Ponniyin Selvan

 #பொன்னியின்_செல்வன்

#யாத்திசை

இரண்டுமே சிறந்த திரைப்படங்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அறிமுக இயக்குநரும் சரி, அறிமுகம் அவசியப்படாத இயக்குநரும் சரி, அவரவர் எண்ணங்களை திரையில் அழகாக காட்சிபடுத்தியதற்கு பாராட்டுக்கள்...


பொன்னியின் செல்வனில் மந்தாகிணி(ஊமை ராணி), 


முதலில் சுந்தரசோழனை காப்பாற்றி அதன்மூலம் இருவரும் காதல் கொள்ள, பிரிவு ஏற்பட வீரபாண்டியன் அவளை அடைந்து, சுந்தரசோழனை காதலித்தற்காக மந்தாகிணியை கொடுமை செய்கிறான். 


கர்ப்பவதியான மந்தாகிணி, சுந்தரசோழனை நாடி சோழ சேதம் வருகிறாள். அதற்குள் சுந்தரசோழன் வானவன்மாதேவி திருமணம் நிகழ்ந்திருக்கிறது. 


கர்ப்பவதியான மந்தாகிணியை செம்பியன் மாதேவி துரத்திவிட, ஆற்றங்கரையில் குழந்தையை பெற்று அதை கோவில் கைங்கர்யம் செய்யப்பவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிடுகிறாள்.  


ஆனால் மந்தாகிணி, சுந்தர சோழனையும், அருள்மொழியையும் தொடர்ந்து ஆபத்துகள் வரும்போது காப்பாற்றுகிறாள்.


மந்தாகிணிக்கும் வீரபாண்டியனுக்கும் பிறந்து,சோழதேச கோவில் கைங்கர்யம் செய்பவளிடம் வளர்பவள் நந்தினி. 


நந்தினி மீது சுந்தரசோழனின் மூத்த மகன், ஆதித்தகரிகாலன் காதல்கொள்ள, அதனை அறிந்து நந்தினி ஆதித்த கரிகாலனுடன் பேசுவதை தடுக்க முயற்சிக்கிறாள் குந்தவை. 


அதையும் மீறி ஆதித்த கரிகாலன் இவள்தான் என் பட்டத்து ராணி என பகிரங்கபடுத்தியதும், சோழதேசத்தை விட்டு விரட்டப்படுகிறாள்...( யாரால் விரட்டப்பட்டாள் என்பது தெரியவில்லை ). 


விரட்டப்பட்ட நந்தினி எப்படி பாண்டிய தேசம் சென்றாள்.? வீரபாண்டியனுடன் எப்படி அறிமுகமானாள்.? வீரபாண்டியனுக்கு இவள்தான் தன் மகள் என எப்படி அடையாளம் தெரிந்தது.? என எதற்கும் பதிலில்லை...


தன் காதலி எங்கு சென்றாள் என தெரியாமல், வெறிபிடித்த ஆதித்த கரிகாலன், திருமணமே செய்யாமல் பல தேசங்களை கைப்பற்றுகிறான்.


வீரபாண்டியனையும் வீழ்த்துகிறான், உயிருக்கு பயந்த வீரபாண்டியனுக்கு, காயம் ஆற்றும் சூழலில் நந்தினியை காண்கிறான் ஆதித்த கரிகாலன். 


அந்த சூழலில் வளர்ப்பு பெற்றோர் மூலம் வளர்ந்த பெண்ணுக்கு எதிரி தகப்பனாயிருப்பான் என்ற எண்ணம் வருமா...? அல்லது வேறு எண்ணம் வருமா..? வீரபாண்டியனின் தலை கொய்கிறான்.


அப்படி கொலையுண்ட வீரபாண்டியனின் கொலைக்கு வஞ்சம் தீர்க்க நந்தினி முடிவெடுத்து, ஆதித்த கரிகாலன் தாத்தா என்று அழைத்த பெரிய பழுவேட்டரையரின்  ஆசைநாயகியாகிறாள். பழுவூரின் இளையராணியாகிறாள்.


இந்த செயல் செய்தவளை, எந்த சூழலில் வீரபாண்டியனின் மகளாக ஆதித்த கரிகாலன் கருதியிருக்க முடியும்...? 


ஆதித்த கரிகாலனை பழிதீர்க்க, நந்தினி பெரிய பழுவேட்டரையர், சம்புவராயன் மகன், வந்தியத்தேவன், பார்த்திபேந்திர பல்லவன், ஆகியோரை மயக்கி மற்றும் பாண்டிய ஆபத்துதவிகள் மூலம் சோழ தேசத்தை பழிதீர்க்க முயன்றாள். 


அதில்தான் நந்தினி மற்றும் சோழ துரோகிகள் மற்றும் பாண்டிய ஆபத்துதவிகள் மூலம் தான் ஆதித்த கரிகாலன் இறந்தான் என நிருபிக்க முயன்ற கிருஷ்ணமூர்த்தி (கல்கி) என்ற வைதீக பார்பனனின் கதைகளுள் பொன்னியின் செல்வன் என்ற புதினமும் ஒன்று. அந்த புணைவுகளோடு மணிரத்னம் தன் சொந்த புணைவுகளையும் ஒருங்கிணைத்து திரையில் தந்திருக்கிறார்.


நந்தினி பேரழகி என்ற அடையாளத்தை கடந்து பார்த்தால், ஆண்களை மயக்கி தன் தேவைக்கு பயன்படுத்துபவள் என்ற கோர பிம்பத்தை, அழகி என்ற வார்த்தை மூலம் மடைமாற்றம் செய்திருக்கிறார்கள்...


