Truth of Thamizh
#தமிழ்தேசியமா_சாதீயமா...?
உசிலம்பட்டி மூக்கையாதேவர் பிறந்தநாள் விழாவில், சீமான் பேசிய தகவல்கள் உண்மையா...?
சாட்டை துரைமுருகன் 100 அடியில் மூக்கையா தேவருக்கு சிலை வைப்பதாக பேசியதும், குற்றப்பரம்பரை என தன்னைத்தானே கூறிக்கொண்டதும்,
பதவியை விரும்பாதவர் என பசும்பொன் தேவரையும், மூக்கையா தேவரையும் குறிப்பிட்ட சீமானுக்கு தெரியுமா முதுகுளத்தூர் கலவரமும், கீழ்த்தூவல் நிகழ்வுகளுமே அரசியல் பதவிகளுக்காகத்தான் என்று தெரியுமா...?
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் ஒரு குறிப்பிட்ட சாதி கட்சியானது எப்படி வரலாறு தெரியுமா...? கோமாளி சீமானுக்கு...
பார்வர்ட் ப்ளாக் கட்சி இரண்டாக பிளவுபட்டு, சசிவர்ணத்தேவர் தனிக்கட்சி தொடங்கியது எதற்காக...பதவி ஆசை இல்லாதவர்களா..?
தேர்தல் அரசியலில் ஈடுபடாத, எந்த பதவியும் விரும்பாத, தன் குடும்ப சொத்துக்களை மட்டுமல்ல,
சுயமரியாதை இயக்க தொண்டர்கள், திராவிடர் கழகத்தொண்டர்கள்,தன் எழுத்துக்கள், பொதுக்கூட்டங்கள், மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய், அத்தனையும் அறக்கட்டளை என்ற பெயரில் சேர்த்தபோதே,
வாரிசற்றவர் என்ற நம்பிக்கையில், தன் குடும்ப உறுப்பினர்களும், கழகத்தில் உள்ள சிலரும் தவறான மனக்கணக்கை, பொய்யாக்கவே,
அன்றைய தினத்தில், பெண்ணின் திருமண வயது 14 ஆக இருந்தபோது, குழந்தை திருமணங்கள் நடைபெற்ற காலத்தில்,
சுயமரியாதை இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட வேலூர் கனகசபை எனும் ஒரு தந்தை, தன் மகளின் விருப்பப்படி, தனித்து வாழ அனுமதி அளித்தது காந்திமதிக்குத்தான்.
முத்துராமலிங்கத்தேவர் திருமணம் செய்யவில்லை, காமராஜர் திருமணம் செய்யவில்லை, நாட்டுக்காக வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார் என கதையளப்பதை விட்டுவிட்டு,
ஆண் எனும் ஆதிக்கம் குடி கொண்ட சமூகத்தில், தனித்து வாழ்வதோ, ஒரு மனைவியுடனோ, பல மனைவியுடனோ, வாழ்ந்த ஆண்களை நோக்கி வரும் விமர்சனங்களும்,
பெண்ணுக்கு அப்படி ஒரு சூழலே தராமல், பாலினத்தால் மட்டும் பெண் விமர்சனங்களை சந்திக்கின்ற சூழலில்,
பாலின பாகுபாடு காட்டாத காந்திமதியின்(மணியம்மை) தந்தை கனகசபைதான் மிகப்பெரிய சீர்திருத்தவாதி.
1898ல் நாகம்மையை மணந்து, மகளை பிறந்து 5 மாதத்தில் பறிகொடுத்து, அதற்கு பிறகு மகவு காணமுடியாது என தெரிந்தும், உறவினர்கள் (பலதார மணம் நடைமுறையில் இருந்தும்) இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தியும், 35 வருடம் தன் மனைவியின் மரணம் (1933) வரை பிரியாமல் வாழ்ந்த ஒரு காதல் கணவனாக வாழ்ந்த பெரியாரா ( உங்கள் மொழியில்) ராமசாமி நாயக்கரா சொத்தை பாதுகாக்க 15 வருடம்(1948) கழித்து, குடலிறக்கம் கண்ட ஒருவனுக்கு,துணை அவசியமானதெனில் அதன் தேவையை புரியாத மனநல நோயாளிகளுக்கு எதை சொல்லி புரிய வைப்பது.
