ADMK & MGR
#நாடகங்களும்_வேடங்களும்...
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) இதன் வரலாறே நம்பிக்கை துரோகத்தில் தொடங்கியதுதான்...
முதலில் தனி திராவிட நாடு கோரிக்கையும், தேசத்திற்கு அச்சுறுத்தல் வந்த போது,மாநில சுயாட்சி என்ற முழக்கத்தையும் தாரக மந்திரமாக கொண்ட, பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயருக்கு முன்னால் இந்திரா காந்திக்கு பயந்து அகில இந்திய(All India) என்று மாநில சுயாட்சி என்ற அண்ணாவின் கொள்கைகளுக்கு துரோகம் செய்து உருவான இயக்கம்.
1949 திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து DMK - Dravida Munnetra Kazhagam என்ற அமைப்பை உருவாக்கும் போது,1936 - 47 வரை 11 ஆண்டுகள் MGR யார் என்றே தமிழக மக்கள் அறிந்திருக்கவில்லை.
ராஜகுமாரி,மருதநாட்டு இளவரசி, என கலைஞர் தொடங்கி, கண்ணதாசன், AVP.ஆசைதம்பி, என திராவிட இயக்க கதையாசிரியர்களின் திரைப்படங்களே MGRக்கு அடையாளம் தந்தது.
( இந்த திரைப்படங்கள் இல்லையென்றால்... MGR யார்?)
MGR-ஐ புகழின் உச்சியில் நிறுத்தியது திமுக எழுத்தாளர்களின் கதைகளும், வசனங்களும் என்று ஒரு ஊடகமும் பேசாது, ஆனால் திமுகவின் வெற்றிக்கு MGR-ன் புகழ்தான் காரணம் என்ற நஞ்சை மட்டும் ஆழவிதைக்கும், ..............தான் ஊடகங்கள்...
அண்ணா என் வழிகாட்டி, காமராஜர் என் தலைவர் என்றாராம் MGR....
ராஜாஜி பதவியிழந்து காமராஜர் முதல்வரான போது தான், காங்கிரஸை விடுத்து திமுகவில் இணைந்தார் MGR...
இவர்தான் காமராஜரை தலைவர் என்றாரா...?
1973 திண்டுக்கல் தேர்தலில் மாயத்தேவருக்காக, சாதிவாக்குக்காக, NSV சித்தனுக்கு விழும் சாதிவாக்குகளை கவர்வதற்காக காமராஜரை முதுகுளத்தூர் கலவரத்தோடு தொடர்புபடுத்தி சாதி ரீதியாக விமர்சித்த வரலாற்றை ஏன் எந்த ஊடகங்களும் பேசுவதில்லை...?
ஐம்பெரும் தலைவர்களை கலைஞர் ஓரங்கட்டினார் என கதையை ஆழவிதைக்கும் ஊடகங்கள்...,
1961ல் EVK சம்பத், வெளியேறிய போது திமுகவில் நடிகர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக கூறினாரே...
அது எந்த நடிகர்...? உண்மை வரலாற்றை பேசுமா ஊடகங்கள்...? இல்லை, கலைஞர் விமர்சனம் என்றால் மட்டும் வரிசைகட்டி வருமா...?
அண்ணாவின் இதயக்கனி என்றால், அமைச்சரவையில் ஏன் MGRக்கு இடமளிக்கவில்லை...?
ஆதித்தனாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க கூடாதென்றது, காமராஜரை விமர்சித்ததெல்லாம் தன்னை கொண்டாடும் ஒருதரப்பை குளிர்விப்பதற்கு தானே... அந்த பழி ஏன் ஒருபோதும் MGR மீது விழவில்லை...
1969 அண்ணா மறைவுக்கு பின், அமைச்சரவையில் மூத்தவரான நாவலரை விடுத்து,
தன் கட்டுக்குள் வைக்க எண்ணியே கலைஞரை முதல்வராக்கினார். ஆனால் பெரியாரின் பாசறை வளர்ப்பு,சாதிய நீதியை ஏற்காமல் சமூகநீதியை சார்ந்து நின்றது.
ஐம்பெரும் தலைவர்களை கலைஞர் ஓரங்கட்டி தலைவரானார் எனப்பேசும் ஊடகங்கள், யாரை ஓரங்கட்டி MGR பொருளாளரானார் என பேச மறுப்பது ஏனோ...?
1967 யார் முதல்வர் என அறிவிக்காமல், அண்ணா போட்டியிடாமல் தேர்தலை வென்றது திமுக.
1971ல் கலைஞர் தான் முதல்வர் வேட்பாளர் என்ற அடையாளத்தோடே சரித்திர வெற்றியை சாதித்து காட்டியது.
அமைச்சரவையை எதிர்பார்த்தவருக்கு, நடிப்பை விட மனமில்லை.
நடிப்பை விடாமல் அமைச்சரவையில் இடமில்லை என்றது தலைமை. பதவியின் பேராசை ஆட்சியை விமர்சிக்க செய்தது.
பொருளாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மாநில கூட்டுறவு சங்கங்களின் துணைத்தலைவராக இருந்துகொண்டு அரசை விமர்சித்ததையடுத்து விளக்கம் கேட்க, 4 நாளில் புதுக்கட்சியில் இணைந்து புரட்சி செய்தார்.
அந்த புரட்சி செய்தவரா புரட்சி தலைவர்...?
1972 - 76 வரை, கலைஞர் அமைச்சரவை மேல் ஊழல் பட்டியல் வாசித்துவிட்டு, எந்த அமைச்சர்கள் ஊழல்வாதி என்றாரோ,
அந்த திமுக அமைச்சர்களை தன் பக்கம் இழுத்துவிட்டு, கலைஞரை மட்டும் குற்றவாளியாக்கி, அதிமுகவில் இணைந்தவர்களை புனிதரென்றார் MGR.
ஒன்றிய அரசின் துணை கொண்டு
நெருக்கடி நிலையில் ஆட்சியை ஜனவரியில் கலைத்து விட்டு, ஆட்சி கலைப்புக்கு பின் பிப்ரவரியில் ஊழலை விசாரிக்க கமிஷனை அமைத்துவிட்டு...
ஊழல்புகாரில் தான் ஆட்சி கலைக்கப்பட்டது என்று ஊதி பெரிதாக்கியது ஊடகங்கள் தான்...!
1977 நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தியோடு கூட்டணி அமைத்து வென்றும், ஒன்றிய அரசில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்ததும், கூட்டணியை விட்டு விலகி இந்திரா காந்திக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் MGR.
அதன்பிறகு 1977 சட்டமன்ற தேர்தலில் வென்று முதல்வரான பின்தான், கலைஞரின் திமுக அரசுக்கு எதிராக கொடுத்த ஊழல் புகாரை பற்றி, #சர்க்காரியா_கமிஷனில்,தனக்கு அந்த புகார்களை பற்றி எதுவும் தெரியாது. வழக்கறிஞர் கண்ணன் தொகுத்து கொடுத்ததையே புகாராக அளித்தேன் என பின்வாங்கினார் MGR...
[ யார் இந்த வழக்கறிஞர் கண்ணன்...?
சேலம் கண்ணன்...இந்த சேலம் கண்ணன் யாரென்று தேடினால், எடப்பாடி யாரென்று தெரியவரும்...! ]
1979 மாநிலத்தில் செயல்பட்டுவந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 31% பலியிட துணிந்தது அவரது அரசுதான். அதன்பிறகு போராட்டங்களுக்கு பயந்து 50% ஆக மாற்றிய உத்தமர் தான் MGR.
1980 மறுபடி பிரதமரான இந்திரா காந்தி, தனக்கு நம்பிக்கை துரோகம் செய்த MGR அரசு உட்பட 9 மாநிலங்களில் ஆட்சியை கலைத்தார்...?
ஆட்சியை கலைத்தபின்தான், சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபிறகு திமுகவுடன் கூட்டணி அமைத்தார் இந்திரா காந்தி...
ஆனால் கலைஞர் கூறித்தான் ஆட்சிகலைப்பு நடந்ததாக அனுதாபம் தேடிக்கொண்டார் MGR.
1980 சட்டமன்ற தேர்தலில் திமுகவைவிட அதிக இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. முதல்வர் வேட்பாளரே யார் என தேர்தலுக்கு பின் முடிவெடுக்கலாம் என பேசும் அளவு செல்ல, இந்திரா காந்தி தான் முதல்வர் வேட்பாளர் கலைஞர்தான் என்று உறுதி செய்த நிகழ்வு...நடைபெற்றது.
இப்படி காங்கிரஸ் கட்டுபாட்டில் நடந்த தேர்தலில், அதிமுக வென்றதும், இந்திரா காந்தியுடன் சேர்ந்து கொண்டார் MGR...
1984 இந்திரா காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாபத்தையும், தன் மருத்துவ சிகிட்சை அனுதாபத்தையும், வைத்து வெற்றி பெற எண்ணி ஒரு வருடத்திற்கு முன்பாக ஆட்சி கலைத்தார் MGR....
அந்த அனுதாபங்கள் வெற்றியும் தந்தது.
எந்த வழக்கறிஞர் கண்ணன் கலைஞர் அமைச்சரவைக்கு எதிராக ஊழல் புகார் தொகுத்து கொடுத்தாரோ... திமுகவை வீழ்த்த துணை புரிந்தாரோ....
அதே வழக்கறிஞர் கண்ணன், ஜெயலலிதா ஆதரவாளராக மாறியிருந்தார்...அதனால் MGRஆல் ஓரங்கட்டப்பட்டிருந்தார்.
MGR உடல்நலம் சரியில்லாமல் போகவே, ஜெயலலிதா MGRக்கு எதிராக அன்றைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதி அதை சேலம் கண்ணன் மூலம் கொடுத்தனுப்பினார்....
இந்த சேலம் கண்ணன் மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானவர் தான் Edappadi K. Palaniswami
அதன்பின் MGR மறைவு, ஜெ,ஜா,நால்வர் அணிகளாக மோதல் அந்த மோதலில் ஜெ அணி சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்றவர் எடப்பாடி.