மனு ஸ்மிருதி அத்தியாயம் 2 ல், ஸ்லோகம் 213 மற்றும் 214ல்.,


தங்கள் அலங்காரத்தில் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.


புலன்களை அடக்கியவனாயினும், அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.


மனு ஸ்மிருதி, அத்தியாயம் 9ல், ஸ்லோகம் 14,15,17

வயதைப்பற்றிக் கவலைப்படாமல் ஆணாக இருந்தால் போதும்,உடலுறவு கொள்ளத் தயங்க மாட்டார்கள்.


கணவனுக்குத் தீங்கிழைப்பவர்கள்.


பெண்ணின் குணம் : படுக்கை,ஆதனம்,அழகு செய்தல்,காமம்,சினம்,பொய்,துரோக எண்ணம் போன்றவைகளாகும்.


(இந்த அத்தனையும் நந்தினி என்ற ஒற்றை பெயரோடு பாருங்கள்.)


என்ற பார்பன ஈன புத்தியை கல்கி தன் கதைகளில் எழுத, மணிரத்னம் திரையில் காட்டியிருக்கிறார்... 


மந்தாகிணி, நந்தினி, பூங்குழலி, என ஒவ்வொருவரையும், அடையாளப்படுத்துகையில் இந்த எண்ணம், குடியான பெண்கள் அரசியாக எந்த செயலையும் செய்வர் என்ற பெண்களை இழிவுபடுத்தும் பார்பனத்தின் சூழ்ச்சி தெரிகிறது.


பெரிய வேளாளரின் அண்ணன் மகள் வானதி, அருள்மொழியை மணந்தாலும் அந்தரப்புரத்தில் இருப்பேன், பட்டத்துராணியாக மாட்டேன் என்பதும், 


பூகட்டும் சேந்தனின் முறைப்பெண் படகோட்டி பூங்குழலி, உன்னை மணந்து, உன்னோடு பூக்கட்டவா... எனக்கு ராஜ்ஜியம் வேண்டும், ராஜவாழ்க்கை வேண்டும் என்பதும், அதற்கு சேந்தன் அதில் அமைதி இருக்காது, நான் உனக்கு அமைதியான வாழ்க்கையை தருவேன் என்பதும், அதற்கு பூங்குழலி அதன் பெயர் மயான அமைதி என்பதும், பார்பன ஈன வக்கிர புத்திகொண்ட மணிரத்னம், ஜெயமோகனின் வெளிப்பாடுகள்...


அது சரி, பொன்னியின் செல்வன், ராஜராஜசோழன், என ஒட்டுமொத்த பார்பன கூட்டமும், அவன் ஆட்சிகாலத்தை பொற்காலம் என வரலாறு முழுக்க எழுதியிருக்கிறது ஏன்...? 


ஆதித்த சோழன், பராந்தக சோழன்,கண்டராதித்த சோழன்,அரிஞ்சய சோழன், சுந்தரசோழன், ஆதித்த சோழன், மதுராந்தக சோழன், வரிசையில் அருள்மொழி சோழன் என்பவன்,மட்டும் ஆரியவைதீக பார்பனிய #வர்மன் ஆனது எப்படி...? 


இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டில்,

பாண்டியன் தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும்,  


கல்வெட்டில் கொன்றோர் யார் என்பதை சொல்வதில் சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்,பரமேசுவரனான இருமுடிச்சோழபிரமாதிராஜன்,மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்பவர்கள்.அவர்கள் நால்வரும் உடன்பிறந்தோர் என்பதும் அக்கல்வெட்டில் அறியமுடிகிறது.


அவர்களுள் இருவர்,பஞ்சவன் பிரமாதிராஜன் இருமுடி சோழ பிரமாதிராஜன் என்ற உயர் பட்டங்களை பெற்றிருப்பதால் அவர்கள் அரசாங்க பதவியில் இருந்த அந்தணர் என அறியப்படுகிறது.


இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. 


அவர்களை கைது செய்த இடம் பார்பனச்சேரி என்பதுடன், அவர்கள் பார்ப்பனர்கள், சோழ தேச வேளீர் நிலங்களை வைத்திருந்தவர்கள் என்பதும், அந்த சொத்தை பறிமுதல் செய்து விற்பதுதான் தண்டனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்மூலமும் மனுஸ்மிருதி எனும் பார்பன சதி மூலம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பார்ப்பனர்கள் இன்று பொன்னியின் செல்வனில் பாண்டிய ஆபத்துதவிகள் என புதுப்பெயர் பெற்றிருக்கிறார்கள்.


ஒரு பிராமணனைக் கொல்லுவது  உலகத்திலேயே மிகக் கொடிய குற்றம். ஆதலால் ஒரு அரசன் பிராமணனைக் கொல்ல மனதாலும் நினைக்கக் கூடாது. (விதி 381-_8)


பிராமணனை அரசன் ஒரு போதும் கொல்லக் கூடாது. பிராமணனின் உடலுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காமல் அவன் சொத்துக் களைப் பறித்துக் கொண்டு நாடு கடத்தவேண்டும் விதி ( 380-_8.)


இதுவே பெரிய பதிவாகிவிட்டது, அடுத்த பதிவில் இன்னும் கூடுதல் தரவுகளோடு யாத்திசையை பற்றியும் பார்க்கலாம்...


                                   - சாய்.S.சுரேஷ் குமார்

                                        +91 - 8344 00 2855



Comments

Popular posts from this blog

அரசியல்

இதயரணங்கள்

புதிர்