1917 ஈரோடு நகர்மன்ற தலைவராக இருந்தவர் தான், பதவியை உதறிவிட்டு சுயமரியாதை இயக்கம் கண்டார்.
அவர் கன்னடரோ, தெலுங்கரோ, மலையாளியோ, ஏன் இன்னொரு நாட்டவனாக இருந்துவிட்டு போகட்டுமே, ஒரு தலைவனுக்கு தேவை கொள்கையும், கோட்பாட்டியலும் தானே தவிர, மொழி அல்ல...
அம்பேத்கரை ஏற்க முடியாது என்ற முட்டாளுக்கு, பெரியாரும் அவர் கருத்தியலும் புரியாது என்பதில் தவறேதும் இல்லை.
உசிலம்பட்டியில் சீமான் பேசியதால்,தன் சொத்துக்களை ஏழைகளுக்கு பிரித்து கொடுத்த முத்துராமலிங்க தேவர் சாதிய தலைவரா எனக்கேட்டதற்காக, பதிலளிக்கிறேன்...
ஏழைகளுக்கு தன் சொத்துக்களை பகிர்ந்தளித்தார்...தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொத்துக்களை வழங்கினார் என கட்டுக்கதைகளை எல்லாம் இனி நம்ப எவனும் தயாராயில்லை....
முத்துராமலிங்கத்தேவர், 1960 இதே ஏப்ரல் மாதத்தில், திருச்சுழி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்துத்தான் தன் சொத்துக்களை 17 பாகங்களாக பிரித்து, ஒரு பாகத்தை தனக்கென்று வைத்துக்கொண்டு,16 பாகங்களை 20 வருடங்களாக தனக்கு சேவை செய்த, நம்பிக்கைக்குரிய 16 பேருக்கு இனாம் சாசனம் எழுதி வைத்தார். அந்த 16 பேரில், வீரன், சன்னாசி இருவர் மட்டுமே குடும்பன்(பட்டியலினத்தை) சார்ந்தவர்கள்.
மீண்டும் அறக்கட்டளை தொடங்கும் போது அந்த இருவர் உட்பட 12 பேரும், அதே சொத்தை மீண்டும் இனாம் சாசனம் எழுதி கொடுத்து திரும்பக்கொடுத்துவிட்டனர்...
எந்த ஏழைகளுக்கு/தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொத்தை பகிர்ந்து வழங்கினார்...
அந்த பாவப்பட்ட 16 தாழ்த்தப்பட்டோர்களின் பெயர்கள் பின்வருமாறு...
1) ஏ.ஆர்.பெருமாள் தேவர் - அருப்புக்கோட்டை
2) ராமசாமி தேவர் - தூரி(முதுகுளத்தூர்)
3) வி.ஏ.சிவன் சேர்வை -அருப்புக்கோட்டை
4) செல்லமுத்து தேவர் - பார்குளம்(முதுகுளத்தூர்)
5) நல்லகுட்டித் தேவர் -பசும்பொன்
6) சின்னத்தம்பி தேவர் -பசும்பொன்
7) நாகநாத சேர்வை -பசும்பொன்
8) வெள்ளைச்சாமி தேவர் -கல்லுப்பட்டி
9) ராமச்சந்திர தேவர் -பசும்பொன்
10) அட்டெண்டர் முத்துச்செல்வம் அம்பலம் -மதுரை
11) மா.குருசாமி பிள்ளை -திருச்சுழி
12) வடிவேலம்மாள் (சகோதரி முறை) -பசும்பொன்
13) ஜானகி அம்மாள்(சகோதரி முறை) -பசும்பொன்
14) முத்துராசு பிள்ளை -கல்லூரணி(சிவகங்கை)
15) வீரண குடும்பன் -பசும்பொன்
16) சன்னாசி குடும்பன் -பசும்பொன்
செல்லமுத்து தேவர்,ராமசந்திர தேவர், வடிவேலம்மாள், ஜானகி அம்மாள் இந்த 4 பேர் தவிர மற்றவர்கள், அந்த சொத்தை திரும்ப வழங்கிவிட்டார்கள்.
