AIADMK
#துரோக_வரலாறு...
அஇஅதிமுக வரலாறும், துரோகத்தின் வரலாறும், வேறு வேறு இல்லை...
1936களில் சதிலீலாவதி முதல் நடிகராக இருந்தும், 1947ல் கலைஞரின் வசனத்தில் வெளிவந்த ராஜகுமாரி தான் ம.கோ.ரா(MGR) யார் என்ற அடையாளம் தந்தது.
1940களின் பிற்பகுதி தொடங்கி காமராஜர் முதல்வராகும்(1954) வரை, அதாவது சனாதன சக்திகள் காங்கிரஸ் தலைமையில் இருந்தவரை காங்கிரஸில் நீடீத்த ம.கோ.ரா(MGR), காமராஜர் தலைமை ஏற்றதும் காங்கிரஸிலிருந்து விடுவித்துக்கொண்டார்.
கருணாநிதியின் நட்பால்தான் திமுகவில் இணைந்தார், அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தலைவராக்கி ஏற்று திமுக வந்தார் என்ற வார்த்தை ஜாலங்களை மற்ற திமுகவினர் நம்பலாம்.
ஏன் M. K. Stalin பெரியப்பா என அழைக்கலாம். அதற்காக திராவிட இயக்க கொள்கைகளை ஏற்றுக்கொண்டவராக ஏற்கமுடியாது,
மகோரா (MGR) வின் திமுக வருகை, முதலாளித்துவ, சனாதன சக்திகளும்,
1954 - 1967வரை காமராஜரை வீழ்த்த நினைத்த ஒரு பெருங்கூட்டத்தின் கனவை, நனவாக்க,
அன்றைய சூழலில் தேசியத்துக்கு எதிராக திமுக தலைவர்கள் தங்கள் கொள்கைகளை நாடகங்கள் வடிவில், வீதிகள் தோறும் கொண்டு மக்களிடம் தேசியத்தால் ஏமாற்றப்படுவதை சேர்த்துக்கொண்டிருந்தனர். அதை பயன்படுத்தி ஆதாயம் அடைய ஒரு ஏவலாளியாகத்தான் ம.கோ.ரா(MGR) திமுக வந்தார்.
ராஜகுமாரி, அபிமன்யு, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி,என 1950 வரை கலைஞரின் வசனங்களால் தமிழக திரையுலகில் தனது இடத்தை உறுதி செய்த ம.கோ.ரா, அதன்பிறகு திமுகவில் இணைந்து, கலைஞரோடு மற்ற திமுக தலைவர்களும் கொள்கை சார்ந்த திரைப்படங்களில் ம.கோ.ரா(MGR)வை பயன்படுத்த தொடங்கினர்.
நாம், புதுமைப்பித்தன், மலைகள்ளன், அரசிளங்குமரி, காஞ்சிதலைவன் என கலைஞரின் கதை,வசனங்களும்,
அண்ணாவின் தாய் மகளுக்கு கட்டிய தாலி, நல்லவன் வாழ்வான்,
கண்ணதாசனின் மதுரைவீரன், மகாதேவி, நாடோடி மன்னன்,ராஜா தேசிங்கு,மன்னாதி மன்னன்,
இப்படியான திரைப்படங்கள் மூலம் ம.கோ.ரா(MGR)வை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவை திமுக தலைவர்களின் கருத்தியல்கள்...
ஆனால் மிகச்சரியாக 1955ல், கோவையில் உடற்பயிற்சிகூடம் நடத்திய இராமநாதபுர சின்னப்ப தேவர், தேவர் பிலிம்ஸ் தொடங்கி முதல் படமே தாய்க்குப்பின் தாரம், மகோரா(MGR)வுடன் தான்.
தாய் சொல்லைத்தட்டாதே, தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன்,தர்மம் தலைகாக்கும், நீதிக்கு பின் பாசம்,வேட்டைக்காரன், தொழிலாளி, கன்னித்தாய், முகராசி,தாய்க்கு தலைமகன்,விவசாயி,தேர் திருவிழா, காதல் வாகனம், நல்ல நேரம், என 1972 வரை தொடர்ந்து ம.கோ.ரா(MGR) படங்களை கொடுத்து,வந்த தேவர் பிலிம்ஸ்,
திமுகவை விட்டு வெளியேறிய பிறகு, தனிக்கட்சி தொடங்கிய பிறகு, அதைவிட்டுவிட்டது.
