B.R.Ambedkar

 #Birthday_Anniversary


#Father_of_Indian_Republic...


என்னை நீ உன் அடிமையாக எண்ணும் போது, உன்னை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடுவது என் கடமை...


என்னை, கடவுளாக்கி வழிபடாதே., தோற்றுவிடுவாய், ஆயுதமாக்கி போராடு.,


                                                      - அம்பேத்கர்


யார் இந்த அம்பேத்கர்...?


அம்பேத்கர் பற்றிய சமூகத்தின் பார்வை என்ன...?


தலித்(Dalit) என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன...?


தலித் என்பது தாழ்த்தப்பட்டவர்களை குறிக்கும் வார்த்தை, 


அந்த தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் அம்பேத்கர்....


இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், 


நிறைய படித்தவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதியவர், 


அந்த அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு, 

இட ஒதுக்கீடு வாங்கி தந்த சாதிய தலைவராகத்தான் அம்பேத்கர் பற்றிய வெகுஜன, சாதியவாதிகளின் எண்ணம். 


ஆனால் உண்மையென்ன, 

யார் தாழ்த்தப்பட்டவர்கள்...?


அப்படி ஒரு வார்த்தை..., 

வெகுசுலபமாக அரசியல்வாதிகளால்,சாதாரண மக்கள் மனதில் ஆழ புதைந்துவிட்டது. 


இட ஒதுக்கீடு வரலாற்றில், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வார்த்தையே கிடையாது. பட்டியல் இனத்தவர் (Scheduled Caste & Scheduled tribes)...என்ற அடிப்படையில் தான் இட ஒதுக்கீட்டை பெற்றார்கள்... 


தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாலா,அந்த இனங்கள் பட்டியல்படுத்தப்பட்டது. 


மனுதருமம் எனும் வேத,புராணங்களை நம்பாமல், எதிர்த்த இனங்கள்., 

விரதம், கொடிமரம், பலிபீடம், ஹோமம்,பரிகாரம், என கடவுளை விட பிராமணர்கள் உயர்ந்தவர்கள், 

கடவுளின் தூதுவர்கள் என்ற பார்ப்பனிய வழிபாட்டுமுறைகளை ஏற்காதவர்களை பட்டியல்படுத்தி, அவர்ணத்தவர்கள், பஞ்சமர்கள் என அடையாளப்படுத்தி மற்ற சமூகங்களை கொண்டு ஒடுக்கத்தை ஏற்படுத்தினார்கள்... 


சட்ட அமைச்சரான பின், அரசியலமைப்பு சட்டம் உருவாக்கும் போது, ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகத்திற்குமான, அரசு தரும் வாய்ப்பாக இட ஒதுக்கீட்டை உருவாக்க எண்ணினார். 


ஆனால் பட்டியல்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட இனத்தவர்களுக்கான பட்டியல் மட்டுமே அரசிடம் தயார் நிலையில் இருந்தது. 


மனுதரும, வர்ணதர்மத்தை, வேத,புராண, விரத,ஹோம,எனும் பார்ப்பனிய வழிபாடுகளை ஏற்ற மற்ற சமூகங்கள் ஒடுக்கத்தை சந்திக்கவில்லையா.. என்றால்...


உதாரணமாக நான் நாஞ்சில் நாட்டவன், இங்கு பட்டியல்படுத்தப்பட்ட இனமாக கருதப்படுவது சாம்பவர் இனத்தினர். இவர்களில் பலர் நிலவுடைமையாளர்களாக இருந்திருக்கிறார்கள். திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் இருந்த போது, 


மேலாடை அணிய தடை, முலைவரி, மீசைவரி செலுத்திய சமூகங்களில் சாம்பவர் சமூகம் கிடையாது. 


ஈழவர், சாணார் என மனுதர்மத்தை, வருண தர்மத்தை ஏற்ற சமூகங்கள் தான் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்.


குற்றப்பரம்பரை சட்டத்தில், ஈசநாட்டு கள்ளர், பிறன்மனை கள்ளர், பறையர், புலையர், தொட்டிய நாயக்கர்,வன்னியர் என பல சமூகங்கள் இடம்பெற்றிருந்தது.


தொடர்ந்து குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்க ஆங்கிலேய அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர் அம்பேத்கர். 


1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து பேசினார்.


ஆதிதிராவிட நலப்பேரவை, வன்னியர் சங்கம், தஞ்சை ராஜாளியார் ஆகியோரின் முயற்சியால் அந்த சமூக மக்கள் குற்றப்பரம்பரையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 


ஆனால், நேதாஜியுடன் இணைந்து செயல்பட்ட காரணத்திற்காகவே பசும்பொன் முத்துராமலிங்கனாரோடு இணைந்து செயல்படும், பிறன்மனை கள்ளர்களை விடுவிக்காமலும், பசும்பொன் தேவரது சொந்த ஜாதியான அவர் பிறந்த உட்பிரிவான ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப்பரம்பரை சட்டத்தில் இணைக்கிறார்கள். 