இந்த வரலாறு தெரியுமா...?
குற்றப்பரம்பரை என வீரவசனம் பேசியது இருக்கட்டும்.
ஏன் அந்த 89 சாதிகள் குற்றப்பரம்பரையானார்கள்...?
இன்று 68 பிரிவுகள் சீர்மரபினர் என அடையாளம் பெறுகின்றனர் என்ற வரலாறு தெரியுமா..?
1876ல் தொடங்கப்பட்ட சட்டம் 1911ல் சென்னை மாகாணத்தில் நடைமுறைக்கு வந்தது.இந்தக் கொடூரச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய குழுவின் பொறுப்பாளர் இராமானுஜ அய்யங்கார் ஆவார்.
குற்றப்பரம்பரையினர் என அறிவிக்கப்பட்ட பகுதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது.
காவலர் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்களுக்கும் கூட விதிவிலக்கு கிடையாது என்று கொடுமைகளை அனுபவித்தனர்.
1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள் தலைமையிலேயே கள்ளர்களைக் கண்காணிக்கும் கண்காணிப்பு கிராமங்களாக ‘கள்ளர் பஞ்சாயத்துக்கள்’ உருவாக்கப்பட்டன. இப்படி கள்ளர்களை வைத்தே கள்ளர்களை அடக்கிய நுட்பத்தை ஆங்கிலேயருக்கு அறிவுறுத்தி செயல்படுத்தியவன் அப்போது மதுரை மாவட்ட துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஏ.கே. இராஜா.
ஆனால் இவர்களில் விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றப்பரம்பரை நடவடிக்கையால் சிவகங்கை மதுரை பகுதிகளில் வாழ்ந்த கள்ளர் சமூகத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் கும்பகோணம் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த கள்ளர்கள் ஒரு போதும் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு உட்படுத்தப்படவில்லை.
அது எப்படி..?, ஈசநாட்டு கள்ளர்களுக்கு ஒரு நியாயம், பிறன்மனை கள்ளர்களுக்கு ஒரு நியாமா...?
ஈச நாட்டு கள்ளர்கள் மட்டுமல்ல, வன்னியர்,ஆதி திராவிடர், என ஒவ்வொரு பிரிவினரும், செய்யூர் ஆதி திராவிடர் பேரவை, வன்னியகுல சத்திரிய சபா ஆகிய அமைப்புகள் போராடி அந்தந்த ஜாதிகளை பட்டியலில் இருந்து விடுவித்தன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் என்பவர் தஞ்சை, திருச்சி மாவட்ட கள்ளர்களை குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார். 1911-லேயே ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப் பேசி குற்றப் பரம்பரைப் பட்டியலில் இருந்து தஞ்சைப் பகுதி ஈச நாட்டுக் கள்ளர்களை மீட்டிருக்கிறார்.
ஆனால் பிறன்மனை கள்ளர்களுக்காக போராடி மீட்க அப்படியொரு அமைப்பு இல்லை.1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் மக்களே தன்னெழுச்சியாக இச்சட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்தினர். அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 கள்ளர்கள் வீரமரணம் அடைந்தனர். குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிக முக்கியப் போராட்டம் இதுதான். இந்தப் போராட்டத்திற்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவருக்கு அப்போது வயது 12. மதுரைக்கு அருகே பசுமலையில் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்.
அதன் பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கேரளாவைச் சேர்ந்தவரும் மதுரையில் குடியிருந்தவருமான ஒரு வழக்கறிஞர், வைக்கம் போராட்டத்திற்கு பெரியாரை வரவழைத்த மலையாளியான ஜார்ஜ் ஜோசப். இவர்தான் முதன்முறையாக கள்ளர் நாடு முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களைத் திரட்டி குறிப்பாக குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கெதிராக மட்டுமே போராட்டங்களை முன்னெடுத்தவர். இவரை அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பு துரை’ என்றே அழைத்தனர்.
