Yaathisai

 #பொன்னியின்_செல்வன் 

#யாத்திசை 


முந்தைய பதிவில், பொன்னியின் செல்வனில் கல்கியின், பார்ப்பனர்களை நல்லவர்களாக சித்தரிக்க கையாண்ட வக்கிர எண்ணங்கள், பிரதிபலித்ததையும், அதை அப்படியே காட்சிபடுத்திய மணிரத்னத்தின் படைப்பையும் பார்த்தோம். 


பொருளாதார தன்னிறைவு பெற்ற பெண்கள் மட்டுமே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த, செயலாற்ற, காதலிக்க அனுமதிக்கப்பட்டார்கள். 


குந்தவை, வானதிக்கு காதலை வெளிப்படுத்த எந்த தடையும் இல்லை. ஆனால் பூங்குழலி, மந்தாகிணி, நந்தினி அத்தனை பேரும் காதலை காதலாக வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல், ஆண்களை மயக்கித்தான், கவர வேண்டிய நிலை இருந்தது என கல்கி எழுதியும், மணிரத்னம் காட்சிபடுத்தியும் உள்ளார்கள்.


ராஜராஜன் மட்டும் நந்தினியிடமும் மயங்க மாட்டான், வேறு பெண்கள் தன்னை காதலிப்பதையும், கவர நினைப்பதையும் எளிதாக கடந்து செல்வான். 


மதுராந்தகனும் கூட, ஆதித்த கரிகாலனை எதிர்க்க, சோழநாட்டின் பரம எதிரியான ராஷ்ட்ரகூட இளவரசியை மாதுரியை மணக்க சம்மதித்து அவர்களிடம் கூட்டமைத்து கொள்கிறான்.


மதுராந்தகன் அரியணையை கைப்பற்ற, காளாமுகர்களின் உதவியுடன் ஆதித்த கரிகாலனை வீழ்த்த, கூட்டமைக்கிறான்.அந்த காளாமுகர்களை சிவனை வழிபடுபவர்களாக காட்சி அமைத்திருக்கிறார் மணிரத்னம்.


[ காளாமுகர்கள் என்பவர்கள் காபாலிகர்கள் எனப்படும் சாக்த வழிபாடான காளிதேவியை வழிபடுபவர்கள். 


இந்த காபாலிகர்கள் வழிபட்ட கோவில்தான், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்.,


பலியிடுதலுடன் உக்கிர வழிபாடுகள் கொண்ட சாக்த வழிபாட்டில், புகுந்த பார்ப்பனிய கும்பல், 


அதிகமான நிலங்களை தானமாக கொண்ட கைப்பற்ற, இக்கோவிலை காபாலிகர்களிடமிருந்து மீட்க, 


ஆதிசங்கரர் எனும் கேரள பிராமணன், காளி உக்கிர தெய்வமாக இருப்பதால், அவளால் நன்மைகள் நடக்காது, மனித உயிர் பழி தொடரும்,என பயமுறுத்தி,


அம்மனை சாந்தப்படுத்த தன்னால் தான் முடியும் என்று ஏமாற்றி ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்து, உக்ர ஸ்வருபிணியாக இருந்தவளை பரப்பிரம்மஸ்வருபிணியாக மாற்றியதாக நம்பவைத்து, காபாலிகர்களை விரட்டியடித்து, கோவிலை கைப்பற்றி, இறுதியில் அதனை விஸ்வ பிராமணர்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலாக்கினார். அதுதான்  காஞ்சி காமகோடி பீடமான,சங்கரமடம்.


போர் கடவுளான கொற்றவை வழிபாடுகளில் பலியிடுதல் பிரதாணம்.

அவைகளுக்குள் ஊடுருவிய பிராமணியம்,தங்கள் கட்டுபாடுகளுக்குள் கொண்டு வந்து, பலிபீடம், கொடிமரம், என பலியிடுதல் தடுக்கப்பட்ட நிகழ்வுகள் தான் வரலாறு. ]


ராஜராஜன் ஈழம் சென்றான், ஈழம் வென்று திரும்பினான், புயல், பூங்குழலி, நந்தினி அத்தனையும் கல்கியின் புணைவுகளே தவிர வரலாறல்ல....


உண்மையான வரலாறென்பது, சுந்தர சோழன் இறக்கும் வரை, வானவன் மாதேவி உடன்கட்டை ஏறும்போது, எழுதிய குறிப்பின்படி, அருள்மொழி அதாவது ராஜராஜசோழன் கைக்குழந்தை என்கிறது அந்தக்குறிப்பு.