ஆப்ப நாட்டு மறவர்களை இப்பட்டியலில் இருந்து நீக்கக் கோரி அரசைச் சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வரதராஜூலு நாயுடு. உறுப்பினர்களாக நவநீதிக்கிருஷ்ணத் தேவர், பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சசிவர்ணத் தேவர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 


ஆனால் இரண்டாம் உலகப்போரின் முடிவுகளை எண்ணி, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும் முடிவை பிரிட்டிஷ் அரசு, வழங்குகையில், 


பட்டியல்படுத்தப்பட்ட மக்களை ஒடுக்கும் இந்த நாட்டைவிட்டு வெளியேறி, அவர்களோடு தனிநாடு உருவாக்க அம்பேத்கர் கோரிக்கை வைத்தார். 


ஆனால் ஹரியை வணங்காத, ஹரியை ஏற்காத இந்த ஜனங்களை ஹரிஜனங்கள் என ஏமாற்றியதோடு, முகமது அலி ஜின்னாவை தூண்டிவிட்டு மதகலவரங்களை உருவாக்கி, மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிய காரணமானார்.அம்பேத்கரின் தனிநாடு கோரிக்கையை நீர்த்துபோக செய்த பிறகு, ஆங்கில அரசு நிர்வாகத்திடம் எழுப்பிய கோரிக்கைகளில் ஒன்று குற்றப்பரம்பரை சட்ட நீக்கம். 


1947 ஜூன் 5 ஆம் நாள்,குற்றப் பரம்பரைச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. 


1947ல் சுதந்திரம் வழங்கிய பிறகு, ஆங்கிலேய  தலைமை ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு,ஜவஹர்லால் நேருவிடம் வற்புறுத்தி வழங்கிய பதவியே, எதிர்முகாமில் இருந்த அம்பேத்கருக்கு வழங்கப்பட்ட சட்ட அமைச்சர் என்பதும், அரசியலமைப்பு சட்ட வரைவுக்குழுவின் தலைவர் என்பதும்,


கிடைத்த அதிகாரத்தைக்கொண்டு சமரசமில்லாமல் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக சட்டமியற்றினார்.


பட்டியலின இட ஒதுக்கீட்டை அரசியலமைப்பு சட்டமாக்கிய போதே, 


பட்டியல்படுத்தப்படாத இனங்களிலும் ஒடுக்கப்படுகின்ற இனங்களை பற்றிய தகவல்களை கேட்க அரசு அதனை தர மறுத்தது...இல்லை என்று மறுதலித்தது.


ஆனாலும், எனவே,  கமிஷன் அமைத்துப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரித்த பிறகு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்யலாம் என்று அம்பேத்கருக்கு அப்போது பதிலளிக்கப்பட்டது. 


அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவரல்ல...ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர். 


பெருமுதலாளிகள் தொழிலாளர்களை ஒடுக்கினர்.


சட்ட அமைச்சராக,


அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் முன்,தொழிற்சாலைகள் சட்டம் 1948, குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948,

ESI சட்டம் 1948, 

உருவாக்கினார்....


1950 முதல் 

இந்தியாவின் அரசியலமைப்பில், 14-16, 19 (1) (C), 23-24, 38 மற்றும் 41-43A ஆகியவை நேரடியாக தொழிலாளர் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரிவுகள். 


எல்லோரும் சட்டத்திற்கு முன் சமமானவர்களாக இருக்க வேண்டும் என்பதை 14 வது சட்டப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 


15 வது சட்டப்பிரிவில், அரசு குடிமக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது,


 மேலும் 16 வது சட்டப்பிரிவில் உரிமையை நீட்டிக்கின்றது "வேலையை சமமாக பகிர்ந்தளித்தல்" மாநிலத்தின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது பணிநியமனம் செய்தல்.


பிரிவு 19ன் கீழ்(1) அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட உரிமையை "தொழிற்சங்கங்களை உருவாக்கம்" செய்யவேண்டும்.


பிரிவு 23 ல் தொழிற்சாலைகளிள் நடக்கும் அனைத்து கடத்தல் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக வேலைபழு அளிப்பதை தடைசெய்கிறது. 


பிரிவு 24 ல் பதினான்கு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் "தொழிற்சாலையிலோ அல்லது வேறு எந்தவிதமான அபாயகரமான வேலைவாய்ப்பிலும்" ஈடுபடுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர்களைச் தடைசெய்கிறது.


 பிரிவு 42 ல் மனிதனின் பாதுகாப்பிற்காக மற்றும் மகப்பேற்று நிவாரணம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.


பிரிவு 43 ல் தொழிலாளர்கள் வாழ்க்கை ஊதியம், நிலையான வேலைவாய்ப்பு மற்றும் ஒரு கெளரவமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் உரிமை. 


ஆனால் தொழிற்சங்கங்கள், பொதுவுடைமை என்ற பெயரில், மார்க்ஸ், லெனினை பேசுவதை தவிர, 


8 மணி நேர வேலை தொடங்கி, குறைந்தபட்ச ஊதியம் தொடங்கி மருத்துவ காப்பீடு வரை உறுதிசெய்த அம்பேத்கரின் பணியை கொண்டு சேர்க்க தவறிப்போனார்கள்...