இச்சட்டம் தேவர்களுக்கு மட்டும் இருந்த சட்டமல்ல. தேவர்களிலும் அனைத்து மக்களுக்கும் பொருந்திய சட்டமல்ல. அனைத்து ஜாதிகளிலும் இருந்த உண்மையாகவே திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளையில் ஈடுபட்ட மக்களைக் கட்டுப்படுத்தக் கொண்டு வரப்பட்ட சட்டம். 1932 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பசும்பொன்தேவர் இப்படிப்பட்ட உண்மைக் குற்றவாளிகளை ஒடுக்குவது தவறில்லை என்றே பேசியிருக்கிறார்.
1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக் குழு முன்னிலையில் நடந்த விசாரணையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இச்சட்டத்தின் கொடுமைகளையும் தீர்க்கும் வழிமுறைகளையும் குறித்து,என விரிவாகப் பேசி, இந்திய அரசின் சாதகமான பதிலையும் பெற்றார்.
இந்த விசாரணையில்தான் மிக முக்கியமாக குற்றப் பரம்பரைச் சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப் பரம்பரையினர்க்கு மறுவாழ்வு அளிப்பதற்கோ, அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின் ஆளுநரைவிட அந்தந்த மாகாண அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை இந்திய அரசே பதிவு செய்தது. அதற்கு காரணம் புரட்சியாளர் அம்பேத்கர்.
இதற்கெல்லாம் பிறகுதான் முத்துராமலிங்கத் தேவர் வருகிறார். 1933 செட்பம்பர் 25 ஆம் தேதி பசும்பொன் தேவரது சொந்த ஜாதியான அவர் பிறந்த உட்பிரிவான ஆப்பநாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப் பழங்குடியினர் சட்டத்தில் இணைக்கிறார்கள்.
இந்தச் சமயத்தில் தான் தேவர் அச்சட்டத்தை எதிர்க்கத் தொடங்குகிறார்.
1934 மே மாதம் 12 ஆம் தேதி கமுதி அருகே உள்ள அபிராமம் என்ற ஊரில் காங்கிரஸ் தலைவரும் பெரியாருடன் சேரன்மாதேவி குருகுலக் கிளர்ச்சியில் இணைந்து போராடியவருமான பி. வரதராஜூலு நாயுடு தலைமையில் இச்சட்டத்தை எதிர்த்து ஒரு மாநாடு நடத்தப்பட்டது.
மாநாட்டுக்கு 6 மாதத்திற்கு முன்பு பெரியார் இன்றைய ஆட்சிமுறை ஒழிய வேண்டும் ஏன்? என்ற கட்டுரையை எழுதியதற்காக இராஜதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, இராஜமகேந்திரம் சிறையில் கடுங்காவல் தண்டனையில் இருந்தார்.
அவரை வரதராஜூலு நாயுடு நேரில் சந்தித்தார். அதன் பிறகுதான் குற்றப் பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டுக்கு வருகிறார்.
ஆப்ப நாட்டு மறவர்களை இப்பட்டியலில் இருந்து நீக்கக் கோரி அரசைச் சந்தித்துப் பேச ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் வரதராஜூலு நாயுடு. உறுப்பினர்களாக நவநீதிக்கிருஷ்ணத் தேவர், பிள்ளையார்குளம் பெருமாள் தேவர், சசிவர்ணத் தேவர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அப்போதைய அரசை சந்தித்து இக்குழு மனு ஒன்றை அளித்துள்ளது.
