார்... நீ எவனோ எழுதி கொடுப்பதை ஒப்புவிப்பவன், நான் ஆய்வாளன்,தெரிந்து தகுதியோடு அழை, வாதம் புரிய...


அப்புறம் சங்கிகளுக்கு....


வளர்ப்பு மகளை மணந்தாரா, 


பெரியார் மணியம்மையை மகளாக அங்கீகரித்த ஆதாரம் காட்ட எவன் தயாரோ அவன் பேசு...


தொண்டர் - தலைவராகவே பயணித்தார்கள்.... நாகம்மையார் பெண் குழந்தை இறந்து பிறந்ததால் மகளாக பாவித்தார், இதுதான் வரலாறு...


அடுத்து மணியம்மைக்கும் பெற்றோர் இருந்தார்கள்... அன்றைய தேதியில் பெண்ணின் திருமண வயது 14.


தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க திருமணத்தை ஏற்கவோ /மறுக்கவோ மணியம்மைக்கு சுதந்திரம் இருந்தது... அதனால்தான் 27 வயதுவரை திருமணம் செய்யாமல் இருந்தார்....


இன்றைய தினத்தில் கூட 27 வயதுவரை பெண் திருமணம் வேண்டாம் என்றால் பெற்றோர், அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக விடுவார்களா என்பதே கேள்விக்குறியான காலத்தில், மணியம்மை அந்த சுதந்திரத்தையும் பெற்றிருக்கிறார்...


அப்படி சுதந்திரமான மணியம்மை, 70 வயது பெரியாரை மணந்தது...அவர் விருப்பப்படி சுதந்திர மனநிலையோடு நடைபெற்ற நிகழ்வு... 


தனிநபரின் வாழ்க்கையை விமர்சிக்க தகுதி வேண்டும்... 


தன் விருப்பப்படி வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதும் பெண் சுதந்திரம்தான்... 


பெரியார் கல்லீரல் இரக்கம் கண்டார், மூத்திர வாளியோடு திருமண கோலத்தில் இருக்கும் புகைபடத்தை பகிர்ந்து, சுய இன்பம் செய்து கொள்ளும் (KTR) குழுவிற்கு... 


அந்த புகைப்படம் சொல்லும் நடைபெற்ற திருமணம் காமத்திற்கான நிகழ்வு அல்ல என்று...


அப்புறம் மேற்கூறிய பதில்களை கூறும் போது, அறக்கட்டளைக்கு வேறு தொண்டர்களை தலைவராக்கியிருக்கலாமே, மற்ற தொண்டர்களை பெரியார் நம்பவில்லையா என பேசி திரியும் பைத்தியக்கார சங்கிகளுக்கு....


பெண் விடுதலை, பெண்ணுரிமை பேசிய பெரியார், பெண்களும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதும் அவர் கருத்துத்தானே...

தன் அறக்கட்டளைக்கு,பெண் தொண்டரை தலைவராக நியமிக்க நினைத்ததில் தவறென்ன...


தன் வாழ்க்கையை தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெற்று, திருமணத்தை வெறுத்து, போராட்ட களத்தில் நின்ற மணியம்மை, எந்த வித பந்த பாசமற்ற ஒருவரே அறக்கட்டளையை நிர்வகிக்க சரியான நபரென பெரியார் எண்ணி மணியம்மைக்கு அந்த வாய்ப்பு வழங்கினார்...


பெண் தொண்டர்கள் தலைமைக்கு தகுதியற்றவர்கள் என்ற பிற்போக்குவாதிகளை, தன் முற்போக்கு செயல்பாட்டால் இன்றுவரை விமர்சிக்க செய்பவர் உண்மையில் பெரியார் தான்....


திருக்குறளை, சிலப்பதிகாரத்தை விமர்சித்தாரா...?


பொதுவாக இலக்கியங்கள் எல்லாமே ஆணாதிக்க மனநிலையோடு கட்டமைக்கப்பட்டவை... 