(ஜானகியை அழைத்துவந்த பின், ஜெயலலிதாவுடன் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்தவர் சின்னப்ப தேவர் என்று கூறப்பட்டதும் உண்டு.)
ம.கோ.ரா(MGR) முதலாளி என அழைத்த இருவர், சின்னப்பதேவர், கோவை செழியன்.
கோவை செழியனும், சுமைதாங்கி, குமரி கோட்டம்,உழைக்கும் கரங்கள் என தன் பங்கிற்கு திரைபடங்களை கொடுத்து,1962 - 1976 வரை ம.கோ.ரா (MGR)வை மக்களிடம் கொண்டு சேர்க்க தவறியதில்லை.
இந்த இருவரின் சமூகங்களும் சமூகநீதியை ஏற்றுக்கொள்ளாது.
ஆனால் அஇஅதிமுகவை உறுதியாக ஆதரிக்கும் சமூகங்கள்.
பெரியாருடன் முரண்பட்டதால்,1954 - 67 வரை காமராஜரை வீழ்த்த திமுகவை பயன்படுத்த எண்ணிய, சனாதன, முதலாளித்துவ, சாதியவாதிகளின் ஆதரவை பெற்றவர்தான் ம.கோ.ரா.
1967ல் அண்ணா அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சி நிறுவனர் ஆதித்தனாரை அமைச்சராக விடாமல் தடுத்தது வரை சாதியவாதிகளின் சதிசெயலுக்கு துணைசெய்வதுபோல், பதவியேற்பதற்கும் முன்,
பெரியாரை சந்தித்து அனைத்திற்கும் சம்பட்டி அடி கொடுத்தார் அண்ணா.
அண்ணா மறைய, நாவலர் முதல்வராக தடையாய் இருந்து,நண்பர் என்று கலைஞரை முதல்வராக்கி, முதலாளித்துவ அடிமையாக்க எண்ணினார்.
காரணம் அன்றைய திமுகவில் இருந்த பெரும் பணக்காரர்களில் கலைஞர் தான் முதன்மையானவர்.
அதனால் முதலாளித்துவத்திற்கு வளைந்து கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
ஆனால் அதுவே வினையாகி போனது.
1967 வெற்றிக்கு மகோரா(MGR) காரணமென்று கூறியவர்களும் உண்டு, ராஜாஜி காரணமென கூறியவர்களும் உண்டு.
ஆனால் 1971 தேர்தலில் யாரும் பங்கு கேட்காத மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது. அமைச்சரவையில் இடம் எதிர்பார்த்த ம.கோ.ரா(MGR) ஏமாற்றமடைந்தார். நடிப்பை கைவிட்டால் மட்டுமே அமைச்சரவையில் இடம் என்ற சூழலில், ஆதித்தனார் அமைச்சரானார்.அதன்பிறகே முரண் உருவானது.
முந்தைய அமைச்சரவையில் இடம்பிடித்த கணியூர் மதியழகன் சபாநாயகரானார். முதலாளித்துவ,சாதிய சக்திகளால் காமராஜரை வீழ்த்திய சீனிவாசன் இப்போது துணை சபாநாயகர்.
சபாநாயகரும், துணை சபாநாயகரும், ம.கோ.ராவுக்கு ஆதரவாக,ஆட்சிக்கு அத்தனை வகையிலும் இடையூறு ஏற்படுத்தினார்கள்.
1971ல் தொடங்கிய முரண், இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய ஒன்றிய அரசு, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி வழங்கும் என்ற சூழலில்,
நிதி நெருக்கடியில் இருந்த தமிழகத்துக்கு நிதி கேட்க, மதுவிலக்கு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மாநிலங்களுக்கு நிதியளிக்க முடியாது என மறுத்துவிட,மதுவிலக்கை நீக்க முடிவுசெய்யப்பட்டது. அதை மக்களுக்கு விளக்க குழு அமைக்கப்பட்டது. மதுவிலக்க நீக்கத்திற்கான காரணங்களை பற்றி விளக்கவும், மதுவின் தீமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் குழுவின் தலைவராகவும் ம.கோ.ரா(MGR) இருந்தார்.
ஆனாலும் திமுகவை விட்டு பிரிய கூறிய காரணங்களில் மதுவிலக்கு தளர்வையும் காரணங்காட்டினார். கருணாநிதி, 1973-ம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தியதும்,
என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ (2.12.1979 'அண்ணா’ நாளிதழ்) எனச் சொன்ன அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இரண்டு ஆண்டுகள்கூட அதில் உறுதியாக இருக்க முடியவில்லை என்பதும்,
1.5.1981-ல் தமிழ்நாட்டில் சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது என்பதும்,1983 ஜூலையில் TASMAC நிறுவனத்தைத் தொடங்கியதும்,
தனிக்கதை.