1934 இல் அபிராமத்தில் நடைபெற்ற மாநாட்டைத் தவிர குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிராக குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தப் போராட்டத்தையும் பசும்பொன் தேவர் நடத்தவில்லை. இரண்டாம் உலகப் போர் நடந்த காலங்களில் 1945 வரை தேவர் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே இருந்தார். 1945 செப்டம்பர் 5 ஆம் நாள் விடுதலை ஆனார். 1947 ஜூன் 5 ஆம் நாள் வெள்ளைக்காரன் இருக்கும் போதே குற்றப் பரம்பரைச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
1919 இல் பிரிட்டிஷ் காமன்ஸ் அவையின் இந்திய அரசின் செயலரான எட்வின் சாமுவேல் மாண்டேகு மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் பிரடிரிக் ஜான் நேப்பியரின் பேரனான செம்ஸ்போர்ட் ஆகியோர் இந்தியர்களுக்குப் படிப்படியாக அதிகாரங்களை வழங்க, அது தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிய அனைத்துப் பிரிவு மக்களையும் சந்தித்தனர். அப்போது நீதிக்கட்சி, திராவிட சங்கம் ஆகியவற்றின் சார்பாக டி.எம்.நாயர், கே.வி. ரெட்டி, சர்.ஏ. இராமசாமி முதலியார் ஆகியோர் கருத்துருக்களை முன் வைத்தனர். அச்சமயத்தில் மறவர் மகாஜனசபை என்ற அமைப்பை உருவாக்கச் சொல்லி, அதன் சார்பிலும் கருத்துருக்களை வைக்கச் செய்தவர் டி.எம். நாயர். இலண்டனில் மாண்டேகு - செம்ஸ்போர்டு குழுவை நேரில் சந்தித்து இறுதி வடிவான கருத்துருக்களை சமர்பிக்கச் சென்றபோது இலண்டனில் மருத்துவமனையில் மறைந்தார் டி.எம்.நாயர். அதையடுத்து கே.வி. ரெட்டி அந்த கருத்துருக்களைச் சமர்பித்து, அதன் அடிப்படையில் இந்தியாவில் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாகாணத்தில் 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று கடலூர் சுப்பராயலு ரெட்டியார் முதல் முதலமைச்சராகக் கொண்டு நீதிக்கட்சி ஆட்சி தொடங்கியது. அதன் பிறகு பனகல் அரசர் 1921 முதல் 1926 வரை முதல்வராக பணியாற்றினார்.
பெருங்காமநல்லூர் போராட்டத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி அரசுதான் குற்றப் பரம்பரைச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து கள்ளர்களில் பெரும்பான்மையான மக்களை அச்சட்டத்தின் கோரப்பிடியிலிருந்து விடுவித்தது.
கள்ளர் சீரமைப்புக்கு என தனியாக ஒரு ஐ.சி.எஸ். அலுவலரை நியமித்தது. லேபர்கமிஷனர் என அப்பதவி இருந்தது. அந்த லேபர் கமிஷனர் அளித்த சிபாரிசுகளின்படி நீதிக்கட்சி அரசு கள்ளர் சீரமைப்புப் பணிகளை கள்ளர் சீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் முழு வீச்சில் செயல்படுத்தியது.
கள்ளர்கள் விவசாயம் செய்ய இலவச நிலங்களை வழங்கியது.
கள்ளர்கள் தனியாக நிரந்தரத் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி அளித்தது.
கள்ளர்களுக்கென்று இலவசக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்து, அவற்றை நிர்வகிக்கவும் செய்தது.
இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சி அளித்து அவர்களை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தியது.
மதுரை, திண்டுக்கல், உசிலம்பட்டி, சின்னாளப்பட்டி, செம்பட்டி, திருமங்கலம், தேனி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளை உருவாக்கியது.
தஞ்சை மாவட்டத்தில் கள்ளர் மகாஜன சங்கத்தாலேயே கைவிடப்பட்ட கள்ளர் பள்ளிகளை அரசு ஏற்று நடத்தியது.
பெரியாறு அணைப் பாசனத் திட்டத்தில் கள்ளர் நாட்டுப் பகுதிகளையும் இணைத்து தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்தது.
1922 இல் வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் கள்ளர்கள், விவசாயத்திற்காக வாங்கிய கடனை கட்ட இயலாத நிலையில் அந்தக் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி அளித்திருந்த சென்ட்ரல் வங்கி சங்கங்களை கடுமையாக நெருக்கத் தொடங்கியது. அப்போது திக்கற்று இருந்த 34 கள்ளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மாகாண அரசே நிதி கொடுத்து சங்கங்களின் கடனை அடைத்து, அடுத்த கட்ட விவசாயத்திற்கும் கடனை அளித்தது.