கண்ணகி கோவலன் திருமணம் நடக்கும், கோவலன் மாதவி மேல் மையல் கொள்வான், கண்ணகியை பற்றி கவலைப்பட மாட்டான், ஆனால் கண்ணகி கணவனுக்காக காத்திருப்பாள்... மாதவியை பரிதவிக்கவிட்டு கண்ணகியை தேடி வருவான், கண்ணகி ஏற்றுக்கொண்டு கால்சிலம்பு கொடுத்து விற்றுவரச்சொல்ல திருடன் என குற்றம் சாட்டப்பட்டு கொலையாவான்...


கண்ணகி கற்பானவள் என காட்ட, மாதவி விமர்சனம் பெறுவாள், ஒரு போதும் கோவலன் விமர்சனம் பெற மாட்டான், கோவலன் கற்பு பற்றிய விமர்சனமும் வராது...


ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து, அது பெண்ணுக்கானது என காட்சிப்படுத்தி, கற்பு பெண்ணுக்கு மட்டுமானது என ஏமாற்றி பெண்ணடிமையை ஊக்கப்படுத்தும் சிலப்பதிகாரத்தை விமர்சித்ததில் தவறில்லையே...


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை...


தெய்வத்தை வணங்காமல் போனால் கூட, தன் கணவனை தொழுபவள் கூறினால் மழை பெய்யும் எனக்கூறி பெண்ணடிமைத்தனத்தை கூறிய வள்ளுவனும், திருக்குறள் எனும் தங்கத்தட்டில் இதுபோன்ற மலமள்ளி வைத்திருக்கிறான் என்றார் தவறென்ன...?


அதிகாரம் 6 முழுக்க துணை நலன் பேணல் எழுதியவன், பெண்ணை பற்றி மட்டுமே எழுதியிருக்கிறான்,கணவனின் நெறி பற்றி எழுதாமல் போனதேனோ என்ற கேள்வி வரத்தான் செய்கிறது...

தொலைந்து போனதில் பாதி தானே 1330, அவன் எழுதியது 1330 மட்டும் இல்லையே.... எழுதியிருப்பான் தொலைந்திருக்கும் என்ற ஒருவகை சமாதானம் மட்டுமே எஞ்சியிருக்கிறது...


பெரியார் சுதந்திரப்போராட்டத்தை கருப்புதினமென்றாரா..?


மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, இந்திய சுதந்திரத்தின் மீதும் ஆசையோடுதான் காங்கிரஸில் இணைந்தார், தன் மனைவி, தங்கையோடு பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டார்... கள்ளுக்கடை மறியல் காந்தி அறிவித்ததும், தன் சொந்த தோட்டத்து தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.ஒத்துழையாமை இயக்கம் அறிவித்த போதே தமிழ்நாட்டில் ஒத்துழையாமை போராட்டமே இரண்டு பெண்களில் கைகளில் உள்ளது என காந்தி கூறுமளவு நாகம்மையாரும்,கண்ணாம்பாளும் போராடினார்கள்.... 


காங்கிரஸ் சார்பில் சேரன் மாதேவியில் வ.வே.சு ஐயர் நடத்திய குரு குலத்தில், பிராமணர்களுக்கும், பிராணமரல்லாதவர்களுக்கும் கல்வி வழங்குவதில் காட்டிய தீண்டாமை, சுதந்திரம் என்ற பெயரில் பிராமணர்கள் அதிகாரத்தை கைப்பற்ற நடத்திய நாடகம் தெரிந்தார், எனவே ஆங்கிலேய தயவால் உருவான கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் பராபட்சமின்றி அனைவருக்கும் கல்வி வழங்குவதை வரவேற்றார்....வீதியெங்கும் பரவிவிட்ட சாதிய தீண்டாமை, மெல்ல மெல்ல ஆங்கிலேயர் கட்டுபடுத்திக்கொண்டிருந்தனர்....

எனவே சுதந்திரம் அறிவித்த போது, அப்படிப்பட்ட கருத்தை கூறினார்...