அடுத்து பாலின பாகுபாட்டால் பெண்கள் ஒடுக்கப்பட்டனர். 


பாலின பாகுபாட்டிற்கான ஆய்வில் சுயவருமானமீட்டும் முறை மறுக்கப்படுவதும், அதற்கான வாய்ப்பு, கல்வி, மறுக்கப்படுவதும் காரணிகள் என்பதை கண்டறிந்தார். பாலியல் பாகுபாட்டை கட்டமைக்க ஆணை சார்ந்திருக்கும் சூழலும், பெண் தனித்தியங்கும் சூழலியலும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து....


 9 ஏப்ரல் 1948 அன்று ஒரு தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டஇந்து குறியீட்டு மசோதா(Hindu code bill)

 அறிமுகப்படுத்தப்பட்ட (ஒரு வழக்கறிஞரும், சமஸ்கிருத அறிஞரும் வெறும் உறுப்பினராக கொண்டு வந்த.  மிதாக்ஷ்ரா" மற்றும் "தயாபக" என இரண்டு)  சட்டங்கள் நிறைவேறியது.


[ மிதக்ஷ்ரா சட்ட நிலையில், ஒரு மனிதனின் சொத்து தனிப்பட்ட சொத்து அல்ல, அதே சமயம் அது இணை உரிமையாளர்களுக்கு (ஆண் வரிசையின் ) சொந்தமானது, வேறுவிதமாகக் கூறினால், தந்தை, மகன், பேரன் மற்றும் கொள்ளுப் பேரன், அவர்களின் பிறப்பிலிருந்து மட்டுமே.


 அதேசமயம், தயாபக சட்டத்தில், சொத்தின் உரிமை என்பது அதன் தனிப்பட்ட தன்மையைக் கொண்டுள்ளது - அதாவது, தனது முன்னோர்களிடமிருந்து சொத்தை வாரிசாகப் பெறுபவர், அந்தச் சொத்தின் மீது முழு உரிமை பெற்றவர். இது ஆண்களுக்கானது. ]


எனவே சட்ட அமைச்சராக, 


பாலியல் பாகுபாட்டை விலக்க, பெண்களுக்கு சொத்துரிமை, விதவைகளுக்கும் சொத்தில் பங்கு, பெண்கள் தனித்து வாழும் உரிமை, குழந்தை திருமணத்தடை, பெண்கள் சுயதொழில் தொடங்க வகை செய்தல்,வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்தல், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, விதவை மறுமணம், விருப்பத்திருமணம், என பாலியல் பாகுபாட்டை வேரறுக்க இந்து குறீயிட்டு மசோதாவை கொண்டு வந்தார். 


ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.


அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்து ஒருவருடமான பின்னும், இதர ஒடுக்கப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்க இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய கமிஷன் அமைக்காமல் இருந்தது, பெண்களுக்கான இந்து குறீயீட்டு மசோதா நிராகரிக்கப்பட்டது என்ற காரணங்களுக்காக 27-10-1951 தனது சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்.


மறுபடியும் 03-04-1952ல் பம்பாய் மாகாண மாநிலங்களவை உறுப்பினரான பின்னும், சட்ட அமைச்சராக்க எந்த நேருவுக்கும் துணிவில்லை.  காரணம் அவர் மீண்டும் அமைச்சரானால் ஒடுக்கப்பட்டவர்கள், மீண்டெழுவார்கள் என்ற எண்ணம்தான்...


பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரிக்க

1977ல் தான் காலேல்கர் கமிஷன் அமைத்ததும் மொராஜி தேசாய் ஆட்சி கவிழ்ந்து, மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் மூலம் 1989ல் V.P.சிங் நடைமுறைபடுத்த அந்த ஆட்சியும் கவிழ்ந்தது. ராம ரத யாத்திரை, லல்லு பிரசாத் தடுத்தது. கோஸ்வாமி தீக்குளிப்பு நாடகங்கள், பாபர் மசூதி இடிப்பு,  அத்தனையும் இட ஒதுக்கீடு சட்டமாவதை தடுக்கவே...


விதைத்தவன் உறங்கலாம்,விதைகள் உறங்குவதில்லை...


தன் சமூகத்தினரின் ஆலய நுழைவை உறுதி செய்ய முடியாமல், சமரசமாகி தன்னை இறைவனாக்கிய அய்யா வைகுண்டர், நாராயண குரு, அந்த சமூகம் வழிபடும் ஒருவராகி போனார்கள்.


தன்னை ஆயுதமாக்கி சமரசமில்லாமல் போராட சொன்ன அம்பேத்கர், இன்று உலகம் கொண்டாடும் அறிஞனாகி போனார்.


கல்வி மட்டுமே எதையும் எதிர்க்கும் உன்னத ஆயுதம் என உலகிற்கு உணர்த்தி போன, உன்னதமானவனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்....


                                    - சாய்.S.சுரேஷ் குமார் 

                                       +91 - 8344 00 2855

Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்