இப்படி கள்ளர்கள் வாழ்வில் ஒரு புரட்சியை உருவாக்கியது நீதிக்கட்சி அரசுதானே ஒழிய முத்துராமலிங்கத் தேவர் அல்ல. இந்த மாற்றங்கள் நடக்கும்போது தேவர் பொது வாழ்வுக்கே வரவில்லை.
அதன் பிறகு 1934 ஆம் ஆண்டு ஆப்ப நாட்டு கொண்டையங்கோட்டை மறவர்களை குற்றப்பழங்குடி சட்டப் பட்டியலிலிருந்து மீட்டதும் நீதிக்கட்சி அரசுதான். வரதராஜூலு நாயுடு தலைமையில் முத்துராமலிங்கத் தேவரும் இடம் பெற்றிருந்த குழு இந்த நீதிக்கட்சி அரசிடம்தான் மனு அளித்தது. வெறும் மனு அளித்த உடனேயே அப்பிரிவு மக்களை அப்பட்டியலில் இருந்து நீக்கியது. பெரியாரின் நண்பரான பெரியாரின் ஆதரவு பெற்ற ஆட்சியின் தலைவரான பொப்பிலி அரசர் என்ற இராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையிலான நீதிக்கட்சி அரசுதான்.
இறுதியாக 1947 இல் ஏப்ரல் மாதம் சென்னை மாகாண உள்துறை அமைச்சராக இருந்த பெரியாரின் தொண்டரும், சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் பி. சுப்பராயன் தான் இந்தக் கொடிய சட்டத்தை ஒழிக்கும் சட்ட முன் வடிவை ஆளுநரிடம் சமர்பித்து அவரது ஒப்புதலுக்குப் பின் 1947 ஜூன் 5 ஆம் நாளில் இச்சட்டத்தை ஒழித்தார்.
தாழ்த்தப்பட்டோர், பட்டியலினத்தவர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், என்கிற நான்கு பிரிவுகளிலும் இந்த 68 சாதிகள் உள்ளடங்கி இருந்ததால் 1979இல் ஆட்சியிலிருந்த எம்ஜிஆர் சீர்மரபினரை சாதி அடிப்படையில் இல்லாமல், தனியாக(சீர்மரபினர்) வகுப்பு அடிப்படையில் மாற்ற அரசாணை பிறப்பித்தார்.இந்தியா முழுக்க சீர்மரபினர் சாதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட போது தமிழகத்தில் மட்டும் சீர்மரபினர் வகுப்பாக அடையாளப்படுத்தியதால் மத்திய அரசின் வேலை வாய்ப்பு, கல்விக்கு முன்னுரிமை போன்ற சலுகைகள் தமிழக சீர்மரபினருக்கு கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டும் உண்டு.
வரலாறு கதைகளாலும்,பொய்களாலும் கட்டமைக்கப்படுவதில்லை., எதை வேண்டுமானாலும் பேசு, சாதி, குடி என மீண்டும் நீ ஆரம்பித்தால், நிறைய வரலாறு பேச வேண்டி வரும்.
1899 சிவகாசி கலவரம் எந்த சமூகங்களுக்குள் நிகழ்ந்தது. முதுகுளத்தூர் கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் வேட்பாளர் சமூகம் எது, அந்த கலவரம் எப்படி திசைமாறியது... அப்போது யாருடைய ஆட்சி, அவர் என்ன சமூகம்.... 1952,57 என பார்வர்ட் ப்ளாக் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற முதுகுளத்தூரில், 1967 ராஜாஜியின் சுதந்திரா கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது எப்படி. ஆதித்தனாரை அமைச்சராக்காமல் சபாநாயகராக்க காரணமானவர் யார்...?
என நிறைய வரலாறுகள் எங்களுக்கும் தெரியும்... சாதிய பெரும்பான்மைவாதத்தை வைத்து பிழைக்கும் நாம் தமிழர் கட்சிக்கு, சமூகநீதி என்பது கசக்கும்.
- சாய்.S.சுரேஷ் குமார்
+91 - 8344 00 2855
Comments
Post a Comment