அதே 1984 ஆட்சிகாலத்தில் தான் ஜெயலலிதா - சசிகலா நட்பு ஆரம்பமாகிறது.
1987 சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருமளவு சசிகலா சாதிய பின்புல சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் கண்ணன் போன்ற ஜெயலலிதா ஆதரவாளர்கள் உருவாகியிருந்தார்கள்...
1989 சட்டமன்ற தேர்தலில் ஜானகி அணி, நால்வர் அணி என பிரிந்தவர்களால் பலவீனமான சூழலில்,சேலம் கண்ணன் மூலம் ஜெ அணியில் போட்டியிட வாய்ப்பு பெற்று, வெற்றி பெற்றார் எடப்பாடி...
அந்த வெற்றிமூலம் ஜெயலலிதாவின் நிழலான சசிகலாவின் நம்பிக்கையை பெற்றார் எடப்பாடி....
ஊழல் புகாரே நிறுபனமாகாத சர்க்காரியா கமிஷன் மூலம் கலைஞரை விமர்சிக்கும் பலரும், மரணம் அடையாவிட்டால் சிறைக்கு செல்லத்தக்க எரிசாராய ஊழல், ரே கமிஷன் அறிக்கைகள், பல்கேரியா பால்டிகா கப்பல் பேர ஊழல், திருசெந்தூர் முருகன் வைரவேல் களவு வழக்கு என எதையும் பேசமாட்டார்கள்...
மரணம் அடைந்த ஊழல் குற்றவாளிகள் புனிதராகிவிடுகிறார்கள்...
1989-91ல் பிரிந்த பலரையும் ஒருங்கிணைத்து, ஒன்றிய அரசின் மூலம் திமுக ஆட்சியை கலைத்து,
திமுக அரசு கலைக்கப்பட்டதே விடுதலை புலிகளோடு தொடர்பு என்ற காரணத்திற்காக....அப்படி இருக்கையில் ராஜீவ்காந்தி கொலையாக ஒட்டுமொத்த பழியையும் திமுக மீது சுமத்தி ஆட்சியில் அமர்ந்து,
1991-96 ஒட்டுமொத்த ஊழல்களையும் ஒருங்கே நிகழ்த்தி, வளர்ப்பு மகனுக்கு திருமணம், காட்டாட்சி நடத்தினார் ஜெயலலிதா...!
1991ல் சசிகலாவின் உறவினரான TTV.தினகரன் மூலம் O Panneerselvam அறிமுகமாகிறார்.
1991 -1996 ஆட்சிகால ஊழல்களை, 1996ல் ஆட்சிக்கு வந்த திமுக வழக்காக்க...வழக்கு விசாரணைக்கு பிறகு 2001க்கு பிறகு ஒவ்வொரு வழக்கிலும் சிறை செல்லும் நிலை வர,
ஒவ்வொரு ஊழல் வழக்கையும் திமுகவின் பழிவாங்கும் நடவடிக்கை என மக்களை ஏமாற்றி அனுதாபம் தேடி 2001ல் வெற்றி பெற்று முதல்வரான பின்,
ஒவ்வொரு முறை சிறை செல்லும் சூழலிலும், நம்பிக்கையான, விசுவாசமான நிழல் முதல்வராக சசிகலாவின் நம்பிக்கையை பெற்று முதல்வரானார் பன்னீர்செல்வம்...
அந்த நம்பிக்கையை கடைசிவரை காப்பாற்றினார்...இரண்டு முறை, மூன்றாவது முறை காலியிடம் உருவாக நிரந்தர முதல்வராக எண்ணி, முதல் நம்பிக்கை துரோகம் செய்து தர்மயுத்தம் தொடங்கினார்.
சசிகலா முதல்வராக ஒப்புதல் வழங்கி அமைதியாக இருந்திருந்தால், சிறை செல்லும் சூழலில் மறுபடி முதல்வராயிருக்கலாம்....
தர்மயுத்தம் தொடங்கியதன் பயனை அறுவடை செய்தார்...அந்த நேரத்தில் சசிகலாவின் நம்பிக்கை எடப்பாடி மீது செல்ல, முதல்வராக்கினார்...
MGRக்கு இந்திராகாந்தி
ஜெயலலிதாவுக்கு ராஜீவ்காந்தி
இன்றைய இரட்டை தலைமைக்கு நரேந்திர மோடி
என தலைமைக்காக ஒவ்வொரு முறையும் அகில இந்தியத்திடம் அடிமையான கட்சியின் வரலாறு முழுக்க துரோகங்கள் தான்....
இவர்கள் தான் வாரிசு அரசியல் என மற்றவர்களை விமர்சிப்பது, தொண்டர்கள் தேர்ந்தெடுக்க தலைவர்கள் உருவாகும் போது, அவர்கள் வாரிசாக இருப்பதை பற்றி தொண்டர்களை தாண்டி மற்றவர்கள் விமர்சிப்பது அறிவில்லா இழிசெயல்.
- சாய்.S.சுரேஷ் குமார்
+91 - 8344 00 2855
Comments
Post a Comment