1973ல் கலைஞரின் மகன், முத்து பிள்ளையோ பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால் 37 வருட திரை அனுபவம் பெற்ற ம.கோ.ரா(MGR) வுக்கு எதிராகத்தான் முத்துவை கலைஞர் களம் இறக்கினார் என நம்பவைத்து முட்டாளாக்கினார்.
திமுகவுக்கு எதிரான ஊழல் பட்டியல்கள், வழக்கறிஞர் #சேலம்_கண்ணன் மூலம் தயாரித்த ம.கோ.ரா(MGR) , அவற்றை 1972 -76 வரை ஆளுநர் மாளிகை முதல் குடியரசு தலைவர் வரை அதனடிப்படையில் சர்க்காரியா விசாரணைக்குழு அமைக்கப்பட்ட போது,
விசாரணையில் தனக்கு ஊழல் பற்றி எதுவும் தெரியாது,வழக்கறிஞர் கண்ணன் கூறியதையே புகாராக அளித்தேன் என பின்வாங்கியதும், ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை என விசாரணைக்குழு அறிக்கை அளித்த பிறகும்,
1975ல் நெருக்கடிநிலையை அமல்படுத்திய இந்திரா காந்தியை, காமராஜர் தொடங்கி திமுக வரை அனைவரும் எதிர்த்த போது, நெருக்கடி நிலைக்கு ஆதரவாய், அஇஅதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியவர் ம.கோ.ரா(MGR).
நெருக்கடி நிலையை எதிர்த்தற்காக கலைக்கப்பட்ட திமுக ஆட்சியை, முந்தைய ஊழல் புகார்களை வைத்து, ஊழலுக்காகத்தான் கலைக்கப்பட்டது என நம்ப வைத்தவர்கள், ம.கோ.ராவும், முதலாளித்துவ ஊடகங்களும்...
இப்படி ஏகப்பட்ட துரோகங்களால் உருவான இயக்கம்தான் அஇஅதிமுக. அண்ணாவுக்கும்,அகில இந்தியத்திற்கும் எப்போது உடன்பாடே இல்லாத சூழலில் அது எப்படி அண்ணாவை தலைமையாக கொண்ட இயக்கமாக இருக்கமுடியும்.
முதலாளித்துவ, சனாதன, சாதியவாதிகளின் அடிமை இயக்கமாக வேண்டுமானால் இருக்கலாம்.
குற்றப்பரம்பரை என அடையாளம் பெற்றவர்களுக்கு, பட்டியலினத்தவர்,பிற்படுத்தப்பட்டோர் என்ற அடையாளங்களை வழங்காமல் சீர்மரபினர் என தனி அடையாளப்படுத்தியவரும் ம.கோ.ரா(MGR) தான்.
எப்படி சனாதனவாதிகள் குறிப்பிட்ட சமூகங்களை பட்டியல்படுத்தி ஒடுக்கினார்களோ, அதேபோல் மீண்டும் சனாதனவாதிகள் கையில் அதிகாரம் கிடைக்கும் போது, குற்றப்பரம்பரை சட்டம் நடைமுறைக்கு வந்தால், அவர்களை ஒடுக்க இந்த சீர்மரபினர் பட்டியல் பயன்படும்.
எப்படி ஒரு சனாதன கைக்கூலியாக செயல்பட்டிருக்கிறார் என்பதை புரியாத சமூகங்கள் இன்னும் ஆதரித்து கொண்டிருக்கின்றன.
அடுத்து அவருக்கு(MGR) நடந்த துரோகம் தெரியுமா, எந்த #சேலம்_கண்ணன் திமுகவுக்கு எதிராக ஊழல் பட்டியல் தயாரித்தாரோ,
அதே #சேலம்_கண்ணனிடம் தான் 1984ல் ம.கோ.ரா(MGR) உடல்நலம் சரியில்லாமல் வெளிநாட்டில் சிகிட்சை பெற்ற சூழலில், ஆட்சியையும், கட்சியையும் தன்னிடம் ஒப்படைக்க துணைவேண்டி ஜெயலலிதா, அன்றைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு கடிதம் கொடுத்தனுப்பினார்.
அந்த சேலம் கண்ணனின் உதவிமூலம் அஇஅதிமுகவிற்கு வந்தவர்தான் Edappadi K. Palaniswami.