கண்டராதித்ய சோழனுக்கு பிறகு, மதுராந்தகனுக்கு கிடைக்க வேண்டிய மணிமுடி, மதுராந்தகன் குழந்தையாக இருந்ததால், மதுராந்தகனின் சித்தப்பனான அரிஞ்சய சோழன் மன்னராகிறான். 


அரிஞ்சய சோழனுக்கு பிறகாவது மணிமுடி மதுராந்தகனுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அரிஞ்சய சோழன் தன் மகனாக இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழனுக்கு பட்டம் சூட்ட, சரி சுந்தர சோழனுக்கு பிறகு மூடிசூட காத்திருந்தவனுக்கு ஏமாற்றம் மிஞ்ச, ஆதித்த கரிகாலன் பட்டத்து இளவரசனாகிறான். 


அதன்பிறகு சோமன், ரவிதாசன் போன்ற சோழ அமைச்சரவையில் இருந்த பார்பன அமைச்சர்கள் ஆதித்த கரிகாலனை சதிசெய்து கொல்ல, அதன் பின் சுந்தர சோழன் நோய்வாய்ப்பட்டு இறக்க, சுந்தர சோழன் இறந்தபிறகு இயல்பாக மூடிசூடி கொண்டான் மதுராந்தகன் என்ற உத்தமசோழன்.


ராஜராஜன் வழங்கியதாக கூறுவதே வரலாற்று புரட்டு. 


உத்தம சோழனுக்கு ஐந்து மனைவிகள் உள்பட  மனைவியர் பலர் இருந்தனர். அருள் - பட்டன் தான தொங்கி, மழபாடி தென்னவன் மாதேவியார், வானவன் மாதேவியார், விழுப்பரையன் மகளார், பழுவேட்ட ரையன் மகளார் குறிப்பிடத் தக்கவர். 


இவ்வைவரும் சேர்ந்து தம் மாமியாரான செம்பியன் மாதேவியாரது பிறந்த நாள் பூசனைக்காகச் செம்பியன்மாதேவி (கிராமம்)யில் உள்ள அவையாரிடம் காசு கொடுத்தனர் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது.


பட்டத்து அரசியார் ‘உரத்தாயன் சொரப்பையார்’ (கன்னடப் பெயர்) என்பவர். இவர் ‘அக்கமாதேவியார்’ என்றும் ‘மூத்த நம் பிராட்டியார்’ என்றும் அழைக்கப்பட்டனர். இவர் ‘திரிபுவனமகாதேவியார்’ என்றும் பெயர் பெற்றனர். 


உத்தம சோழன் மனைவியர் அனைவரும் தம் மாமியார் பெயர் கொண்ட (தஞ்சாவூர்க் கோட்டத்தில் உள்ள) ‘செம்பியன்மாதேவி’ என்னும் சிற்றூரில் உள்ள சிவன் கோவிலுக்கே பல தானங்களைச் செய்தனர். 


இராசராசனுக்கு மனைவிமார் பலராவர். கல்வெட்டுகளில் மட்டும் 15 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 


உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் முதலியோர் ஆவர். இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்தனன். 


இதுதான் வரலாறு.... 


தமிழனின் மானுடவியலுக்குள், எப்போது ஆரிய கலப்பு நிகழ்ந்ததோ, அன்றிலிருந்து ஆரிய ஆதிக்கம் மேலோங்கி, அதன் புரட்டுக்களை அதிகாரம் மூலம் நடைமுறைப்படுத்தினர்.


கற்பு, ஒழுக்கம், மானம், கட்டுப்பாடு இவை எல்லாம், ஆண்களுக்கும், ஆதிக்கத்திற்கும் கிடையாது. 


யாத்திசை,

ரணதீர பாண்டியன் எனும் பாண்டிய அரசன் சேர,சோழநாட்டை வீழ்த்துகிறான். சேர மன்னனை நாடுகடத்துகிறான். சோழர்கள் நாடோடிகளாக தலைமையற்று நளன் என்ற இளவரசன் இளைஞனாகும் வரை தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டிய நிலைக்கு வருகின்றனர். சோழர்களுக்கு துணைநின்ற வேளீர்களான எயினர்களை, பாலை நிலத்திற்கு நாடுகடத்துகிறான்.