ஈஸ்வர சந்திர வித்யாசாகர், மோகன்ராய் என எல்லாரும் சட்டமியற்றவில்லை, விதவை திருமணம், சதி ஒழிப்பு என எல்லா சட்டமும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இயற்றினார்கள்...அவர்களுக்கு ஆலோசகர்களாக இவர்கள் இருந்தார்கள்...


இந்த ஆலோசகர் பதவிகளில் ஏன் பிராமணரல்லாதோர் ஒருவர்கூட இல்லை என்பதே முதல் கேள்வி...?

சுதந்திர போராட்டமானாலும் பிராமணர்கள் பெயர்தான் பிரதிநிதித்துவம் பெறுகிறது.ஆங்கில அரசின் ஆலோசகர் என்ற பெயரிலும் அவர்கள் பெயர்தான் பிரதிநிதித்துவம் பெறுகிறது...


இது எப்படி சாத்தியமாகிறது...?


சட்டமியற்றுவதால் மட்டும் நடைமுறையில் வராது, செயல்படுத்தினால் மட்டுமே வரும்... விதவை மறுமணத்தடை இருந்தது, உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது என்பது இந்த சட்டங்களே ஒப்புக்கொள்கிறது...


பெண்ணை அடிமைபடுத்தியே பிராமணியம் அதிகாரம் செய்திருக்கிறது என்பதும் மிகத்தெளிவாக விளங்குகிறது... 


தன் சொந்த வீட்டில் கைம்பெண் மறுமணத்தை நடத்திக்காட்டினார் பெரியார், பெரியாரின் தொண்டரான முத்துலட்சுமி தான் தேவதாசி முறை ஒழிப்பிற்கு காரணம்.


உடனே முகலாய படையெடுப்புக்கு பிறகு தற்காத்து கொள்ள உடன் கட்டை ஏறினார்கள் என கதையளக்கும்... படையெடுத்து பெண்ணை கைப்பற்ற நினைத்தால் உடன்கட்டை ஏற நேரம் தர மாட்டார்கள்... மகாபாரத மாத்ரீ உடன்கட்டை ஏறினாள் என கதை எழுதினீர்களே, அது எந்த முகலாய மன்னனிடமிருந்து தற்காத்துக்கொள்ள...?


EMA திருமணம் தாண்டிய காதல்,

பராசரர் - மச்சகந்தி என்ன உறவோ,

சாந்தனு- மச்சகந்தி என்ன உறவோ

வியாசர் - அம்பிகா, அம்பாலிகா, பணிப்பெண் என்ன உறவோ,

கிருஷ்ணன் - ராதை என்ன உறவோ,

சுக்ரீவன் - தாரை என்ன உறவோ

பாஞ்சாலி - பாண்டவர் என்ன உறவோ

கோவலன் - மாதவி

அந்த உறவு எல்லாம், பெரியாரின் புரட்சியால் நடந்ததா...?


ஆண்களுக்கு கட்டுப்பாடு, ஒழுக்கம், கற்பு என்ற வரையறை கிடையாது.அது பெண்ணுக்கானது என நம்ப வைத்த புராணங்களை கேள்வி கேட்டால், இந்து மதத்தில் மட்டும் தான் குறைகள் உள்ளதா என்றால்,


எல்லா மதத்திலும் உள்ளதெல்லாம் அவனவன் தேவைக்கு அவனவன் எழுதியது...ஆனால் அதை புனிதம்,வாழ்வியல் கடமை என கட்டமைக்க ஏன் முயற்சிக்கிறீர்கள்...?


நீங்கள் ராம ஜென்ம பூமி என கட்டமைக்க முயற்சிக்கும் வரை, இது ராமசாமியின் மண்ணாக இருந்துவிட்டு போகட்டுமே...!


கடவுள் நம்பிக்கைக்குரியவர், கதைகளுக்குரியவரல்ல....

அவனவன் நம்பிக்கை அவனவனுக்கு, என்று கதைகளை தூற வீசாதவரை, கைத்தடி காவல் காக்கும்...!


                              - சாய்.S.சுரேஷ் குமார்

                                     +91 - 8344 00 2855



Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்