1987ல் ம.கோ.ரா(MGR) மறைய, அவர் மனைவி என்ற அடிப்படையில் ஜானகி ஆட்சி அமைக்க, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைத்த ஜெயலலிதா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, ஆட்சி கவிழ்ந்தது,
ஜெ அணி, ஜா அணி, நால்வர் அணி என பிரிந்து தேர்தலை சந்திக்க, ஜெ அணி வெற்றி பெற்று கட்சியை கைப்பற்றியது.
1989 அன்றைய தேர்தலில் ஜெ அணி சார்பில் போட்டியிட்டு வென்றவர் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் MGR மனைவி ஜானகியுடன் துணைநின்றவர்களில், O Panneerselvam-ம் ஒருவர்.
இதில் யார் துரோகி, MGR மனைவியுடன் நின்றவரா...? MGRஐ வீழ்த்த நினைத்த ஜெயலலிதாவுடன் இருந்தவர்களா...?
அதேபோலான நிலைமை 2016 தேர்தல் வெற்றிக்கு பிறகுவருகிறது.
ஜெயலலிதா மறைய பன்னீர்செல்வம் தற்கால முதல்வராகிறார். அன்று சசிகலாவை பொதுசெயலாளர் பதவி ஏற்க முதலில் தீர்மானம் போட்டவர் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
அதன்பிறகு, மற்ற மாவட்டங்களிலும் தீர்மானம் போட அஇஅதிமுக பொதுசெயலாளராகிறார் சசிகலா. துணை பொதுசெயலாளராகிறார் தினகரன்.
சசிகலா முதல்வராக பதவியேற்க மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சம்மதிக்க, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்குகிறார்.11 சட்டமன்ற உறுப்பினர்களை தவிர மற்றவர்கள் ஆதரிக்க,
பதவியேற்பு நடத்தவேண்டிய பொறுப்பு ஆளுநர், ஊரைவிட்டு வெளியேற, சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு வர, சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக பதவியேற்க சொல்லி, அதற்கு துணையாய் தினகரனை நியமிக்கிறார்.
தினகரன் தலைமையில் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து பதவியேற்பு நடக்கிறது. எடப்பாடி முதல்வராகிறார்.
அடுத்து R.K.நகர் இடைதேர்தல், தினகரன் அதிமுக வேட்பாளராக களமிறங்க, பன்னீர்செல்வம் தரப்பு அதிமுகவை உரிமை கோரியது. சின்னம் முடக்கப்பட தேர்தல் நெருங்க,
தலைமை செயலகத்தில் வருமான வரித்துறை சோதனை, அமைச்சர் வீடுகளில் சோதனை, பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தம்.
பன்னீர்செல்வம் தரப்பு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர, அவர்களை தகுதிநீக்கம் செய்ய கொறடா, உத்தரவிட,
டெல்லி தலைமை இருதரப்பையும் அழைக்க, அதுவரை இருதுருவமாக இருந்தவர்கள் ஒன்றாக, நிதி அமைச்சர் பதவியும், கழக ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்க,
21 உறுப்பினர்கள் இதனை எதிர்க்க, 21 உறுப்பினர்களையும் தகுதிநீக்கம் செய்தது அதிமுக. வழக்கும் நடந்தது. முதலில் தகுதி நீக்கப்பட்ட 11 பேர் மீதான வழக்கு பற்றி எதுவும் பதிலில்லாமல், இவர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பு வந்தது.
R.K நகர் இடைதேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு அஇஅதிமுகவை ஆளுங்கட்சியை வைப்புத்தொகை இழக்கச்செய்தார் தினகரன்.
மற்ற இடைதேர்தல்களிலும் நூலிழையில் ஆட்சியை காப்பாற்றியது அஇஅதிமுக.
அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வி, ஒருவரை மாற்றி, ஒருவரை குற்றம்சொல்லி தப்பித்துக்கொண்டார்கள்.
முதல்வர் வேட்பாளர் தொடங்கி அத்தனையும் சலசலக்க, சாதி வாக்குகளால் சாதித்து கொண்டது ஒருதரப்பு. அதையே காரணங்காட்டி கட்சியையும் அபகரித்து கொண்டது.
துரோகங்கள் தொடர்கதைதான், நீ ஒருவனுக்கு செய்தால், உன்னோடிருப்பவன் உனக்கு செய்வான்...
- சாய்.S.சுரேஷ் குமார்
+91 - 8344 00 2855
Comments
Post a Comment