வேளாண்மையை தொழிலாக கொண்ட எயினர்கள், பாலைநிலத்தில் வேட்டையை தொழிலாக கொண்டு வாழ, எயினர்களில் கொதி என்பவன் ரணதீரனை வீழ்த்தி சோழநாட்டை மீட்க வேண்டும். 


தன் இனத்தவர்கள் மீண்டும் வேளாண்மை செய்ய வேண்டும். எந்த வரியும் செலுத்தாத தன்னாட்சி நாடாக, தன் இனத்தவர் வாழும் பகுதிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு முயற்சிக்கிறான்.


அதற்காக சோழர்களை தேடி கண்டடைந்து, தன் திட்டத்தை கூற,சோழர்கள் தலைமையற்ற நிலையை கூறி,உதவ மறுக்க... தன் குழுவினரும் முதலில் மறுக்க,பின் ஒப்புக்கொள்ள, 

தன் சிறிய குழுவினருடன் முறையாக திட்டமிட்டு ரணதீரனை வீழ்த்துகிறான்.


எயினர் தலைவன் கொதி சோழநாட்டை கைப்பற்ற, கொதியை வீழ்த்த ரணதீரன் படைதிரட்டுகிறான். 


கொதிக்கு சோழர்கள் தொடங்கி மற்றவர்களின் ஆதரவும் கிடைக்காமல், சொந்த இனக்குழுவிற்குள் கலகங்களும் பிறக்க, 


பெரும்பள்ளிப்படை பாண்டியனுக்கு உதவ, தங்கள் குல பெண்ணை, ரணதீரனுக்கு மணமுடிக்க, அவள்மூலம் பிறக்கும் வாரிசு நாடாளாது என கூறியே மணமுடிக்கிறான்.


எயினர் என்ற சிறிய இனக்குழுவை எதிர்த்து, மிகப்பெரிய படைதிரட்டி வருகிறான் ரணதீரன்.


சோழநாட்டில் உள்ள குடியானவர்களின் ஆதரவை பெற, சோழதேச அரசபிரதிநிதியான பிராமணனின் உதவியை நாட, ஏற்கனவே தேவதாசி விவகாரத்தில் கொதியுடன் ஏற்பட்ட முரணால், உதவ மறுக்க... 


முடிவில் கூட்டத்தின் அழிவை தடுக்க, தனிநபர் போர் கேட்டு, போராடி உயிர்துறக்கிறான் கொதி. 


தேவதாசி முறையில், பாண்டிய நாட்டு ஆடலழகியை, அடைய ஆசைப்படும் சோழதேச அரசபிரதிநிதி பார்ப்பனன். அதற்காக சோழநாடு பாண்டிய நாட்டு தேவதாசி, அவளை அடைய நினைக்கும் எயினன் கொதி. அதனால் கொதிக்கும் பார்ப்பனனுக்குமான முரண், ரணதீரனுக்கு உதவ பெரும்பள்ளி இளவரசியை மணமுடித்த நிகழ்வு.... என எல்லாவற்றிலும் பெண் ஒரு பொருளாக கருதப்படுகிறாளே தவிர, உணர்ச்சி உள்ள ஒரு உயிராக கூட அவள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத நிலையைத்தான் காணமுடிகிறது.


என்ன பொன்னியின் செல்வனில், பாண்டிய ஆபத்துதவிகளில் பெண்கள் இருந்தார்கள். போர்களத்தை காணாதவர்களாக இருந்தனர். யாத்திசையில், எயினர் குழுவிலும், பெரும்பள்ளிகள் குழுவிலும் பெண்களும் போரில் ஈடுபட்டார்கள் என காட்சிபடுத்தியிருந்தார்கள்....


மொத்தத்தில் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியில் வென்றது முடியரசர்களாக இருக்கலாம். ஆனால் முடியரசர்களோடு, சமூகத்தையும் ஆதிக்கம் செலுத்தி அடிமைபடுத்தி, பாலின பாகுபாடு, சாதிய பாகுபாடு என அத்தனை பாகுபாடுகளையும் உட்புகுத்தி வென்றது பார்பனிய ஆரியம்தான்.... என்கிறது வரலாறு.... 


இந்த புணைவுகளையும், வரலாற்றையும் விட, காலத்திற்கேற்ப நம்மை நாமே தகவமைத்து கொள்வதே சிறந்ததாக இருக்கும்.....


                                        - சாய்.S.சுரேஷ் குமார்

                                              +91 - 8344 00 2855  



Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்